சிலந்தியின் மேல் ஜென்மப்பகை இருப்பவர்களும் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களும் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சமூக வலைதளங்களில் வாழைப்பழத்திலிருந்து வெடித்து வெளியே வரும் இந்த ராட்சத சிலந்தியின் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

”நான் வாழைப்பழம் சாப்பிட நினைத்தேன். ஆனால் அதில் என்னவோ இருந்தது. நல்ல வேளை கடைசியில் ஆப்பிள் சாப்பிட்டேன்.” என்று மஜா படத்தில் வரும் வடிவேலுவின் பாணியில் இந்த வீடியோவை எடுத்த நபர் கிச்சுகிச்சு மூட்டினாலும், வீடியோவைப் பார்த்த சிலர் இனி வாழைப்பழமே சாப்பிட மாட்டேன் என்று சபதமெடுக்க, இன்னும் சிலரோ இது டுபாக்கூர் வீடியோ என்று கமெண்ட் தட்டுகின்றனர்.

Share.
Leave A Reply