அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பாகுபலி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நடிகைகளான அனுஷ்கா, தமன்னா மற்றும் நடிகர்களில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர் போன்றோரும் கலந்து கொண்டனர்.
மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார். இதில் நடிகை அனுஷ்கா எப்போதும் போன்று அழகாக புடவையிலும், நடிகை தமன்னா லெஹெங்காவிலும் வந்திருந்தனர்.
மேலும் இந்த இசை வெளியீட்டில் இவர்கள் இருவரில் யாரைக் காண்பதென்று புரியாத அளவில் பளிச்சென்று அழகாக காணப்பட்டனர்.
இங்கு திருப்பதியில் நடந்த ‘பாகுபலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
புடவையில் அனுஷ்கா
அனுஷ்கா கோல்டன் பார்டர் கொண்ட வெள்ளை புடவை அணிந்து, முழு கை கொண்ட கோல்டன் பிரிண்ட் செய்யப்பட்ட கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து அழகாகவும், அம்சமாகவும் வந்திருந்தார்.
அனுஷ்காவின் மேக்கப்
அனுஷ்கா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு காஜல் என அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.
அனுஷ்காவின் ஹேர் ஸ்டைல்
அனுஷ்கா, புடவையில் அம்சமாகவும், சற்று ஸ்டைலாகவும் காணும் படி, சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
அனுஷ்காவின் ஆபரணங்கள்
அனுஷ்கா காதுகளுக்கு நீளமான காதணியையும், கைகளுக்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வளையல்களையும் அணிந்து அணிந்து வந்திருந்தார்.
தமன்னாவின் மேக்கப்
தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், அதிகமாக மேக்கப் போடாமல் அளவாக பிளஷ் அடித்து, உதடுகளுக்கு அளவாக லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.
தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், அதிகமாக மேக்கப் போடாமல் அளவாக பிளஷ் அடித்து, உதடுகளுக்கு அளவாக லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.
தமன்னாவின் ஹேர் ஸ்டைல்
தமன்னா இந்த லெஹெங்காவிற்கு கொண்டை போட்டு வந்தது, அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.
தமன்னா இந்த லெஹெங்காவிற்கு கொண்டை போட்டு வந்தது, அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.
தமன்னாவின் ஆபரணங்கள்
தமன்னா காதுகளுக்கு நீல நிற கற்கள் பதிக்கப்பட்ட கம்மலையும், கை விரல்களுக்கு மோதிரங்களையும் அணிந்து வந்திருந்தார்.
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் கோல்டன் புள்ளிகள் வைக்கப்பட்ட க்ரீம் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்ட பெரிய சிவப்பு நிற வட்ட பொட்டு, அழகான கழுத்தணி மற்றும் அளவான மேக்கப் அம்சமான தோற்றத்தைக் கொடுத்தது.