அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது.
ஆறு வருடங்களிற்கு பின்னரும் வடக்கு ஸ்திரத்தன்மையற்றதாக, பதட்டம் மிகுந்ததாக காணப்படுகின்றது, ஆகவே அதனை கட்டுப்படுத்த வலுவான இராணுவபிரசன்னமும், உறுதியான ஓருவரும் தேவை என்ற உணர்வை உண்டாக்குவதற்கு சில அரசியல்சக்திகள் முயல்கின்றன என்ற குற்றச்சாட்டை யாழ்ப்பாணத்தில் காணமுடிகின்றது என தேசிய சமாதான பேரவையின் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரன் வருமாறு (தமிழில் நமது செய்தியாளர்)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து யாழ்பாணத்திலும் அதற்கு வெளியேயும் பலவகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறிய சிங்களவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக எதிர்கட்சி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வடக்கில் இராவணுவத்தை விலக்கிக்கொள்வதாலும பொலிஸாரிடம் பாதுகாப்பு கடமைகள் ஓப்படைக்கப்பட்டுள்ளதாலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்னமும் பிரிவினை கனவுகளுடன் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் உயிர்த்தெழ முயலும் புலிகளின் நடவடிக்கையாக இதனை காண்போரும் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்தபோது மத்தியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கை இரும்பக்கரங்களுடன் ஆண்ட காலம் மீண்டும் அவசியம் என்ற கருத்தும் சிலரிடம் காணப்பட்டது. எனினும் வடக்கில் காணப்படும் யதார்த்தம் இதுவல்ல,அந்த மக்களின் விருப்பமும் இதுவல்ல.
அங்கு காணப்பட்ட குழப்பங்களுக்கு இரு தினங்களுக்கு பின்னர் நான் புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்றேன்.
நான் அங்கு சென்ற தினமே ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தடைசெய்யப்பட்டிருந்தன.
யாழப்பாணத்தின் அப்பகுதியின் தொலைக்காட்சி படங்களை பார்த்தவர்கள், நகரம் முழுமையாக வெறிச்சோடியுள்ளது, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த நகரம் உள்ளது என சிந்திக்கலாம்.
வீதிகளில் பெருமளவு இராணுவத்தினரை காணமுடிந்தது, ஆனால் அவர்கள் ஏனையபகுதிகளில் பாதிக்கப்படாதிருந்த பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிடுவதற்கு முயலவில்லை. அவர்களுடைய பிரசன்னம் அப்பகுதி மக்களுக்கு பழகிவிட்டது போல தோன்றியது.
நானும் எனது முஸ்லீம் சகாவும் ஹோட்டல் ஓன்றிற்கு உணவருந்த சென்றோம், அங்கிருந்த ஒருவரிடம் தமிழில் உரையாடுமாறு நான் எனது சகாவை கேட்டேன், எங்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது அந்த நபர் மாத்தறை சிங்களவர்,
பேக்கரிபொருடக்ளின் விலை யாழ்ப்பாணத்தில் அதிகம் என்பதால் அங்கு தங்கிவிட்டதாகவும், வீடுவீடாக மோட்டார்சைக்கிளில் சென்று தனது உற்பத்திகளை விற்பதாகவும், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தான் இந்த வியாபாரத்தை ஆரம்பித்த வேளை தங்களுக்கு எதிர்ப்பு காணப்பட்தாகவும் தற்போது அவ்வாறு எதுவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் செயற்பாடின்மை
யாழ்ப்பாணத்தின் சிறிய தீவுகளில் மாணவி ஓருவர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதனாலேயே இந்த குழப்பநிலை உருவானது.
தங்களது மகளை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு செய்தபோதிலும் தாமதமாகவே செயற்பட்ட பொலிஸார் மீதே மக்களின் ஆரம்ப சீற்றம் காணப்பட்டது.
நாட்டின் ஏனயை பகுதிகளை போல அந்த சமூகத்திற்குள்ளும் பொலிஸார் வேகமாகவும் சிறந்த விதத்திலும் செயற்படாதது குறித்து விரக்தி காணப்படுகின்றது.
தங்களது மகள் காணமற்போய்விட்டது குறித்து அந்த குடும்பத்தினர் முறையிட்டவேளை பொலிஸார் அதனை மிகவும் சாதரணமாக எடுத்துள்ளதுடன் அவர் தனது காதலனுடன் சென்றிருப்பார் என குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் உடனடியாக செயற்பட்டிருந்தால் அந்த மாணவியின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்பதே பாதிக்கப்பட்ட சமுகத்தின் கருத்து.
