இரு பெண்­களைத் திரு­மணம் செய்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிமாரையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்­பத்­த­க­ராறு அதி­க­ரித்­த­மை­யினால் வாழ்வில் விரக்தி­யுற்று தனது உடலில் மண்­ணெண்­ணையை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டி மர­ணத்தை தழு­வியுள்ளார். இந்த பரபரப்பு சம்­பவம் இலங்கைல் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு மர­ண­மா­னவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். இவ­ரது மரண விசா­ர­ணையை மாவட்ட மர­ண­வி­சா­ரணை அதி­காரி மேற்­கொண்டார்.

கிளி­நொச்­சியில் முதல் மனை­வியும் மூன்று பிள்­ளை­களும் இருக்க யாழ். கோண்­டாவில் இன்­னு­மொரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருந்தார் எனவும் இதனால் இரு குடும்­பங்­க­ளி­டை­யேயும் பிரச்­சினை அதிக­ரிக்க ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற இவர் பாழ­டைந்த கட்­டடம் ஒன்­றிற்குச் சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரைத் தாக்கிய இருவர் கைது
2604.2015

094f80ef6efeba407edd96c9cc4ad517யாழ்ப்பாணம், மருதங்கேணி, உடுத்துறை பகுதியில் மருதங்கேணி உப பொலிஸ் நிலைய பொலிஸாரை  தாக்கிய இரண்டு சந்தேகநபர்களை திங்கட்கிழமை (25) கைது செய்ததாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் ஒருவரைக் கைது செய்யும் பொருட்டு, பொலிஸார் சிலர் சனிக்கிழமை (23) இரவு அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். கைது செய்ய வந்த பொலிஸாரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து, அடித்ததுள்ளதுடன் பொலிஸ் வாகனத்தையும் உடைத்து பொலிஸாரைத் துரத்தியுள்ளனர்.

மேலதிக பொலிஸார் மற்றும் ஆயுதங்களுடன் பொலிஸார் மீண்டும் சென்ற போதும், அந்தக் கும்பல் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் பொலிஸார் இழுபறிபட்டதில் பொலிஸார் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து வயோபதிபர் படுகாயமடைந்தார்.

அவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து திங்கட்கிழமை (25) யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என முதியவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (25) இராணுவத்தினருடன் அங்கு சென்ற பொலிஸார், 2 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Share.
Leave A Reply