அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனினும் பாத்திமாவின் காதல் மறுப்பினால் வாழ்நாள் முழுவதும் தேவதாஸ் கோலம் பூண்டுகொள்ள விரும்பாத சுரேஷ் யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்யத் துணிந்தான்

ரி­யனின் செங்­க­திர்கள் மெல்ல மெல்ல மேகத்­தி­ரை­க­ளுக்குள் ஒளிந்­து­கொள்ள, இருள் எங்கும் சூழ்ந்­து­கொண்­டது.

காலை முதல் வேலைப்­ப­ளுவால் களைத்­துப்­போன மக்கள் மெல்­லிய மழைத்  தூறலைக் கண்டு,   பெரும் மழைக்குள் சிக்­கு­வ­தற்கு முன் தத்­த­மது வீடு­களை நோக்கி விரைந்து கொண்­டி­ருந்த நேர­மது. சரி­யாக மே மாதம் 7ஆம் திகதி இரவு 7 மணி­யி­ருக்கும்.

வத்­தளை, ஹெந்­தலை சந்­தி­யி­லுள்ள பிர­பல புட­வைக்­க­டைக்குள் தனது காத­லி­யான (19 வயது) பாத்­தி­மாவைச் சந்­திக்கும் முக­மாக வழமை போல் நுழை­கின்றான் சுரேஷ் (23வயது) (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது).

“காத­லி­யுடன் கதைப்­ப­தற்­காகத் தான் வரு­கின்றான் என்று அங்கு பணி­பு­ரி­ப­வர்கள் பலரும் எண்ணியவாறு, சிறிய புன்­சி­ரிப்­புடன் சுரேஷை வர­வேற்­றார்கள்.

எனினும், அவர்கள் அனைவரும் சற்றும் எதிர்­பார்க்­காத ஒரு காரி­யத்தை சில மணி நிமி­டங்­க­ளுக்குள் செய்து முடித்தான் சுரேஷ்.

surshநேராகப் பாத்­திமா இருக்கும் இடத்தை நோக்கிச் சென்­றவன், சுற்றி இருப்­ப­வர்­களை பற்றி சற்றும் சிந்திக்­காது தனது காற்­சட்டைப் பையினுள் மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து தனது ஆத்­திரம் தீரும் வரை பாத்­தி­மாவின் நெஞ்சுப் பகு­தியில் குத்­தினான்.

சுமார் 8 தட­வை­க­ளுக்கு மேல் சுரேஷின்  கையி­லி­ருந்த கத்தி பாத்­தி­மாவின் நெஞ்சுப் பகு­தியை பதம் பார்க்க, “நீரின்றித் தவிக்கும் மீனைப்” போல் வலியால் துடி­து­டித்தாள். எனினும், அதன் பின்னும் சுரேஷின் ஆத்­திரம் தீர­வில்லை.

பாத்­திமா நிலத்தில் வீழ்ந்து உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்த நிலை­யிலும் கூட, எவ்­வித ஈவிரக்க­முமின்றி பாத்­தி­மாவின் உடலின் பல இடங்­களில் ஆழ­மான காயங்­களை ஏற்­ப­டுத்­தினான்.

இத­னைத்­தொ­டர்ந்து, பாத்­தி­மாவைத் தாக்­கிய அதே கத்­தியை எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்­காக கழுத்தை அறுத்­துக்­கொண்டு. வலி தாங்க முடி­யாமல் நிலத்தில் வீழ்ந்து துடித்தான்.

உடனே புட­வைக்­க­டையில் பணி­பு­ரியும் பெண்கள் பலத்த சத்­தத்­துடன் சத்­த­மிட, வீதிப் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­பட்­டி­ருந்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சம்­பவ இடத்தை வந்­த­டைந்­தனர்.

அதன்பின் அங்­கி­ருந்­த­வர்­களின் உத­வி­யுடன் இரு­வ­ரையும் வத்­தளைப் பகு­தி­யி­லுள்ள தனியார் வைத்தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முற்­பட்­டனர்.

எனினும், துர­திஷ்­ட­வ­ச­மாக கொண்டு செல்லும் வழி­யி­லேயே பாத்­தி­மாவின் உயிர் அவளை விட்டுப் பிரிந்­தது.

மேலும் தனியார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சுரேஷ் ஆபத்­தான நிலையில் றாகமை போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்டான்.

இச்­சம்­ப­வத்தை தொடர்ந்து வத்­தளை பொலிஸார் தமது ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களை முன்னெடுத்தனர்.

