விமானம் டேக் ஆப் ஆகும் காட்சியை நாம் பல முறை பார்த்திருப்போம். சிறிது சிறிதாக விண்ணில் உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் சீரான வேகத்தில் பறக்கத் தொடங்கும்.
ஆனால் புறப்பட்ட சில நொடிகளுக்குள்ளாகவே 90 டிகிரி செங்குத்தாக ஒரு விமானம் டேக் ஆப் ஆவதை இதற்கு முன் நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா?
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஏர் ஷோ-வில் பங்கேற்பதற்காக Boeing Dreamliner 787-9 விமானத்தின் பைலட் குழு மேற்கொண்ட சாகச ஒத்திகை வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து இந்த வீடியோ வெற்றி நடை போட்டு வருகிறது.
உங்களுக்காக அந்த வீடியோ:-