கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு.

1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன் செய்த தவறால் நிர்மலா தப்பிச் செல்ல முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

நிர்மலாவை சிறை மீட்பதற்கு புலிகளமைப்பினர் திட்டமிட்டனர். அதனை விபரிப்பதற்கு முன்னர் நிர்மலா பற்றிய சிலவிபரங்கள்..

யாழ்.பலகலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றியவர் நிர்மலா.

பெண்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

நிர்மலாவின் துணைவராக இருந்த நித்தியானந்தனும் யாழ் பல்கலைக்கழ விரிவுரையாளராக கடமையாற்றினார்.

ஆரம்பத்தில் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை கொண்டிருந்தனர்.

புத்திஜீவிகள் இயக்க ஆதரவாளர்களாக இருக்கமுடியும். இயக்க உறுப்பினர்களாக மாறினால் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அவர்களால் நடந்துகொள்ளமுடியாது.

புத்திஜீவிகள் தனிநபர் பிரபலம், தனிநபர் சுதந்திரம் பற்றிய மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை கோரும்போது இயக்க கட்டுக்கோப்பு சிதைவடையும் என்பன போன்ற கருத்துக்களை ஈழ மாணவர் பொது மன்றம் (G:U:E:S) கொண்டிருந்தது.

தமக்கு எல்லாம் தெரியும் தாம் மேலானவர்கள் என்னும் புத்திஜீவிகளது குணாம்சம் ஒரு கட்டத்தில் இயக்க தலைமைக்கு எதிராகவும் திரும்பலாம.

சோவியத் புரட்சியில் கூட லெனின் புத்திஜீவிகள் விடயத்தில் பலத்த அவதானம் தேவை என்பதை வலியுறுத்தியே வந்தார்.

இவைதான் ஈழமாணவர் பொதுமன்றம் கொண்டிருந்த நிலைப்பாடு.

இவ்வாறான நிலையில் நிர்மலா போன்றவர்களை ஈழமாணவர் பொதுமன்றம் உள்வாங்கவில்லை.

எனினும் அவர்களின் முற்போக்கான தன்மைகளையும் அங்கீகரித்தது.

புலிகள் அமைப்போடு நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை வைத்திருந்தனா.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை 27.10.82 இல் புலிகள் தாக்கியபோது சீலன் உட்பட இரு புலிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு நிர்மலா வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,

சிறையில் நிர்மலா
இத் தகவல் இராணுவத்தினருக்கு எப்படியோ எட்டிவிட்டது. 1982 நவம்பர் 20 ஆம் திகதி நித்தியானந்தனும்  நிர்மலாவும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.

nirmala
வதந்திகள்

குருநகர் இராணுவ முகாமில் வைத்து இருவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பின்னர் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிர்மலா தொடர்பாக பல வதந்திகள் அடிபட்டன.

பலாத்காரப்படுத்தப்பட்டதால் நிர்மலா கர்ப்பமுற்றுள்ளார் என்றொல்லாம் பேசப்பட்டது.

பின்னர் அவையாவும் பொய்யான செய்தி என்று தெரியவந்தது.

வெலிகடை சிறைப் படுகொலையை அடுத்து மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டார் நிர்மலா.

1983 செப்டம்பர் 23 சிறையுடைப்பில் நித்தியானந்தனும் தப்பிச்சென்று புலிகளோடு முழு நேர உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.

சிறையில் இருந்த நிர்மலா மீது 1984 யூன் மாதம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது.

வழக்குக்காக நிர்மலாவை அழைத்துச் செல்வதற்க்கு முன்னர் சிறைமீட்க புலிகள் திட்டமிட்டனர்.

authaporadamசிறைக்குள் புலிகள்

1984 யூன் மாதம் 10ம் திகதி இரவு 7.15 மணி.

புலிகள் இயக்கத்தின் 15 உறுப்பினர்கள் சிறைக்காவலர்கள் போன்று உடையணிந்து சிறைவாயிலுக்குச் சென்றனர்.

கொழும்பிலிருந்து சில கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுமதிக்க அழைத்து வந்திருக்கிறோம் கதவை திறவுங்கள் -என்றனர்.

முதலாவது பிரதான கதவு திறக்கப்பட்டது.

உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்த சிறைக்காவலர்கள் மூவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அவர்கள் மூவரும் மீண்டும் கதவை மூடமுயன்றதுடன், தாக்குதல் நடத்தவும் தயாரானார்கள்.

உள்ளே துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் வெளியே சத்தம் கேட்கும்.

காவல் பணியில் உள்ள அதிரடிப்படை இராணுவத்தினர் வந்துவிடுவார்கள்.

அதனால் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை தவிர்த்தனர்.

சிறைக்காவலர்கள் சிலருடன் கைகலப்பில் ஈடுபட்டு அவர்களை மடக்கினர்.

சிறையின் இரண்டாவது இரும்புக் கதவையும் திறந்தால்தான் நிர்மலா சிறை வைக்கப்படடிருந்த பெண்கள் பகுதிக்கு செல்ல முடியும்.

