10ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்ட டீச்சர்.
இது தொடர்பில் பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் தெரியவருவது என்னவெனில் இதில் இடம் பெறும் திருமணம் அல்லவாம் ஆனால் குடும்ப வழக்கம் எனவும் ஆனால் இதனை சிலர் தவறுதலாக திருமணம் எனக் கூறுவதாகவும் அப்பகுதி முக நூல் பதிவுகள் கூறுகின்றார்கள் எது உண்மை புரியவில்லை.
முகநூலில் ஒரு செய்தி வருகிறதென்றால் அதன் உண்மை தன்மையை அறியாமல், அதைப்பற்றி தீர விசாரிக்காமல் வரம்புமீறி வதந்தியை பரப்பும் முகநூலின் வக்கிர போராளிகளே…..
ஒரு பொண்ணும் , ஒரு ஸ்கூல் பையனும் மாலையோட இருக்கிறமாதிரி வந்த போட்டோவ போட்டு முகநூல் முழுக்க அவங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதா புரளிய கிளப்பி…. லம்ப்பா லைக்க கல்லா கட்டிட்டு, அடுத்த புரளிக்காக காத்திருக்கும் போராளிகளே அதன் உண்மையை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த படத்திலுள்ள திருமண பெண் தங்களுடைய குலவிளக்கப்படி கோவிலை சுற்றும்போது தம்முடைய தம்பியுடன் கையை பிடித்து கோவிலை சுற்ற வேண்டும் என்பது அவர்களின் சம்பிரதாயமாம்….
அந்த சம்பிரதாயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாம் அது…. அதையே அவர்களின் கல்யாண ஆதாரமாக சித்தரித்து அருவெறுப்பான வார்த்தைகளால்.. ச்சே, இந்த பாவத்த எல்லாம் எங்கய்யா கொண்டுபோய் கழுவப்போறீங்க!!!.
யார் யார் வதந்தியை பரப்பினீர்களே அவர்கள் அனைவரும் மறுப்பு வெளியிடுங்கள், தீமையை பரப்பியபோது காட்டிய முக்கியத்துவத்தை உண்மையை சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்….
குறைந்தபட்சம் அந்த படங்களையாவது நீக்குங்கய்யா… நம்ம வீட்டுலயும் பொம்பளை புள்ளைக இருக்காங்கய்யா…..!!!