திருகோணமலை கட்டைப்பறிச்சான் அகதிமுகாம் மக்கள் பெரும் அசௌகரியங்களின் மத்தியிலே தமது வாழ்கையை முன்னெடுத்துவருகின்றனர்.
திருகோணமலை சம்பூரிலிருந்து 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த மக்கள் மூதூரில் உள்ள நான்கு அகதிமுகாம்களில் வசித்து வருகின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் அகதிமுகாம் வாழ்க்கையை இந்த மக்கள் அனுவித்து வருகின்றனர்.
தகரக் கூடாரங்களில் வசிக்கும் தாம் கோடைக் கால உஸ்ணத்தால் பெரும் அவதிக்குள்ளாவதாக கட்டைப்பறிச்சான் மக்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள், வயோதிபர் என அனைவரும் தகரக் கூடாரங்களின் கீழ் இன்னலின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குடிநீர், மலசலகூடம் என அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதிலும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக இந்த மக்கள் கூறுகின்றனர்.
விரைவில் தமது சொந்த நிலத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அங்கு நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் வாழ்வு குறித்த கனவோடு காத்திருக்கின்றனர் திருகோணமலை கட்டைப்பறிச்சான் அகதிமுகாம் மக்கள்.