குறிப்பிட்ட மாணவி வழமையாக பாடசாலைக்கு செல்லும் பாதையில் சென்று அந்த மாணவியின் சகோதரனே அவரது உடலை கண்டுபிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
தங்கள் வீடுகளில் கொள்ளைகள் இடம்பெறுகின்ற போதும், தங்கள் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்ற போதும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என நீண்ட காலமாகவே யாழ்ப்பாண மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பொலிஸார் குற்றவாளிகள் என அவர்கள் தெரிவிக்காத அதேவேளை அவர்கள் குற்றவாளிகளுடன் நட்பை பேணுகின்றனரா அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகின்றனரா என்ற சந்தேகம் அந்த மக்கள் மனதில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலும், வடக்கிலும் பணியாற்றும் பொலிஸாரில் அனேகமானவாகள் சிங்களவர்கள் என்பதும் பொலிஸாரின் குறைகள் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த மக்கள் சீற்றமடைவதற்கான இன்னொரு காரணமாக காணப்படுகின்றது.
ஐரோப்பா போன்ற அதிகளவு ஜனநாயகம் நிலவும் நாடுகளில் பொலிஸார் குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளிருந்தே சேர்க்கப்படுகின்றனர்.
பொதுமக்களை பாதுகாக்கும் விடயத்தில் சட்டஅமுலாக்கல் பிரிவினர் சிறப்பாக செயற்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்த்தால் போன்றவைகளை சிவில் அமைப்புகளே ஏற்பாடு செய்ததாக சிவில் சமூகத்தினர் என்னிடம் தெரிவித்தனர்.
எனினும் இவர்கள் வன்முறைகள் எவற்றையும் திட்டமிடவில்லை(நீதிமன்ற கட்டிடத்தின் மீது கல்வீச்சு) எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், கற்களை வீசி வன்முறையில் ஈடுபட பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
என்னுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்ட சிவில் சமூகத்தினர், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பின்னால் அரசியல் சக்தியொன்று காணப்பட்டதாக குறிப்பிட்டனர்.
அரசியல் நோக்கங்கள்
செப்டம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கமொன்று காணப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததை தொடர்ந்தும், பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்றது என்பதற்கான அறிகுறிகள் வேகமாக தெரியத்தொடங்கியதும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடங்கின.
அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது.
ஆறு வருடங்களிற்கு பின்னரும் வடக்கு ஸ்திரத்தன்மையற்றதாக, பதட்டம் மிகுந்ததாக காணப்படுகின்றது, ஆகவே அதனை கட்டுப்படுத்த வலுவான இராணுவ பிரசன்னமும், உறுதியான ஓருவரும் தேவை என்ற உணர்வை உண்டாக்குவதற்கு சில அரசியல்சக்திகள் முயல்கின்றன என்ற குற்றச்சாட்டை யாழ்ப்பாணத்தில் காணமுடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் நாட்டையும், படையினரையும் காட்டிக்ககொடுக்காத தலைமைத்துவமொன்று அவசியம் என்பதை புலப்படுத்துகின்றன, வடபகுதி மீதான படையினரின் கட்டுப்பாட்டினை தளர்த்தக்கூடாது என கருத்து தெரிவித்த தேசியவாத அரசியல்வாதிகள் சிலர் உள்ளனர்.
வடபகுதியில் வலுவான இராணுவபிரசன்னம் வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுவோர்,மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் முக்கியமான சாதனைக்கே சவால் விடுகின்றனர்- வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை எற்படுத்தியதே அந்த சாதனை.
இராணுவ ஆளுநர்களை அகற்றி விட்டு சிவில் அதிகாரிகளை நியமித்ததன் மூலமாக அவர் அதனை செய்தார்.
இதன் காரணமாக வடக்குகிழக்கின் சமூக வாழ்க்கையில் காணப்பட்ட அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் நீங்கின.
முன்யை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சில காலத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தது- தெற்கிலும் வடக்கிலும்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தொழிலாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போதும், ரத்பல்வெலவிலும் இதனை காணமுடிந்தது.
இரண்டு தடவையும் மக்களை கலைக்க இராணுவம் பயன்படுத்தப்பட்டது. உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனினும் இம்முறை யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் வன்முறைகள் உயிரிழப்பு எதுவுமின்றி ஆர்ப்பாட்டங்களை முடிவிற்கு கொண்டுவந்தது.
சட்டஓழுங்கை சீhகுலைப்பதை அனுமதிக்கப்போவதில்லை என காண்பித்த அரசாங்கம் 130 பேரை கைதுசெய்துள்ளது. இவர்களில் பலர் அங்கு அமைதியான வழியில் தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தவர்கள் என சிவில்சமூக பிரதிநிதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் அவர்களை விரைவில் விடுதலைசெய்யும் என எதிர்பார்க்கின்றோம்.