வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய அருவருப்பாகவும் இருந்தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்
ட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் ‘குற்றம்’ பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம்.
ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர்.
இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
அந்தவகையில் பின்தங்கிய கிராமப் புறங்களிலிருந்து வறுமையின் காரணமாக தொழில் தேடி கொழும்புக்கு வரும் பல இளம் பெண்களுக்கு கை நிறையச் சம்பளத்துடன் தொழில் வாய்ப்பினை வழங்கும் முக்கிய தொழில் நிலையங்களாக ஸ்பா ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன.
SPA, ஸ்பா என்ற சொல்லானது நீர் சிகிச்சையுடன் தொடர்புடையது, இது குளியல் மருத்துவம் என்றும் அறியப்படுகின்றது.
மனதையும் உடலையும் எப்போதும் சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு சிறந்த முறையாகும்.
வரலாற்றுக்கு முன்னைய காலங்களிலிருந்தே. இது போன்ற நடைமுறைகள் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்து காணப்பட்டன.
ஆனால், அவை ஆரம்ப காலங்களில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலேயே அதிகளவில் பிரபல்யமாகக் காணப்பட்டன.
அதுவும் இத்தகைய சிகிச்சை நிலையங்கள் ஆரம்பகாலங்களில் இது பற்றி கற்றுச் சிறந்த நிபுணத்துவத்தை பெற்ற நிபுணர்கள் மூலமே இத்தகைய தொழில்கள் நடைபெற்று வந்தன.
ஆனால் இன்று வருமானத்துக்காக ஸ்பா மசாஜ் நிலையங்கள் தடம் புரண்டு காணப்படுகின்றன என்றே கூறவேண்டும்.
இலங்கையில் கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 10,000 ரூபாவுக்கு மேலதிகமாக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய சிறந்த தொழில் நிறுவனமாக ஸ்பா மசாஜ் நிறுவனங்கள் மாறிவருகின்றன.
அதற்குக் காரணம் மசாஜ்க்கு மேலதிகமாக பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையங்களாக இவை காணப்படுவதே ஆகும்.
நூற்றுக்கு 95% மான ஸ்பா ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் ஆண்களின் சிற்றின்ப நிலையங்களாகவே இயங்கி வருகின்றன.
அதுமட்டுமின்றி, இத்தகைய நிறுவனங்கள் தொடர்பாக ஆண்களே நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றார்கள். 15 தொடக்கம் 80 வயதுக்கு இடைப்பட்ட பல ஆண்கள் இத்தகைய ஸ்பா நிலையங்களை நாடிச் செல்கின்றார்கள் .
கொழும்பு பிரதேசத்துக்குள் மட்டும் 10 க்கு மேற்பட்ட மசாஜ் நிலையங்கள் காணப்படுவதுடன், கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 15 க்கு மேற்பட்ட மசாஜ் நிலையங்கள் காணப்படுகின்றன.
மேலும் இங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் இளம் பெண்களாகவே காணப்படுகின்றனர். பத்திரிகைகளிலும், இணையத்தளம் வாயிலாகவும் மசாஜ் நிலையங்கள் தொடர்பாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள் அதில் “அழகிய இளம்பெண்கள் மூலம் மசாஜ் மருத்துவம் செய்து குணப்படுத்துவோம்” என்ற வாசகங்கள் இடப்பட்டிருக்கும்.
இவ்வார்த்தை ஜாலத்தில் மதி மயங்கியே வாடிக்கையாளர்கள் ஸ்பா ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை நாடிச் செல்கின்றார்கள்.
அதுமட்டுமின்றி, ஸ்பா ஆயுர்வேத நிலையங்களில் வேலை செய்வதற்கு பெண்களைத் தெரிவு செய்வதற்காக ‘ஆயுர்வேத நிலையத்தில் வேலைவாய்ப்பு’ என்ற வாசகங்களே இடப்படுகின்றன.
எனவே இத்தகைய விளம்பரங்களைப் பார்த்து கிராமப் புறங்களிலிலுள்ள பல இளம் பெண்கள் தமது அறியாமையின் காரணமாக இத்தொழில் ஈடுபட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு நாளடைவில் இத்தொழிலுக்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.
இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு 1,000 ரூபா என்ற கணக்கில் தனக்குப் பிடித்த இளம் யுவதியொருவரை தேர்ந்தெடுக்க முடியும்.
