‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த நடிகை ஆர்த்தி அகர்வால் நியூ ஜெர்ஸியில் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உடல் நலன் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்த்தி அகர்வால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

agarwal-600x300இது குறித்த தகவல் அறிந்து தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.  உடலை குறைக்க பயன்படுத்தும் லிப்போசக்‌ஷன் முறையால் தான் அவருக்கு பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் நடித்து வெளியான ரனம் 2 படம் வெள்ளியன்று வெளியான நிலையில், அவர் சனிக்கிழமை மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி தெலுங்கு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

30 வயதே ஆன ஆர்த்தி அகர்வால் மரணத்துக்கு, இணையதளம் மூலம் ஏராளமான இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.

இதே லிப்போசக்‌ஷன் முறையை பல நடிகைகள் மட்டுமின்றி , மேல்தட்டு பெண்கள் , ஆண்கள் என   உடலைக் குறைக்க பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply