திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை.

ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தான். அதை ஏற்க மறுத்தார்.

‘புனே கிளை பலவீனமான நிலையில் உள்ளது. உன்னைப் போன்ற திறமையும் அனுபவமும் உள்ளவனால்தான் மேம்படுத்த முடியும். நிலைமை சீரானதும் சென்னைக்குத் திரும்பி விடலாம்’ என்று சமாதானப்படுத்தினார். திலீப் புனேவுக்கு கிளம்பினான்.

புனேயில் எப்போதும் எதையோ பறி கொடுத்தவன் போன்ற முகத்துடன் இருந்தான் திலீப். அவனுடைய மேலதிகாரி அனுஜா இதை கவனித்தாள்.

ஒருநாள் அவனை வலுக்கட்டாயமாக சாப்பிட வெளியே அழைத்துச் சென்றாள். அவள், திலீப்பை விட 10 வயது மூத்தவள்… கேரளப் பெண்… நன்றாகத் தமிழ் பேசுவாள். அப்பாவும் அம்மாவும் கொச்சினில் இருந்தார்கள்.

தங்கைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு, புனேயில் தனியாக வாழ்ந்து வந்தாள். திலீப்பின் வருகை அவளுக்கு ஆறு தலாக இருந்தது. உறவு வளர்ந்தது. ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு நெருக்கமானார்கள்.

நெருக்கம் காதலானது. அலுவலகத்தில் எல்லோரும் இவர்கள் உறவை கேலி செய்து, காதுபட பேச ஆரம்பித்த போதுதான் திலீப், அனுஜாவை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

வீட்டில் அப்பா, ‘அனுஜா, அவனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டாள்’ எனக் கத்தினார், திட்டினார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, அனுஜாவை திருமணம் செய்து கொண்டான் திலீப். இன்று இருவரும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.

ஆண், தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்வது இன்றும் தவறான கண்ணோட்டத்தோடு தான் பார்க்கப்படுகிறது.

உண்மையில் இது இயற்கையான விஷயமே. ஆண், 10 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்தால் ‘அவன் கில்லாடிப்பா… சின்னப் பொண்ணை வளைச்சுட்டான் பாரு’ என்று பாராட்டுவார்கள்.

பெண், தன்னைவிட வயதில் குறைந்த ஆணை திருமணம் செய்தால் ‘இத்தனை வயசாகியும் ஆசை அடங்கல பாரு’ என்பார்கள்.

ஆணுக்கு மட்டும் எந்த வயதிலும் ஆசை வரலாம். பெண் மட்டும் குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்து தன் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாய ஒழுக்கமாக வைத்திருக்கிறது நம் சமூகம்.

இந்த உறவை ‘May December Relationship’ என்கிறார்கள். வயதில் மூத்த பெண்ணுக்கு மனமுதிர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே, பார்ட்னருக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, தகுந்த துணையாக மாற்றுவதும் எளிது.

துணை இளமையாக இருப்பதால் விறைப்புத்தன்மை வெகுநேரம் நீடித்து இருக்கும்… ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் உறவில் ஈடுபடலாம்… அதிக சுகம் பெறலாம். ஆணால் வயதில் மூத்த பெண்ணை எளிதாக திருப்திப்படுத்தவும் முடியும்.

45 வயதுக்கு மேல் பெண்களுக்கு உடலுறவின் போது குறியில் நீர் சுரப்பது குறைந்து வலியும் எரிச்சலும் ஏற்படும்.

லூப்ரிகேஷன்களை பயன்படுத்தி சரி செய்யலாம். உணர்ச்சிகளைத் தூண்ட அதிக நேரம் ஃபோர் ப்ளே தேவைப்படும். வயதாகும் பொழுது ஏற்படும் பிரச்னைகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க பெண் மருத்துவர் ஐரா ரீஸ், ‘செக்ஸ் சார்ந்து மட்டும் இதுபோன்ற உறவுகள் ஏற்படுவதில்லை. அது இரண்டாம் பட்சமே.