எனவே, இது தொடர்பாக இளம் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிங்களப் பத்திரிகையொன்று இருவேறு ஸ்பா ஆயுர்வேத நிலையங்களில் தொழில் புரியும் இரு பெண்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர்கள் இது பற்றிக் கூறிய கருத்துக்களை தருகின்றோம்.
“எனது பெயர் இரேஷா, வயது 21, நான் பணிபுரியும் இதே ஸ்பா ஆயுர்வேத நிலையத்திலேயே தங்கியிருக்கின்றேன். இங்கிருந்து எங்களால் வெளியில் செல்ல முடியாது மூன்று வேளைக்குமான உணவும் இங்கேயே கிடைக்கும்.
இது ஒரு குழப்பமான தொழில் தான். இருந்தாலும், கைநிறையப் பணம் சம்பாதிக்க முடியும். இங்கு வந்தவுடன் முதலில் மசாஜ் செய்யும் கட்டிலில் ஒருவர் நிர்வாணமாக ஏறி மசாஜ் செய்யும் முறைகளைச் சொல்லிக் கொடுப்பார்.
அதன்பின் எங்களுடைய வேலை ஆயுர்வேத நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை மசாஜ் கட்டிலில் படுக்க வைத்து சுமார் சில மணித்தியாலங்களுக்கு ஸ்பா மசாஜ் செய்ய வேண்டும்.
பின் வாடிக்கையாளர் விரும்பினால் அவருடைய உடல் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுப்போம். அதற்கு 500/= அல்லது 1000/= என்று தனித்தனியாக எடுப்போம்.
நான் என்றால் எனது பாதுகாப்பை கருத்திற் கொண்டு மசாஜ்க்கு மேலதிகமாக எதையும் செய்யப் போக மாட்டேன்.
எனினும், இங்கு பணிபுரியும் பல பெண்கள் மசாஜ்க்கு மேலதிகமாகவும் வாடிக்கையாளரின் பாலியல் தேவைகளுக்கும் இடம் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்களின் தொலை பேசி இலக்கத்தையும் வாங்கி அவர்கள் வரச் சொல்லும் இடங்களுக்கும் செல்வார்கள்.
எனது குடும்ப கஷ்டத்தின் காரணமாகவே நான் இந்தத் தொழிலைச் செய்து வருகின்றேன். எனக்கு அம்மாவும், அப்பாவும், தம்பியும் இருக்கின்றார்கள். அவர்கள்,
இன்று வரை நான் கொழும்பில் பாமசியொன்றில் தொழில் புரிகின்றேன் என்றே நினைத்திருக்கின்றார்கள்.
இங்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் மிகவும் வயதானவர்கள். எனக்கு பாட்டனைப் போன்றவர்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று தருவார்கள். எனவே இங்கு வந்து 3 மாதத்தில் நான் அதிகளவு பணத்தைச் சம்பாதித்து விட்டேன். என்று அவர் கூறினாள்.
இது தொடர்பாக கல்கிசைப் பகுதியை ஸ்பா ஆயுர்வேத நிலையத்தை சேர்ந்த மற்றுமொரு பெண்ணிடம் கேட்ட போது
“எனது பெயர் லக்மலி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எனக்கு வயது 23 நான் பொலனறுவை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்தவள்.
எனக்கு அம்மாவும், தம்பியொருவனுமே இருக்கின்றார்கள். அப்பா எங்கள் இருவருக்கும் சிறுவயதாய் இருக்கும் போதே இறந்துவிட்டார்.
அதன்பின் அம்மா வீட்டு வேலைகளைச் செய்தே எங்கள் இருவரையும் படிக்க வைத்தார். இப்போது அம்மாவுக்கும் சுகமில்லை. இதனால், குடும்பத்தில் வறுமை தலை விரித்தாடியது.
பல நாட்கள் மூவரும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றோம். எனவே, தான் நான் எனக்கென்று தொழிலொன்றைத் தேட ஆரம்பித்தேன்.
எனினும், எனது தகுதிக்கேற்ற தொழில் கிடைக்கவில்லை. முதல் முதலில் கொழும்புக்கு வந்த போது ஆடைத் தொழிற்சாலையொன்றிலேயே தொழில் புரிந்தேன். எனினும் அங்கு கிடைக்கும் சம்பளம் எனது செலவுகளுக்கே போதாமல் இருந்தது.
