புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களினடிப்படையில் இந்த தகவல் பிரசுரிக்கிறது.

நேற்று கைதானவர்களில் ஒருவன் வேலணை பிரதேசசபையில் வேலை செய்கிறான். மற்றைய நால்வரும் கொழும்பில் வேலை செய்கிறார்கள்.

ஏற்கனவே கைதான மூவரில் ஒருவனும் கொழும்பில் இருந்து வந்திருந்தான். இவனுடன், இந்த நால்வரும் திட்டமிட்டு இந்த கொடூரத்தை புரிவதற்காகவே வந்தார்களோ என்ற சந்தேகம் நிலவிவரும் நிலையில், சமூகவிரோதிகளின் முதற்கட்ட வாக்குமூலம் வேறுவிதமாக அமைந்துள்ளது.

வெலணை பிரதேசசபையில் வேலை செய்பவனின் வீட்டில் விருந்தொன்று நடந்ததாகவும், அதற்கு தங்களை அழைத்ததாகவும், அதனாலேயே நால்வரும் வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

அவனது வீட்டில் உண்டு, குடித்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த போது, கொழும்பிலிருந்து வந்த நால்வரில் ஒருவனின் கைத்தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும், ஏற்கனவே கைதான மூவரில் ஒருவன் அந்த அழைப்பை ஏற்படுத்தியதாகவும், மச்சான்… ஒரு பெட்டை இருக்கிறாள்.. வா என அவன் அழைத்ததாகவும், மதுபோதையிலிருந்த தாங்கள் சென்றதாகவும் கூறியுள்ளார்கள்.

தாங்கள் சென்றபோது காலை 10 மணியிருக்கும் என்றும், அப்போது வித்தியா உயிருடன் இருந்தார் என்றும், அவரது கைகள் மட்டும் தலைக்க மேலே பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்கள்.

அந்த பெண்ணை அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து களைத்திருந்ததாகவும், தம்மையும் வன்புணருமாறு கேட்டதாகவும், மதபோதையிலிருந்த தாம் சில மணிநேரம் தங்கியிருந்து அவரை வன்புணர்ந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், ஆனால் கொலைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்றும் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவியின் தாயாருக்கும், கைதான ஒருவனிற்குமிடையில் இருந்த தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்ததாக இவர்களும் வாக்குமூலமளித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களும் புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் உறவினர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிரிழந்த மாணவிக்கும் அவர்கள் எட்டு பேரும் ஒரு முறையில் உறவினர்கள் ஆவார்கள் எனவும் தெரியவந்தள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில்,

“நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கடந்த 13ம் திகதி புதன் கிழமை காலை புங்குடுதீவில் மது அருந்திக்கொண்டு இருந்தோம் அந்தவேளை 14ம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் எனக்கு தொலை பேசியில் அயிட்டம் (பெண்ணு) ஒன்று இருக்கு வா என ஒரு இடத்தை சொல்லி அழைத்தார்

அதை யடுத்து நாங்கள் அந்த இடத்திற்கு காரில் சென்றோம். அங்கே ஒரு பெண்ணை கடத்தி பின் புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய நிலையில் இருந்தார்கள்.

அந்த பெண் எமக்கு ஒரு முறையில் உறவினர் கூட அந்த வேளை நாம் மது மயக்கத்தில் இருந்ததால் நாமும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினோம்.

பின்னர் நாம் காரில் காலை 10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றுவிட்டோம். மறுநாளே எமக்கு அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

நாம் செல்லும் போது அந்த பெண் உயிரிழக்கவில்லை அவரது கைகள் பின்னால் தான் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கைகள் தலைக்கு மேல் விரித்து இரண்டு மரங்களில் கட்டப்பட்டது தொடர்பில் எமக்கு தெரியாது.

எமக்கு பெண் இருக்கு என்று சொல்லி அழைத்தவர். ஏற்கனவே ஒரு திருட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

அவரை பொலிசாரிடம் காட்டி கொடுத்தது உயிரிழந்த பெண்ணின் தயாராவார். எனவே தாய் மீதான கோபத்திலையே அவர் அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் எம்மையும் அழைத்து இருந்தார்.

தாயின் மீதான கோபத்தினால் தான் அவர் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து இருக்கலாம்.

அதனை அடுத்து நாம் புங்குடுதீவுக்கு வந்து அந்த பெண்ணின் இறுதி கிரியைகளிலும் கலந்து கொண்டு இறுதி கிரியைகளில் உதவிகளையும் முன்னின்று செய்தோம்.

அதன் பின்னர் இன்று (ஞாயிறு) இரவு மீண்டும் கொழும்பு நோக்கி செல்ல இருந்தோம் அந்த நிலையிலையே பொலிசார் எம்மை கைது செய்துள்ளனர் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11245436_477218802428960_777112310_n11121940_477218809095626_1767797469_n11245249_477218895762284_2073497896_n11267253_477218755762298_1715553057_n

Share.
Leave A Reply