நடைமுறை சார்ந்த உறவாலும் சரியான பகிர்தலுக்காகவுமே ஏற்படுகிறது’ என்கிறார். இந்த உறவை ‘Intergenerational Relationship’ என்றும் சொல்கிறார்கள்.

வயதில் வித்தியாசம் இருந்தாலும், இருவரும் திறந்த மனதுடன் இருந்தால் உறவு என்றென்றும் இனிக்கும்.

(தயக்கம் களைவோம்!)

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!


ht3214

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!

சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றி கிடந்தோம்
சிறு துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மிதந்தோம்… – கவியரசு கண்ணதாசன்

சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது… இந்தியா திரும்பினார்கள்.

தங்கள் பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றார்கள். திருமணமும் முடிந்தது. நினைத்ததெல்லாம் முடிந்தாலும் தாம்பத்தியம் சுகப்படவில்லை.

சஞ்சிதாவுக்கு செக்ஸில் இருந்த ஆர்வம், ஷானுக்கு இல்லை. அவள் எதையும் ரசித்துச் செய்பவள். படுக்கையில் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பாள்… ஷானோ உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான். உடலுறவிலும் ஏதோ கடனுக்கு செய்வது போல ஈடுபட்டுவிட்டு, படுத்துக்கொள்வான்.

நல்ல உடலுறவு என்பது திரும்ப அந்த சுகத்தை எப்போது அடையப் போகிறோம் என்று ஏங்குவதாக அமைய வேண்டும். சஞ்சிதாவுக்கோ அது வலியும் எரிச்சலும் கலந்த அனுபவமானது.

சஞ்சிதா மனதுக்குள் வெம்பிக் கொண்டி ருந்த போது, லண்டனில் அவளோடு படித்த திவ்யா சென்னைக்கு வந்திருந்தாள்.

அவளிடம் எல்லா விஷயங்களையும் கொட்டித் தீர்த்தாள் சஞ்சிதா. ‘இது ஒரு பெரிய விஷயமே இல்ல’ என்று ஆறுதல்படுத்தினாள் திவ்யா. சில செக்ஸ் சூட்சமங்களையும் சொல்லிக் கொடுத்தாள். அதன் பிறகு சில நாட்களிலேயே பிரச்னை சரியாகிவிட்டது.

அந்த சூட்சமங்கள் என்னென்ன?

செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. ஆண்குறியை, பெண்குறியில் செலுத்தி இயங்குவதே செக்ஸ் என்று நினைப்பவர்களே அதிகம்.

திருமணத்துக்கு முன் பாலியல் குறித்த விஷயங்களை புத்தகங்களை படித்தாவது தெரிந்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சுவாரஸ்யமான உடலுறவு சப்பென ஆகிவிடும். கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

1) ஃபோர் ப்ளே (Fore Play)
2) ப்ளே (Play)
3) ஆஃப்டர் ப்ளே (After Play)

ஃபோர் ப்ளே என்பது செக்ஸின் ஆரம்ப நிலை. செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும்.

இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது.

பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.

ஆண் விஷுவல் ஸ்டிமுலேஷனால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும்.

பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம்.

இதைத்தான் வாத்ஸ்யாயனர் காமசூத்ராவில், ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் 64 கலைகளில் சில கலைகளாவது தெரிந்திருக்க வேண்டும்’ எனக் குறிப்பிடுகிறார்.

ப்ளே என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது.

இதில் உச்சக்கட்ட நிலையை அடையும் போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும். தியானத்தில் கிடைக்கும் அமைதிநிலை உடலுறவின் உச்சக்கட்டத்திலும் கிடைக்கும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல், இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும்.

ஆஃப்டர் ப்ளே என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம்.

இதனால் நல்ல புரிதல் உருவாகும். தம்பதிகள் உடலுறவை ஒரு நிமிட சுகமாக நினைக்காமல், நெருக்கத்துக்கு உதவும் அணுக்கமான செயலாக நினைக்க வேண்டும். அதன் பின், உடலுறவு இன்பம் பொங்கும் செயலாக இருக்கும்.

(தயக்கம் களைவோம்!)

 

 

Share.
Leave A Reply