கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தவென அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிளிநொச்சி – பரந்தன் – சிவபுரம் பகுதியில் 25ம் திகதி 7 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி அதன்சூடு இன்னும் தனியாத நிலையில் கிளிநொச்சியில் சிறுமி ஒருவருக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாக வௌியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
சிறிதரன் எம்.பிக்கு இந்தவிடயம் தெரியுமா? சிறிதரன் எம்.பி தன்னுடைய தொகுதியில்…. வாழும் ஏழைச் சிறுமிகளுக்கு என்ன நடந்தாலும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.
வித்தியாவுக்காக அழுதுவடித்த தமிழ் அரசியில்வாதிகள் இந்த 7 வயது சிறுமிக்காக குரல்கொடுப்பார்களா?
இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம். துவிச்சக்கர வண்டி மகேந்திரா பிக்கப்புடன் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கணேஸ் சர்பேஸ்வரன். வயது 32,வட்டக்கச்சி இராமநாதபுரம், 6ம்யூனிற்றை சேர்ந்தவராவார் .