அதன்­படி இது­வரை (2015.05.14) பொலிஸ் விசா­ர­ணை­களின் மூலம் வெளியாகியுள்ள தக­வல்­களின் அடிப்­ப­டையில் கிடைத்த விவ­ரங்­களை தரு­கிறோம்.

இயற்கை எழில் கொஞ்சும் மலை­ய­கத்தின் நுவ­ரெ­லியா லபுக்­கலை தோட்­டத்தில் சாதா­ரண தோட்டத் தொழி­லா­ளர்­க­ளான பெற்­றோ­ருக்கு கடைசி மக­னானப் பிறந்­தவன் தான் சுரேஷ்.

தாய், தந்தை, இரு சகோ­த­ரர்கள், ஒரு சகோ­தரி என்று இவ­னு­டைய குடும்­பத்தில் மகிழ்ச்­சிக்கு குறை­வி­ருக்­க­வில்லை.

கஷ்­டப்­பட்­டாலும் வாழ்க்கை சக்­கரம் நிம்­ம­தி­யா­கவும், மகிழ்ச்­சி­யா­கவும் கழிந்­தது. அதுவும் குடும்­பத்தின் கடைக் குட்டி என்­பதால் அனை­வ­ருமே சுரேஷ் மீது அள­வுக்கு மிஞ்­சிய பாசத்தைப் பொழிந்­தனர்.

இந்­நி­லையில், லபுக்­கலை தோட்ட பாட­சா­லையில் கல்­வி­பொ­துத்­த­ரா­தர சாதா­ரண தரம் வரை கல்வி கற்­றவன் உயர்­த­ரத்தை தொடரும் அள­வுக்கு பெறு­பே­றுகள் போதா­மை­யினால் தொழி­லுக்கு செல்ல ஆயத்­த­மானான்.

அதன்­படி நுவ­ரெ­லியா பகு­தி­யி­லுள்ள பல புடவை கடை­களில் விற்­ப­னை­யா­ள­ராக பணி­பு­ரிந்த போதும் எது­வுமே அவ­னுக்கு திருப்­தி­ய­ளிக்­க­வில்லை.

எனவே, வழ­மை­யாக  எல்லா மலை­யக  இளை­ஞர்­க­ளையும் போன்று கொழும்பு பகு­தியில் தனக்கு ஏற்ற தொழில் வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்ளும் முக­மாக வேலைக்­காக வந்து சேர்ந்தான்.

அதன்­படி நெருங்­கிய நண்பர் ஒருவர் மூலம் வத்­தளை பகு­தி­யி­லுள்ள பிர­பல புட­வைக்­க­டை­யொன்றில் விற்­ப­னை­யா­ள­ராக வேலைக்கும் சேர்ந்தான்.

கை நிறைய சம்­பளம், தங்­கு­மிடம், மூன்று வேளை உணவு, கல­க­லப்­பான நண்பர் கூட்டம் என்று அவன் பணி­பு­ரியும் இடமும் அவ­னு­டைய மன­துக்கு இத­மாக அமைந்­தன.

pathimaநாட்கள் செல்லச் செல்ல தன்­னு­டைய உழைப்­பினால் குடும்­பத்தின் பொருளா­தார நிலையை சற்று உயர்த்­தி­ய­துடன், தனது நடை, உடை பாவ­னை­களில் புதிய நவ­நா­க­ரிக தோற்­றத்­தையும் ஏற்படுத்திக்கொண்டான்.

இத­னி­டையே, தான் அதே புடவைக் கடையில் பணி­பு­ரியும் வத்­தளை  ஹூணுப்­பிட்­டிய பராக்­கி­ரம மாவத்­தையை  சேர்ந்த இஸ்­லா­மிய யுவதி பாத்­தி­மாவின் அறி­முகம் சுரே­ஷிற்கு கிடைத்­தது.

பாத்­திமா மிடுக்­கான நடை, வசீ­க­ர­மான முகம் என்று அனை­வ­ரையும் கவர்ந்­தி­ழுக்கும் பேர­ழ­கி­யா­க­வி­ருந்தாள்.

எனவே, ஆரம்­பத்தில் ‘ஹாய்” என்ற வார்த்­தையில் ஆரம்­பித்த  சுரே­ஷிற்கும் பாத்­தி­மா­வுக்கும் இடை­யி­லான உறவு நாட்கள் செல்லச் செல்ல மிக நீண்ட வார்த்­தை­களில் வளர்ந்­தது.

இருவ­ருமே இன, மத, பிர­தேச, கலா­சார வேறு­பா­டு­களை மறந்து காதல் வானில் சிற­க­டிக்க ஆரம்­பித்­தனர்.

