வெளியாகிய அதிர்ச்சி தகவல்!: சென்ற வாரம் வாகனம் ஒன்றில் இருந்து பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலர் கைதுசெய்யப்பட்டது அறிந்ததே,

அதுருகிரிய – அரங்கல – கஹத்தோட வீதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் இரவு வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதுவேன் ஒன்றில் சடலத்துடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பிலியந்தல பகுதியில் வைத்து கைதாகியுள்ளனர்.

காலி – பொத்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதான இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற பிரசாத் ஜானக என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சடலமாக மீட்கபட்டவர் அவரின் சகோதரனாலும் மேலும் இருவராலும் வீடொன்றில் வைத்து தாக்கி டயரை வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் ,

அன்று இரவு சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட வாகனத்தை நிறுத்திய போலீசார் அதில் பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றியபோது சந்தேக நபர், போலீசாருக்கு வாகனத்தை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முயற்சித்தபோதும் அவர்கள் அதனை வாங்க மறுத்து கைது செய்துள்ளனர்.

அதேவேளை, எனது தம்பிக்கு என் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. அன்று இரவு எனது தம்பி என் மனைவியை கள்ளத்தனமாக வீட்டிற்கு வந்து சந்தித்து இருவரும் ஒன்றாக இருந்ததை என்னால் தாங்ககிக்கொள்ள முடியவில்லை.

அதனால் அவனை நான் தடி ஒன்றால் அடித்துக் கொன்றேன். ஆனால் சடலத்தை எங்காவது போட்டால் மாட்டிக் கொள்வோம் என்றுதான் நண்பர்களுடன் உதவியுடன் எரித்தேன்.

இருந்தும் சடலத்தை முழுமையாக எரிக்க முடியாமல் போனதால் அதனை எங்காவது புதைக்க எடுத்துச் செல்லும் வழியிலே போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன் என சந்தேக நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சடலத்தை கொண்டு சென்ற வாகனம் இன்னும் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தபட்டு உள்ளது.

Share.
Leave A Reply