அதன்பின் தான் தெரிந்த அக்கா ஒருவரின் உதவியுடன் இந்த ஸ்பா ஆயுர்வேத நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய சற்று அருவருப்பாகவிருந்தது.
ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்து கொண்டேன்.
அதுமட்டுமின்றி, இங்கு வரும் பல ஆண்கள் மசாஜ் கட்டிலில் இருக்கும் போது டவலை அணிந்திருப்பதும் இல்லை. அது சில சமயங்களில் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், அதை எனது தலை விதி என்று சகித்துக் கொள்வேன். எனக்கு காதலன் என்று யாருமில்லை. இருப்பினும், எனக்கும் எல்லாப் பெண்களை ப்போல காதலனின் கை கோர்த்து நடக்க ஆசையாக இருக்கின்றது. ஆயினும் அது இங்கு வந்த நாள் முதல் கனவாகவே இருக்கின்றது.
ஒரு நாள் மசாஜ்க்கு என்று வயதான ஒருவர் இங்கு வந்தார். எனினும் அவர் மசாஜ் கட்டிலில் அமர்ந்துகொண்டு “மகள் எனக்கு மசாஜ் வேண்டாம். நீ சற்று நேரம் என் அருகில் இருந்தாலே போதும்” என்று கூறினார்.
நானும் நின்றுகொண்டிருந்தேன். எனினும் சிறிது நேரத்தில் என் உடலை வருட ஆரம்பித்தார். நானும் வாடிக்கையாளர் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினால் அவரின் ஆசைகளுக்கு இடமளித்தேன்.
சில சமயங்களில் மசாஜ்க்கு மேலதிகமாக செய்யும் வேலைகளுக்கு எனக்கு பணம் தராது தப்பியோடியுமுள்ளார் கள். “ என்று மிகுந்த கவலையுடன் கூறி னார்.
சில சமயங்களில் இத்தகைய ஸ்பா ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்படுகின் றன.
இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தினால் சட்டரீதியான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களிடம் அதற்குரிய உபகரணங்கள் இருந்தல், தகுதியான தெரபியர்கள் இருத்தல் போன்ற தகைமைகள் அவசியமாகின்றன.
எனவே இத்தகைய ஏற்பாடுகளை சரியான முறையில் செய்து கொண்டே ஸ்பா மசாஜ் நிலை ஆரம்பிக்கப்படுகின்றது. இதனால் சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்படுவது குறைவு.
இருப்பினும் அண்மைக்காலமாக பொலிஸாரின் தீவிர தேடுதலின் காரணமாக இத்தகைய நிலை யங்களில் நடைபெற்று வரும் உண்மை நிலவரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
உதாரணமாக அண்மையில் பத்தரமுல்லை பிரதேசத்தில் ஸ்பா ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் பெண்களை வியாபரம் செய்யும் நிலையமொன்றை நுகெகோட விசேட பொலிஸார் சுற்றி வளைத்தனர். இதன்போது அதன் முகாமையாளர் உட்பட 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இத்தகைய நிலையங்களில் பணிபுரியும் இளம் பெண்களுக்கு கைநிறைய சம்பளம், தேவையான வசதிகள் போன்றவற்றையும் இந் நிலையங்கள் ஏற்படுத்திக்கொடுக்கின்றன.
அதற்கு காரணம் மசாஜ் நிலையங்களை நாடி வரும் வாடிக் கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அங்கு தொழில் புரியும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.
எது எவ்வாறாயினும் இத்தகைய மசாஜ் நிலையங்களில் இரேஷா போன்ற இளம் பெண்கள் தமது குடும்பத்தின் வறுமையின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் இத்தகைய தொழில்க ளில் ஈடுபடுகின்றார்கள்.
எனவே இது தொடர்பில் விழிப்புணர்வுடன். இருப்பது நல்லது. நீங்கள் தொழிலுக்காக செல்லும் இடம் உங்களுக்கு பாதுகாப்பானதா? என்பது தொடர்பாக நன்கு ஆராய்ந்து பார்த்து தொழிலுக்கு செல்லுங்கள்.
அதுமட்டுமின்றி உங்களுடைய குடும்பத்தில் மனைவி அல்லது சகோதரி தொழில் புரியும் நிலையங்கள் தொடர்பாக நன்கு தேடிப் பார்க்கவும்.
அதுமட்டுமின்றி, எமது நாட்டின் பண்பாட்டுக்கும், விழுமியத்துக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய நிலையங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும்.