இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் பங்கேற்றதால் நயன்தாராவின் அழகு மங்கிவிட்டதாம். பொலிவிழந்து, வசீகரம் குன்றிய நயன்தாராவைக் கண்ட அவரது ரசிகர்களின் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
உடல் மெலிந்து காணப்படும் நயன்தாராவைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். எனவே பழைய பொலிவைப் பெற மூலிகைச் சிகிச்சைக்கு போகப்போகிறாராம் நயன்தாரா.
‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் சமீபத்தில் முடிந்துள்ளது.
படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருடன் நயன்தாராவும் அருகில் இருந்தார்.
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா நயன்தாராவை போட்டோவில் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சிகள், விக்னேஷ் சிவனின் தோளில் கைபோட்டபடி நயன்தாரா போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதிர்ச்சிக்குக் காரணம் அதுவல்ல.
நயன்தாராவா இப்படி
அந்த புகைப்படத்தில் நயன்தாராவை பார்த்த பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதில் நயன்தாரா முந்தைய படங்களில் இருந்ததைவிட இந்த படத்தில் அப்படியே உருமாறிப் போயுள்ளார்.
வசீகரம் இல்லையே?
நயன்தாராவின் பழைய பொலிவு, வசீகரம் எதுவும் இல்லை. உடல் மெலிந்து, அழகும் மங்கிப்போய் காணப்பட்டார். இரவு பகல் பாராமல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துவிட்டதாக தெரிவித்தனர் படக்குழுவினர்.