ஒவ்வொரு வருடமும் தவறாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய் பச்சன், இந்த வருடமும் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது முதல் முறை பச்சை நிற கவுனில் வந்திருந்தார். இரண்டாம் முறையாக வந்த போது அழகான ப்ரில் கொண்ட வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தேவதை போன்று வந்திருந்தார்.

மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள், அவரை க்யூட்டாக வெளிக்காட்டியது. இங்கு 2015 கேன்ஸ் திரைப்பட விழாவில் தேவதை போன்று ஒய்யார நடை போட்ட ஐஸ்வர்யா ராய் பச்சனின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
காரில் இருந்து இறங்கிய போது…

இது எட்டாம் நாள் கேன்ஸ் விழாவின் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் காரில் இருந்து இறங்கிய போது எடுத்த போட்டோ.

வெள்ளை நிற ப்ரில் கவுன்
ஐஸ்வர்யா அணிந்து வந்த வெள்ளை நிற ப்ரில் கவுனானது டிசைனர் ரால்ப் & ரூஸ்சோ என்பவரால் டிசைன் செய்யப்பட்டது. இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த கவுன்.

ஒய்யார நடை
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடையுடன், ரசிகர்களுக்கு ஹாய் சொல்லியவாறு நடந்து வந்த போது எடுத்தது.

ஐஸ்வர்யா மேக்கப்
ஐஸ்வர்யா கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதட்டிற்கு அளவாக லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சனின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா ராய் வெள்ளை நிற உடைக்கு மேட்ச்சாக காதுகளுக்கு வைர கம்மலும், கை விரலுக்கு வைர மோதிரமும் அணிந்து வந்திருந்தார்.

அழகான காலணி
ஐஸ்வர்யா ராய் உடைக்கு ஏற்றவாறு சில்வர் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.
ரசிகர்களுக்கு பறந்த முத்தம்
இது ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் அன்பு முத்தத்தை பறக்க விட்ட போது எடுத்த போட்டோ.

பல கோணங்களில்
இது கேன்ஸில் பல கோணங்களில் ஐஸ்வர்யா ராய் பச்சனை எடுத்தது. 2015 கேன்ஸ் விழாவில் இரண்டாம் முறையாக வந்த போது ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல், அவரது வயதை குறைத்து வெளிக்காட்டியது.
Share.
Leave A Reply