என் கொண்­டையை அவிழ்க்­காமல் எனக்கு தலை­க்க­வசம் போட்டு விடுங்கள் என்று கோவையைச் சேர்ந்த சிவ­ன­டியார் ஒருவர் பொலி­ஸா­ருக்கு சவால் விடுத்­து­வ­ரு­கிறார் .

தமி­ழகம் முழு­வதும் நேற்­று­முன்­தினம் முதல் தலை­க்க­வசம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள நிலையில், தலை­க்க­வசம் அணி­வதை எதிர்த்தும், அதி­லி­ருந்து விலக்­க­ளிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்­றனர்.

அதன்­படி கோவையில் சித்தர் வழி­பாட்டில் ஈடு­பட்டு வரும் செந்தில் குமார் என்­பவர் சிவ­ன­டி­யார்கள் போல் முடியை கட்டி கொண்டை போட்­டுள்ளார்.

helmadசித்தர் என்­பதால் முடியை அவிழ்க்க முடி­யாது எனச்­சொல்லும் இவர், தலைக்­க­வசம் இல்­லாமல் ஓட்­டினால் ஆவ­ணங்கள் பறி­முதல் செய்­யப்­படும் என்பதால் கையில் தலைக்­க­வ­சத்­துடன் பயணிக்கும் இவர் வாகன சோத­னையில் ஈடு­படும் பொலி­ஸா­ரிடம் ‘என்­னிடம் தலை­க்க­வசம் உள்­ளது.

ஆனால், என்னால் அணிய முடி­ய­வில்லை. முடிந்தால் எனக்கு தலை­க்க­வசம் போட்டுவிடுங்கள்’ என சவால் விடுக்­கிறார். பொலிஸார் முயன்றும் இவ­ருக்கு தலை­க்க­வசம் போட முடி­ய­வில்லை.

Share.
Leave A Reply