டெல்லி: இருப்பதிலேயே போரான திருமணம் என்ற பெயரில் கலாட்டா வீடியோ ஒன்று இணையதளத்தில் பிரபலமாகியுள்ளது. திருமண வீட்டில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி போஸ் கொடுங்கள், அப்படி போஸ் கொடுங்கள் என்று அவர்கள் மணமக்களை படாதபாடு படுத்திவிடுகிறார்கள்.
இதனால் புகைப்படக்காரர்களை கண்டாலே மணமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் ஒரு கல்யாண வீடியோ பிரபலமாகியுள்ளது. அந்த வீடியோ விவரம் வருமாறு,

05-1433484851-wedding6

புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்கள் சுற்றி நிற்க மாப்பிள்ளை எந்தவித மகிழ்ச்சியும் இன்றி மணமகளின் கழுத்தில் மாலை போடுகிறார். மாலை அணிவித்த பிறகும் அவர் முகத்தில் பெயருக்கு கூட சிரிப்பை பார்க்க முடியவில்லை. புகைப்படக்காரர்களின் சேட்டையால் கடுப்பாகிவிட்டார் போன்று.
05-1433484840-wedding4566

அத்தனை கூட்டத்திற்கு முன்பு வெட்கத்தோடு மணமகள் மாப்பிள்ளை கழுத்தில் மாலையை போட அது தலைப்பாகையில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்த புகைப்படக்காரர் மாலையை எடுத்து மணமகள் கையில் கொடுத்து மீண்டும் அணிவிக்குமாறு கூறினார்.
05-1433484831-wedding5667

மணமகள் மீண்டும் மணமகனுக்கு மாலை அணிவிக்க அது அவரது தலைப்பாகையில் சிக்கிக் கொண்டது. இப்படியே விட்டால் புகைப்படக்காரர்கள் மீண்டும் மணமகளை மாலையிட செய்வார்கள் என்று ஆத்திரம் அடைந்த மணமகன் மாலையை அறுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

 

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அடப்பாவமே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவர்களின் சேட்டைக்கு ஒரு அளவே இல்லையா? அநியாயமாக ஒரு கல்யாணத்தில் குழப்பம் செய்துவிட்டார்களே என்கிறார்கள்.

Share.
Leave A Reply