அந்த இரும்புக் கதவின சாவியை வைத்திருந்த சிறை அதிகாரி ஓடி போய் ஒளிந்துகொண்டார்.

என்ன செய்யலாம்? வேறு வழியில்லை இரும்புக்கதவை உடைத்து திறந்தனர்.

நிர்மலா சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டையும் உடைத்தே திறந்தனர்.

நிர்மலா சிறை மீட்கப்பட்டார். இரண்டாவது தடவையும் சிறை உடைக்கப்பட்டதால் அரசுக்கு பலத்த அதிர்ச்சி!

சிறை மீற்கப்பட்ட நிர்மலா தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். புலிகளின் முழுநேர உறுப்பினர் ஆனார்.

அதன் பின்னர் சில காலம் இயக்கத்தில் செயல்பட்ட நிர்மலாவும், நித்தியானந்தனும் இயக்கதிலிருந்து விலக்கப்பட்டனர்.

இயக்கத்திலிருந்து வெளியேறிய பின்னர் நிர்மலாவும், நித்தியானந்தனும் குடும்ப வாழ்க்கையிலும் பிரிந்து கொண்டனர்.

புலிகள் அமைப்பின் தலைவாகளில் இருந்த பின்னா வெளியேறியவர் ராகவன்.

நிர்மலா ராகவனை தனது வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார்.

தற்போது வெளிநாடென்றில் வசித்து வருகிறார்.

paruthijannnnnnnaipilகடல் விமானத்துக்கு தீ

காரை நகர் கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது பருத்தியடைப்பு கிராமம்.

கடற்படை கமாண்டராக இருந்த அசோக டி சில்வா கடல் விமானம் ஒன்றில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அவர் வந்த கடல் விமானம் பருத்தியடைப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கடல் விமானம் 1984 யூன் 15ஆம் திகதி புலிகளால் தீ வைக்கப்பட்டது.

விமானத்தின் பெற்றோல் தாங்கியில் தீ பற்றிக்கொண்டதால் பலத்த சத்தத்தோடு கடல் விமானம் சிதறிப்போனது.

வழுக்கை விழுந்த போதும்…

ஆயுதப் போராட்டம் தீவரமடைந்த நிலையிலும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஜே.ஆர் அரசுடன் வட்டமேசை மாநாடு நடத்திக் கொண்டிருந்தது.

சகல போராளி அமைப்புகளும் வட்டமேசை மாநாட்டை கண்டித்துக்கொண்டிருந்தன.

வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தமிழீழ கோரிக்கையை கிண்டலடித்த இன்னொரு அரசியல்வாதி குமார் பொன்னம்பலம்.

குமார் பொன்னம்பலத்தை ஒரு பொருட்டாக எடுக்கத்தேவையில்லை என்று நினைத்த போராளி அமைப்புகள் கூட்டணியை குறிவைத்தே கண்டணங்களை தொடுத்தன.

1984யூலையில் வெளியான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் கூட்டணியை கண்டித்து ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டது.

அதிலிருந்து ஒரு பகுதி இது.

“வட்ட மேஜை மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எந்தவித உருப்படியான தீர்வும் ஏற்பட போவதில்லை.

27வருட வரலாற்று அனுபவத்தில் நம்பிக் கெட்டு வழுக்கை விழுந்தாலும் இன்னும் இவர்களுக்கு நம்பிக்கை தளரவில்லை.

புரசிகரப் புதிய பரம்பரை ஆயதபாணிகளாக தோற்றம் கொள்ள தொடங்கியுள்ளது.

இனி நாம் பார்க்கவிருப்பது பழைய பரம்பரையின் புளித்துப்போன கதையை அல்ல.

புதிய வரலாறு படைக்கும் புதிய தலைமுறையின் புரசிகரப் போராட்டத்தையே!.

ஏமாந்த வரலாற்றின் நாயகர்கள் இன்னும் அரசியல் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்போராளிகளோ ஈழத்தமிழரை பிரதிபலிக்கும் அரசியல் சக்கியாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எனவே எதிர்கால தமிழ் அரசியல் வரலாற்றின் கதாநாயகர்கள் அவர்களே கூட்டணி தலமையல்ல என்று அடித்துக் கூறியது புலிகளின் ஏடு.

amarthalinkamஅமிர் முழக்கம்

வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தால் அகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தார் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.

வட்டமேசை மாநாட்டை காலைவரையின்றி ஒத்திப்போட்டார் ஜே.ஆர்.

இந்திரா காந்தி சொன்னதால்தான் பேசப்போனோம் என்று சொன்னர் அமிர்தலிங்கம்.

ஆனால் இந்திய அரசுசொன்ன கருத்து வேறுவிதமாக இருந்தது.

“நாமாக எந்தவொரு தீர்வையும் தினிக்கவில்லை.அமிர்தலிங்கத்துடனும், ஜயவர்தனாவுடனும் ஜி.பார்த்தசாரதி பேச்சு நடத்தினார்.