சுரேஷ், இவ்­வு­லகில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்­கி­ஷமாய் பாத்­தி­மாவை நினைத்தான். அவளுக்­காகவும், அவ­ளு­டைய காத­லுக்­கா­கவும் எதையும் செய்யத் துணிந்­த­வ­னாக இருந்தான்.

அது­மட்­டு­மின்றி, அவன் சம்­பா­திக்கும் பணத்தில் பாதியை பாத்­தி­மாவின் சந்­தோ­ஷத்­துக்­கா­கவே செலவ­ழித்தான்.

அவ­ளுக்குப் பிடித்­ததை வாங்கிக் கொடுப்­பது, சினிமா, சுற்­றுலா தலங்கள் என்று அவ­ளுக்கு பிடித்த இடங்­க­ளுக்கு கூட்டிச் சென்று இரு­வரும் உல்­லா­ச­மாக இருப்­பது என்று நாட்கள் உருண்டோ­டின.

இவ்­வாறு மிகவும் மகிழ்ச்­சி­யாக இரு வரு­டங்கள் தொடர்ந்த காதல் உறவில் திடீ­ரென விரிசல் ஏற்­பட ஆரம்­பித்­தது.

‘நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்­தது’ போல் சுரேஷின் வாழ்வில் விதி விளையாட ஆரம்­பித்­தது. இரு­வரும் ஒரே புட­வைக்­க­டையில் பணி­பு­ரிந்­து­கொண்டு காத­லிப்­ப­தற்கு, குறித்த புடவைக்­க­டையில் எதிர்ப்­புகள் எழ ஆரம்­பித்­தன.

இதனால் பாத்­திமா குறித்த புட­வைக்­க­டை­யி­லி­ருந்து விலகி வத்­தளை, ஹெந்­தலை சந்­தி­யி­லுள்ள பிறி­தொரு புட­வைக்­க­டைக்கு வேலைக்கு சென்றாள்.

அதன்பின் இரு­வ­ருக்­கு­மிடையிலான உற­வினை வளர்க்கும் பிர­தான ஊட­க­மாக கைய­டக்கத் தொலை­பேசி மாறி­யது.

எனினும், நாட்கள் செல்லச் செல்ல வேலை செய்யும் இடம் மாறி­யது போல் பாத்­தி­மாவின் மனமும் மெல்ல மெல்ல மாறி­யது. பாத்­திமா சுரேஷின் தொலை­பேசி அழைப்­புகள், குறுந்­த­க­வல்கள் என்­ப­வற்றுக்கு அலட்­சி­யத்­துடன் பதி­ல­ளிக்க ஆரம்­பித்தாள்.

அது­மட்­டு­மின்றி, சுரேஷை சந்­திப்­ப­தையும் முடி­யு­மான அளவு தவிர்த்து வந்தாள். எனினும், அவளைக் காண வேண்டும், அவ­ளோடு மணிக்­க­ணக்கில் பேச வேண்டும் என்று சுரேஷின் மனம் தவித்­தது. இருப்பினும் பாத்­திமாவோ தொடர்ந்து மௌனம் சாதித்தாள்.

இந்­நி­லையில், தன்னை விட்டு பாத்­திமா விலகிச் செல்­வ­தற்­கான உண்­மை­யான கார­ணத்தை அறிய முற்­பட்டான் சுரேஷ். அதன்­படி பாத்­திமா தனது குடும்ப உற­வு­களைக் காரணம் காட்டி அவ­னு­டைய காதலை தட்டிக் கழி­க்கின்றாள் என்­பது தெரி­ய­வந்­தது.

சுரேஷ் இந்து மதத்தை சேர்ந்­தவன் என்­ப­தாலும், அவன் சாதா­ரண தோட்டத் தொழி­லா­ளர்­க­ளான பெற்றோரின் மகன் என்­ப­தாலும், பாத்­தி­மாவின் பெற்றோர் எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் சுரேஷ் – பாத்­திமா திரு­ம­ணத்­துக்கு சம்­மதம் தெரி­விக்­க­மாட்­டார்கள் என்ற நிலையில், பாத்­திமா தனது பெற்­றோரின் சம்­ம­தத்­துடன் கன­டாவில் வசிக்கும் உற­வுக்­கார மாப்பிள்ளையொருவரை திரு­மணம் செய்­து­கொள்­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்­தி­ருக்­கின்றாள் என்ற அதிர்ச்­சி­யூட்டும் உண்மை அவ­னுக்குத் தெரி­ய­வந்­தது.

