கீரிமலை கவுணாவத்தை வைரவர் ஆலயத்தில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கன் வெட்டி வேள்வி நடைபெற்றது. சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் வேள்வி இன்று அதிகாலை நடைபெற்றது.
இன்றைய வேள்வியில் சுமர் 500 இற்கு மேற்பட்ட கடாக்கள் வெட்டப்பட்டன. நள்ளிரவில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது.
ஆலய வாயிலில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் பார்வையிடா வண்ணம் இம்முறை கடாக்கள் வெட்டப்பட்டன.
கடாக்கள் வெட்டும் இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் நின்று கடாக்களைப் பரிசோதித்து வெட்டுவதற்கு அனுமதித்தனர். ஒவ்வொரு கடாக்களும் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு கொண்டுசெல்லப்பட்டன.