நேரம் படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா.
தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிரபல இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
பகத் பாசில் தனது மனைவி நஸ்ரியாவுக்கு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கொச்சி சென்று விட்டு நஸ்ரியா தனது காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, அருகில் பயணித்த மற்றொரு வாகனம் அவரது காரில் உரசிவிட்டது.
இதனால் கோபமடைந்த நஸ்ரியா, அந்த காரில் வந்தவரிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வீதியில் சென்றவர்கள் நடிகை நஸ்ரியாவைக் கண்டதும் வேடிக்கை பார்க்கக் குவிந்துவிட்டதால், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டது.
இதனைக் கண்ட பொலிஸார் நஸ்ரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
நஸ்ரியா வீதியில் சண்டையிட்ட புகைப்படம் பேஸ்புக்கில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.