யாழ். நீதிமன்றத்தை சுற்றிவளைத்து மக்கள் தாக்குதல்: பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம்
புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்களை நீதிமன்ற முற்படுத்த உள்ள நிலையில் போராட்டக்காரர்கள் நீதி மன்றத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டத்தொகுதியிலுள்ள கண்ணாடிகள் கல்லெறித் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளன.
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதாக அறிந்த மக்கள் (ரவுடிகள் ) நீதிமன்றத்தைச் சுற்றி ஒன்றுகூடினர்.
அவர்களில் சிலர் நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசினர். இதனால் நீதிமன்ற கண்ணாடிகள் உடைந்தன.
நீதிமன்றத்துக்கு முன்பாக நின்றிருந்த சிறைச்சாலை பஸ்ஸின் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சிறைச்சாலை பஸ்ஸின் முன்பக்க, மற்றும் பக்கத்து கண்ணாடிகள் உடைந்தன. அத்துடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைய முற்பட்டவர்கள் மீது கண்ணீர் புகை வீசி குழப்பத்தில் ஈடுபட்டவர்களைக் பொலிஸார் கட்டுப்படுத்தினர்.
இதனையடுத்து, விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் உத்தரவை மீறி தொடர்ந்தும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், நிலைமைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்துள்ளார்கள். இதனால் நீதிமன்றப் பகுதி போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
கலவர பூமியானது யாழ்..!
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு… , யாழ்பாணத்தில் வேலைவெட்டி எதுவுமில்லாமல் இருக்கும் இளைஞர்களை (Alkaholiks) தூண்டிவிட்டு “ரவுடியிசத்தை” கட்டி எழுப்பி, யாழ்குடாநாட்டில் நிலவும் அமைதியின்மையை குழப்பி குளிர்காய நினைக்கும் சுயநலவாத தமிழ் அரசியல் வாதிகளால் (சிறிதரன், ஐங்கரநேசன, கஜேந்திரன் பொன்னம்பலம்…அரச தரப்பு,..ஈ.பி.டி.பி..) திட்டமிட்டு நடத்தப்படும் போராட்டம்தான் இது.
இது படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதிவேண்டி நடத்தப்படும் போராட்டமல்ல… நீதிகோரி நிற்பவர்கள் நீதுிமன்றத்தக்கு கல் எறியமாட்டார்கள். வாகனத்தை உடைக்கமாட்டார்கள்.
இப்போராட்டங்கள் எத்தோட்சையாக நடத்தப்படும் போராட்டமல்ல. நன்கு திட்டமிட்டு செய்யப்படுகிறது.
இதன் மூலம்.. இராணுவ, புலனாய்வு, பொலிஸ் பிரசன்னததை யாழ்குடாநாடெங்கும் விஸ்தரிக்க முனைகிறார்கள்.
இதை வடமாகாண முதலமைச்சர் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும்.
வித்தியாவை கற்பழித்துக் கொலை செய்த காவலிகளுக்கும், இந்த ரவுடி கூட்டங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை
இது பொதுமக்களால் நடத்தப்பட்ட செயல் அல்ல. ரவுடிகாளல் நடத்தப்பட்டவையாகும்