கண்ணாடியில் தங்களின் பிரதிபலிப்புகளை பார்க்கும் காட்டு விலங்குகளின் அட்டகாச எதிர்வினைகள் அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 79 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் சேவியர் ஹூபர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள காபோன் நாட்டிற்கு சென்று விலங்குகளை படம் எடுக்க முடிவு செய்தனர்.

ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு பெரிய கண்ணாடியை அடர்ந்த காட்டின் நடுப்பகுதியில் வைத்துவிட்டு மறைந்திருந்து வீடியோ எடுத்தனர்.

இந்த வீடியோவில் பல சுவாரசியமான சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதில் சிறுத்தை மரத்தில் ஏறி, பதுங்கி கண்ணாடியை தாக்குகிறது.

கொரில்லா ஒன்று தன் உருவத்தின் மீதே தாக்குதல் நடத்துவது என பல சுவாரசிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஆனால் ஒரு கண்ணாடியை அடர்ந்த காட்டின் நடுப்பகுதியில் வைத்து விலங்குகளுக்கு தொல்லை தருவது சரியா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Share.
Leave A Reply