இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை  ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்கிரசிங்க மீது கடுமையான கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

ஆவேசமடைந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி “நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு?” ” நீயா சபாநாயகர்?”

” நீ சபாநாயகர் இல்லை ஒழுங்குப் பிரச்சினையின் நிமித்தமே எழுந்துள்ளேன் பைத்தியக்காரன்” என்று கூறியவாறு கெட்டவார்த்தை ஒன்றையும் மீண்டும் மீண்டும் கூறி நீ உட்காரு ஓய் என்றும் கூறினார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி இவ்வாறு கெட்டவார்த்தைகளால் பிரதமரை திட்டியபோது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மேசையில் தட்டியும் சத்தம் எழுப்பியும் சிரித்தனர்.

இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் வாசுதேவ எம்.பியைக்கட்டுப்படுத்தாது அமைதியாக இருந்த அதேவேளை கலரியில் பாடசாலை மாணவர்கள்  இருப்பதாக மட்டும் சுட்டிக்காட்டினார்.

நான்கு அமைச்சர்கள் பதவி விலகினர் – பிரதமர் ரணில் மீது அதிருப்தி

resign-ministersசிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியால் பதவி விலகினர்.

டிலான் பெரேரா, சி.பி.இரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி ஆகிய நான்கு அமைச்சர்களுமே இன்று காலையில் தமது பதவி விலகல் கடிதங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்துள்ளனர்.

இவர்கள் அண்மையில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்தவர்களாவர்.

பதவி விலகிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை ஆட்சி செய்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், ரணில் விக்கிரமசிங்க பழிவாங்கும் வகையில் காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இன்று பதவி விலகிய அமைச்சர்கள் நால்வரும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply