1843 ஆம் ஆண்டு ஜெருஸலேமில் பிறந்து, 1927 ஆம் ஆண்டு அங்கு உயிர்நீத்த அருட் சகோதரி வண. மேரி அல்போன்சின், 1846 இல் கலிலியில் (தற்போது வடக்கு இஸ்ரேலிய நகரம்) பிறந்து 1878 ஆம் ஆண்டு பெத்லஹேமில் உயிர்நீத்த அருட் சகோதரி வண. மேரியன் பவார்ட் ஆகியோரே நேற்றுமுன்தினம் பாப்பரசரால் புனிதர்களாக பிரகடனப்படுத் தப்பட்டவர்களாவர்.
பலஸ்தீனத்தைச் சேர்ந்த அருட்சகோதரிகள் புனிதர்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திகான் நகரிலுள்ள சென். பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் கலந்துகொண்டார். பலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,000 யாத்திரிகர்களும் இதில் பங்குபற்றினர்.
இதேவேளை, ஜேன் எமிலி டி விலேனிவ் (1811–1854), மரியா கிறிஸ்டினா டெல் இமாகலலேட்டா (1856–1906) ஆகியோரும் புனிதர்களாக பாப்பரசரால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.