அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற  சந்தேகத்தில்  50 வயதுடைய நபர் ஒருவரை  தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட்டில் குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொப்புள் கொடியுடன் வடிகானுக்குள்ளிருந்து ஆண் சிசு மீட்பு!!
22-05-2015

211104ccf298536b02-150x150

பிறந்த உடனேயே கைவிடப்பட்ட ஆண் சிசுவொன்று அக்கரைப்பற்று சாகாமம் வடிகானுக்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொப்புள் கொடியுடன் இந்த ஆண் சிசு வடிகானுக்குள் இருந்ததை பெண்ணொருவர் கண்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.நேற்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட் பட்ட சாகாம பிரதான வீதியின் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடி கானுக்குள் இருந்தே இச்சிசு மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply