யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று (21.5) பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா வர்த்தகர் சங்கம் இக் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் பாடசாலைகள், வங்கிகள் என்பனவும் காலையில் மூடப்பட்டிருந்ததுடன் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகளை தவிர தனியார் பேரூந்து சேவைகள் மற்றும் முற்சக்கரவண்டி சேவைகள் உட்பட போக்குவரத்து வசதிகளும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதேவேளை வவுனியா தபால் நிலைய ஊழியர்கள், நகரசபை மாவட்ட செயலக ஊழியாகள், விவசாயக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இளைஞர்கள் சிலரால் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டதுடன் வீதி தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா பேரூந்து தரிப்பிட பகுதியில் குழுமியிருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்ததுடன் மக்கள் ஒன்று கூடுவதையும் தடுத்திருந்தனர்.
ஊர்காவற்துறை நீதிமன்றம் முன்னால் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் (படங்கள்)