புளோரிடாவில் தனது பள்ளித்தோழியினை நீதிபதியாக பார்த்த குற்றவாளி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரியாவின் மியாமியை சேர்ந்த ஆர்த்தூர் பூத்(Arthur Booth- Age 49) என்ற நபர் தொடர் கொள்ளை, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு நடைபெற்ற வழக்கில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது.

இந்த வழக்கை விசாரிக்க நீதிபதியாக வந்த பெண்மணி Glazer என்பவர், இந்த குற்றவாளியின் பள்ளிப்பருவத் தோழியாவார்.

ju_au_001ஆர்த்தூரை குற்றவாளி கூண்டில் பார்த்து அதிச்சியடைந்த நீதிபதி, உங்களுக்கு என்ன நடந்தது, ஏன் இவ்வாறு மாறிவீட்டீர்கள்.

மேலும், பள்ளிப்பருவத்தில் நீங்கள் சிறந்த மாணவராக விளங்கினீர்கள், உங்களுடன் இணைந்து நான் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளேன்.

ju_au_002உங்களை இப்படி குற்றவாளியாக பார்ப்பது எனக்கு கவலையாக உள்ளது என வார்த்தைகளை உதித்துள்ளார்.

இதனைக் கேட்டு ஆர்த்தூர், பதிலளிக்கமுடியாமல் கூண்டில் இருந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளார்.

இந்த வழக்கில் ஆர்த்தூருக்கு 43,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply