சொரி­யாசிஸ் என்­பது தோல் அழற்சி நிலை­யாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறு­வார்கள்.

இந்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய தோல் மீனின் செதில் போல் இருப்­பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்­பார்கள்.

சொரி­யா­சிஸின் வகைகள்

சொரி­யாசிஸ் வல்­கெரிஸ் (soriasis vulgaris): இது பொது­வாக அதி­க­ளவில் காணப்­படும் வகை­யாகும் . சிவந்த தட்டை வடி­வ­மாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்­ப­டு­கி­றது. இந்த பகு­திகள் பிளேக்ஸ் என்று அழைக்­கப்­ப­டு­கின்­றன.

நேர்­மா­றான தடிப்புத் தோல் அழற்சி

(inverse psoriasis): இது பொது­வாக இனப்­பெ­ருக்க உறுப்­பு­களின் கீழே , மார்­பு­களின் கீழ் இடங்­களில் ஏற்படும்.

உராய்வு மற்றும் வியர்­வையின் கார­ணத்­தினால் இதன் தாக்கம் அதி­க­ரிக்கும். மேலும் பூஞ்சைத் நோய்த் தொற்­று­க­ளினால் (Fungus) பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இதன் மூலம் அதி­க­ரிக்­கி­றது.

கை, கால் நகங்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்கு ‘நெயில் சொரி­யாசிஸ் (Nail) என்றும் எலும்பு, மூட்டு எலும்பு பகு­தியில் ஏற்­படக் கூடிய பாதிப்­புக்கு ‘சொரி­யாடிக் ஆர்த்­தோ­பதி’ என்றும் உள்­ளங்கை, உள்ளங்கால் பகு­தி­களில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்கு பாமோ ப்ளான்டர் (Palmo-plantor) என்றும் பெயர்.

உடல் பாகங்­களில் கொப்­பு­ளங்­களை போன்று தோன்றும் சொரி­யாசிஸ் பாதிப்­புக்கு ‘பஸ்­டுலர் (pustular) சொரி­யாசிஸ்’என்று பெயர்.

பஸ்­டுலர் சொரி­யாசிஸ் பாதிப்பு ஏற்­பட்­ட­வர்கள் முறை­யான சிகிச்சை எடுத்­துக்­கொள்­ளா­விட்டால் உயி­ரி­ழக்கும் அபா­யமும் உண்டு.

காரணம் என்ன?

*மர­பணு மற்றும் சுற்­றுக்­சூழுல் கார­ணிகள்

*வைரஸ் அல்­லது பக்­டீ­ரியா தொற்­றுக்கள்

*உடல் பருமன்

*புகைப்­பி­டித்தல்

*கட்­டுப்­பா­டற்ற மன அழுத்தம்

தவ­றாக நோய் எதிர்ப்­பு­சக்தி தூண்­டப்­ப­டு­வதும் இதற்கு கார­ண­மாக அமை­கி­றது என்று ஆராய்ச்­சி­யா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

மன அழுத்தம் கார­ண­மாக லித்­தியம் (Lithium) போன்ற மருந்­து­களை உட்­கொள்­வதன் மூலம் இந்த நோய் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

மேலும் இரத்த அழுத்­தத்­திற்கு உட்­கொள்ளும் மருந்­தான Beta blockers போன்ற மருந்­துகள் மூலமும் இந்நோய் ஏற்­ப­டு­கி­றது.

அறி­கு­றிகள்

மீனின் செதில்­களைப் போன்று தோல் உரி­வது.

தலை, கண் இமை , முழங்கை, முழங்கால் போன்ற உடலின் பல பாகங்­களில் சிவப்பு அல்­லது வெள்ளை நிறங்­களில் திட்டு ஏற்­பட்டு அரிப்பு ஏற்­படும்.

உள்­ளங்கை மற்றும் உள்­ளங்­கால்­களில் பிளேடால் வெட்­டி­யது போன்ற வெடிப்பு, தோல் உரிதல் அரிப்பு, நகச்­சொத்தை, மூட்­டு­களில் வலியும் வீக்­கமும் ஏற்­பட்டு மூட்­டுகள் கோண­லாகும்.

மூட்­டு­களை மடக்க இய­லாமை போன்­றவை சொரி­யாஸிஸ் நோயின் அறி­கு­றி­க­ளாகும்.

சிகிச்­சைகள்

சொரி­யாசிஸ் பாதிப்பின் தீவி­ரத்தைப் பொறுத்து இதற்கு சிகிச்­சைகள் அளிக்­கப்­ப­டு­கின்­றன.

பாதிப்பு குறை­வாக இருந்தால் ‘corticosteroid போன்ற வெறும் தட­வக்­கூ­டிய மருந்­து­களை வைத்தே சரிசெய்­து­வி­டலாம்.

விற்றமின் ’டி’யில் சொரி­யாசிஸ் நோயின் வளர்ச்­சியை குறைக்கும் சத்­துக்கள் அதி­க­மாக உள்­ளன. எனவே, மித­மாக சொரி­யாசிஸ் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு விற்றமின் டி நிறைந்த கல்­சி­பொட்­ரீனி (calcipotriene) என்ற மருந்து பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.

இந்த மருந்தை பயன்­ப­டுத்­து­வதால் தோல்­களில் எரிச்சல் ஏற்­ப­டக்­கூடும் . எரிச்சல் ஏற்­ப­டாமல் இருக்க ­வேண்டுமென்றால் இதற்கு நிக­ரான கல்­சி­டீயோல்(Calciodosis) என்ற மருந்தை பயன்­ப­டுத்­தலாம். ஆனால் இதன் விலை அதிகம்.

மேலும் அந்­த­ர­லின்­என்ற மருந்து நமது தோல்­களில் உள்ள அணுக்­களில் ஏற்­படும் டி.என்.ஏ. செயல்­பா­டு­களை இயல்­பாக வைக்க உதவும் என்றும் நம்­பப்­ப­டு­கி­றது.

சூரிய கதிர்­வீச்­சினால் பாதிக்­கப்­பட்ட தோல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் ரெட்­டினொய்ட்ஸ் வகையை சேர்ந்த டாஸா­ரொடின்   மருந்தும் சொரி­யா­சிஸை   குணப்­ப­டுத்த பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

எனினும், இந்த மருந்தை பயன்­ப­டுத்­து­வ­தால்­ சூ­ரிய கதிர்வீச்சினால் பாதிக்கப்படக் கூடும் என்பதால் சன்ஸ்கிரீன் லோசன்ஸ் (sunscreen lotions) பயன்படுத்துவது நன்று.

எனினும் சொரியாசிஸை நிரந்தரமாக குணப்படுத்துவது என்பது கடினம், மேலும் அதிகப்படியான சொரியாசிஸ் பாதிப்பு இருக்குமேயானால், தகுந்த மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது நன்று.

Share.
Leave A Reply