இருவர் கருத்துக்களையும் ஒட்டி எழுந்ததே சமரசதிட்டம்.

இதில் இந்தியாவின் தலையீடு கிடையாது.” என்று சொன்னது இந்திய அரசு.

ஜி.பார்த்தசாரதிதான் அப்போது வெளியுறவு செயளாளராக இருந்தவர்.

வட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டில் கரூர் எனுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது

அதில் கலந்து கொண்டு அமிர்தலிங்கம் கூறியது இது..

“சுதந்திர தமிழீழம் அடையும்வரை நாம் போராடுவோம்”

இப்பேச்சை பத்திரிகையில் பார்த்தார் கோவை மகேசன். உடனே தனது வீரவேங்கை பத்திரிகையில் எழுதிய பதில் இது..

“ஒற்றையாட்சி ஏற்றுக்கொண்டு பேச்சு நடத்தும் அமிர் –சிவசிதம்பரம் கம்பனியார் புதிய பல்டி அடித்திருக்கிறார்கள்.

அகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார் அமிர்தலிங்கம். அது எப்படிபட்டதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்,

எதாவது கோவிலில் உண்ணாவிரதம் இருப்பார்கள். மங்கையகரசி அமிர்தலிங்கம் பாட்டுப்பாடுவார். மாலை பழரசத்துடன் போராட்டம் முடிவடையும்.

இப்படிபட்ட போராட்டத்தை கடந்த 30 ஆண்டுகளில் 30.000தடவை நடத்தியிருப்பார்கள். இதனால் சிங்கள அரசுக்கு என்ன கஷ்ரம்?

இதை எழுதிய கோவை மகேசனும் ஒரு காலத்தில் கூட்டணியின் உண்ணாவிரத போராட்டங்களில் கலந்து கொண்டவர்தான்.

கடற்படையோடு மோதல்
1984 ஆகஸ்ட் 4ஆம் திகதி சனிக்கிழமை வல்வெட்டிதுறையில் உள்ள பொலிகண்டி எனும் கிராமத்தில் புலிகளது மோட்டார் படகு நிற்கிறது.

கடல்கண்காணிப்பு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் புலிகளின் படகை கண்டுவிட்டனர்.

புலிகளது மோட்டோர் படகு திடீரென்று கடற்படையினரது வியூகத்துக்குள் சிக்கி கொண்டது.

புலிகளது படகில் இருந்தது நான்கு பேர். கடற்படையினர் 18பேர்.

கடற்படையினருக்கும் புலிகளுக்கும்மிடையில் இடையில் மோதல் ஆரம்பிக்கிறது.

மோதலின் முடிவில் கடற்படையினர் ஆறுபேர் மாண்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

நவீன ரோந்து படகையும் கைவிட்டு கடற்படையினர் கைவிட்டு பின்வாங்கி சென்றனர்.

இலங்கை கடற்படையினருக்கு எதிரான முதலாவது பாரிய தாக்குதல் அதுதான்.

பதிலடி படுகொலைகள்

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து வடக்கில் பாரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டது ஜே.ஆர். அரசு. கடற்படை கப்பல்கள் வல்வெட்டிதுறை கடற்கரையில் வந்து முத்தமிட்டன.

கடற்படை படகிலிருந்து கிராமங்களை நோக்கி குண்டுகள் ஏவப்பட்டன.

இதனால் 5000பேர்வரையான ஊர் மக்கள் வீடகளைவிட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்ததனர்.

வயோதிபர், பெண்கள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனவர் குடியிருப்புகள், வள்ளங்கள் என்பன நாசமாக்கப்பட்டன.

படையினரின் பதிலடி அவ்வாறு நடந்து கொண்டிருந்த போது புலிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு தயாரானார்கள்.

ரோந்து அணிக்கு குறி

வல்வெட்டி துறைக்கு அருகே உள்ளது நெடிய காடு.

ஆகஸ்ட் 5திகதி நெடிய காடு பகுதியில் கமோண்டோ படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

மூன்று கவச வண்டிகள். ஒரு ட்ரக் ஒரு ஜீப் சகிதம் ரோந்து அணி சென்று கொண்டிருந்தது.

பிரதான் வீதிகளில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்து விட்டு புலிகள் காத்திருந்தனர்.

நிலக்கண்ணிவெடி புதைக்கப்பட இடத்தைக் கடக்கமுற்பட்ட ஜீப் வண்டி சிதறியது.

ஜீப் வண்டியில் ஒன்பது கமோண்டோக்கள் கொல்லப்பட்டனர். உதவிப் பொலிஸ் ஜயரட்ண என்பவரும் மாண்டுபோனார்.

இதனையடுத்து படையயினரின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன.

அதே சமயம் முல்லைதீவில் உள்ள ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகளின் ஒரு பிரிவு நகர்ந்தது.

தொடரும்…

அற்புதன் எழுதுவது..

 

தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சீலன்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -29

பிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28

Share.
Leave A Reply