கணனி நிலையத்தில் குழந்தை பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள கணனி நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு பொழுதை போக்குவதற்காக கணினியில் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டனர்.
அங்குள்ள கழிவறைக்குச் சென்று சிரமப்பட்டு தனது குழந்தையை பிரசவித்த அவர், அங்கு இருந்தவர்கள் கொடுத்த தண்ணீரைக் கொண்டு தன்னையும் குழந்தையையும் சுத்தம் செய்தார்.
பின்னர் குழந்தையை ஓரமாக வைத்து விட்டு, மறுபடியும் விளையாடச் சென்று விட்டார். இதனால் திகிலடைந்த கணனி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் அம்புலன்சை வரவைத்துள்ளனர்.
அப்போது ஸ்ட்ரட்சரில் செல்லாமல் நடந்தே அந்தப் பெண் அம்புலன்சில் ஏறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
Unexpected birth: A cleaner found Ms Li with her baby in a toilet cubicle at the internet cafe in Nanchang
New mother: Ms Li initially refused help from the cleaner but was taken to hospital for treatment
Internet baby: After giving birth, Xiao Li went back to her computer with the baby and carried on surfing the net. CCTV footage from the internet cafe shows her coming out of the toilets at the top of the frame
Surprise: The cleaner was shocked that Ms Li went back into the internet cafe while still covered in blood
Late night browsing: Ms Li had been in the internet cafe at 4am because she could not afford a hotel room