இதனைத் தொடர்ந்து “என்னை விட்டு விலகிச் செல்­லாதே” என்று பாத்­தி­மா­விடம் கெஞ்சி மன்றாடினான்.

ஆயினும், அவளோ “இனியும் எனது குடும்­பத்­த­வர்­களின் மனதை வேத­னைப்­ப­டுத்தும் காரியங்­களில் நான் ஈடு­பட மாட்டேன்.

அவர்கள் பெரி­ய­வர்கள், அனு­ப­வ­சா­லிகள் அவர்கள் எது செய்­தாலும் என்­னு­டைய நன்­மைக்­காகத் தான் இருக்கும்” என்று அவனை விட்டு விலகிச் சென்றாள். எனினும், சுரேஷால் அந்த ஏமாற்­றத்தைத் தாங்கிக்­கொள்ள முடி­யாமல் போனது. தலை­யணை முட்­களாய் மாறி­யது.

தனக்­குள்ளே பல நாள் புலம்­பி­யவன், தன்­னு­டைய ஊருக்குச் சென்று வந்தால் சரி மன­துக்கு ஆறு­தலாய் இருக்கும் என்று கடந்த வாரம் 2ஆம் திகதி வெசாக் விடு­மு­றை­யோடு தனது சொந்த ஊரான நுவ­ரெ­லியா லபுக்­க­லையை நோக்கிப் புறப்­பட்டான்.

மேடு, பள்ளம் ,வளை­வு­க­ளை­யெல்லாம் கடந்து பஸ் வண்­டியில் செல்லும் வழி­யெல்லாம் இயற்கையின் இத­மான தென்­ற­லுடன் இணைந்து பாத்­தி­மாவின் நினை­வு­களும் அவ­னுக்குள் அலை மோதின.

வாழ்க்­கையில் எதுவும் நிரந்­த­ர­மல்ல என்ற யதார்த்­த­மான உண்மை அவ­னுக்கு புரிந்­த­போதும், அவன் அள­வுக்­க­தி­மாக நேசித்த ஒரு பெண்ணை இன்­னு­மொ­ரு­வ­ருக்கு விட்டுக் கொடுக்கும் அள­வுக்கு அவன் மனம் இடம் கொடுக்­க­வில்லை. இனி என்ன செய்­வது? யாரிடம் இது­பற்றிப் பேசு­வது? என்று சிந்­தித்­த­வாறே தனது ஊருக்கு வந்து சேர்ந்தான்.

அங்கு ஊரி­லுள்ள தனது நண்­பர்­க­ளி­டமும் தனது மனக்­க­வ­லையை சொல்லி ஆறுதல் தேடினான். எனினும், யார் ஆறுதல் சொல்­லியும் அவன் சோகம் தீர­வில்லை. தாய், தந்தை, சகோ­த­ரர்கள், சகோ­தரி என்று யாரி­டமும் வழ­மை­யாகப் பழகும் வித­மாகக் கூட சிரித்துப் பேச­வில்லை.

இந்­நி­லையில், மே மாதம் 6ஆம் திகதி வத்­தளை பிர­தே­சத்­தி­லுள்ள நண்பர் ஒருவர் தொலை­பேசி மூலம் சுரே­ஷுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி இம்­மாதம் 16ஆம் திகதி பாத்­தி­மாவை பெண் பார்ப்­ப­தற்கு கன­டா­வி­லி­ருந்து மாப்­பிள்ளை வீட்டார் வரு­கின்­றார்­களாம் என்று தெரி­வித்தார்.

இதனால் ஆத்­திரம் அடைத்த சுரே­ஷுக்கு என்ன செய்­வ­தென்று தெரி­ய­வில்லை. “அவ­ளு­டைய நிழலைக் கூட இன்­னொ­ருவன் தீண்­டு­வதை அனு­ம­திக்க முடி­யாத அவனால் அவள் இன்னு­மொரு ஆணைத் திரு­மணம் செய்ய போகின்றாள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

எனினும், பாத்­தி­மாவின் காதல் மறுப்­பினால் வாழ்நாள் முழு­வதும் தேவதாஸ் கோலம் பூண்­டு­கொள்ள விரும்­பாத சுரேஷ் யாருமே எதிர்­பார்க்­காத ஒரு காரி­யத்தை செய்யத் துணிந்தான்.

அதன்­படி உட­ன­டி­யாக அன்­றைய தினமே வத்­தளை பிர­தே­சத்தை வந்­த­டைந்­தவன், தான் தங்­கி­யி­ருக்கும் விடுதி அறையை நோக்கி செல்­வ­தற்கு முன் புதி­தாக மூன்று கூரிய கத்­தி­க­ளையும் கையோடு வாங்­கிக்­கொண்டே விடு­திக்கு சென்றான்.

