லண்டன்: ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான ’தீனா’ திரைப்படத்தில் லைலா, ’தல’ அஜித்திடம் ”இது நமக்கு குழந்தைங்க பொறந்ததுக்கு அப்புறம்.. இது அவங்க ஸ்கூல் போறப்போ… இது நம்ம தாத்தா பாட்டி ஆகுறப்போ” என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எப்படி இருப்போம் என்று தன் கையால் வரைந்த ஓவியங்களைக் காதலோடு காட்டும் காட்சி நினைவிருக்கிறதா?.

அந்த ஓவியங்கள் உயிர்பெற்றால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கிறது. யூடியூபில் வைரல் ஹிட்டாகியுள்ள ’அழகின் 100 வருடங்கள்’ (100 Years of Beauty) என்ற வீடியோவை, வெளியான மூன்றே நாட்களில் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

திருமணமாகி சில மாதங்களே ஆன கிறிஸ்டி-தாவிஸ் தம்பதியரை 50 வயது தொடங்கி 90 வயது வரை எப்படி இருப்பார்கள் என்பதை மேக்கப் கலைஞர்கள் சில நிமிடங்களில் செய்து காட்டும் இந்த வீடியோவும், ஒவ்வொரு வயதிற்கும் காதல் தம்பதிகள் காட்டும் ஃபீலிங்சும், சான்சே இல்ல….

இதோ அந்த கலர்புல் காதல் வீடியோ:

Share.
Leave A Reply