பின்னர் இரவு முழு­வதும் கொலை வெறி­யுடன் நித்­தி­ரை­யின்றித் தவித்தான். இரவு முழு­வதும் அவளை கொலை செய்யும் முறையைத் திட்­ட­மிட்டான்.

அதன்­படி 7ஆம் திகதி இரவு 7 மணி­ய­ளவில் பாத்­திமா தொழில் புரியும் வத்­தளை, ஹெந்­தலை சந்­தி­யி­லுள்ள புடவைக் கடைக்கு விறு­ விறு என்று சென்றான்.

அங்கு தனது வேலை­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த அவ­னு­டைய காத­லி­யான பாத்­தி­மா­விடம் ஒரு வார்த்­தையும் பேசாது தனது காற்­சட்டை பையி­லி­ருந்த கத்­தியை எடுத்து பாத்­தி­மா மீது மிகுந்த கொலை வெறி­யுடன் குத்­தினான். அதே­வேளை தனது உயி­ரையும் மாய்த்­துக்­கொள்ளத் தீர்­மா­னித்து தற்­கொ­லைக்கு முயற்சி செய்தான்.

இவ்­வாறு சில நிமி­டங்­களில் நடை­பெற்ற காட்­சிகள் அனைத்தும் புட­வைக்­க­டைக்குள் பொருத்­தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெம­ராவில் பதி­வா­கின.

மேலும் சுரேஷை றாகம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக ஆடை­களை அகற்­றிய போது அவ­னு­டைய காற்­சட்டைப் பையி­லி­ருந்து மேலும் இரு கூரிய கத்­தி­களும், அவர்கள் இரு­வரும் சுற்­றுலா சென்ற போது எடுத்த புகைப்­ப­டங்­களும் காணப்­பட்­டன.

எனவே அவற்றை பார்­வை­யிட்ட பொலி­ஸா­ருக்கு காத­லர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட பிரச்­சி­னை­யொன்றே மேற்­படி கொலைக்­கான கார­ண­மாக இருக்­கலாம் என்­பதை ஊகிக்கக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது.

இத­னைத்­தொ­டர்ந்து இஸ்­லா­மிய முறைப்­படி பாத்­தி­மாவின் பூத­வுடல் அடக்கம் செய்­யப்­பட்­டது, சுரேஷ் தொடர்ந்து றாகம வைத்தியசாலை அவ­சர சிகிச்சைப் பிரிவில் ஆபத்­தான நிலையில் சிகிச்சை பெற்று வரு­கின்றான்.

அது­மட்­டு­மின்றி, அவனால் பேச முடி­ய­வில்லை. அவன் தனது குரல்­வ­ளையை அறுத்­துக்­கொண்­டதால் அவ­னுக்கு இந்த நிலை ஏற்­பட்­டுள்ளது. எனவே இது தொடர்­பாக இன்னும் வத்­தளை பொலி­ஸாரால் சுரே­ஷி­ட­மி­ருந்து வாக்­கு­மூலம் எத­னையும் பதிவு செய்ய முடி­யாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது.

எது எவ்­வா­றா­யினும், அதீத காதலால் பாத்­தி­மாவை கொலை செய்­த­தினால் மட்டும் சுரேஷ் சாதித்­தது என்ன? அவன் ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கை நிரந்தரமாகவே அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.

இனி சுரேஷ் காப்பாற்றப்பட்டு உயிருடன் வந்தாலும் அவன் வாழ்நாள் முழுவதும் இச்சம்பவங்கள் ஆறாத வடுக்களாகத் தொடரத்தான் போகின்றன.

“கிறுக்கல்களாய் இருந்தாலும் அவையும் சித்திரங் களே, ஏமாற்றங்களாய் இருந்தாலும் அவையும் வாழ்வின் அனுபவங்களே” என்று ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமிருந்தால் இவ்வாறான இழப்புகளை முடியுமான அளவு தடுக்கலாம்.

இது இளம் காதலர் களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இளம் வயதினர் காதலிக்கும் முன்னர் தங்கள் நிலையையும் பெற்றோரின் மனோநி லையையும் கண்டு அறிந்து கொண்டே அதில் ஈடு படவேண்டும்.

மாறாக இடைநடுவில் ஒருவரை ஒருவர் கைவிடுவது வீணான துன்பங்களுக்கும், துயரங் களுக்குமே வழிவகுப்பதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

-வசந்தா அருள்ரட்ணம்-

Share.
Leave A Reply