நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள பெண்கள் படை ஆட்களை பணியமர்த்துவது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு ஆட்களை அனுப்புவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பெண் படையும் உள்ளது. ஆனால் அந்த பெண் படையில் உள்ளவர்கள் பிற தீவிரவாத அமைப்புகளைப் போன்று தாக்குதல் செயல்களில் ஈடுபடுத்தப்படுவது இல்லை.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவரின் மனைவியான உம் சயப் அமெரிக்கப் படையிடம் சிக்கியுள்ளார்.
07-1436272916-in-raqqa-an-all-female-isis-brigade-cracks-down-on-local-women3-600

பெண் தீவிரவாதி
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைமை நிதி அதிகாரியான அபு சயப் கடந்த மே மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது மனைவியும், அமைப்பு உறுப்பினருமான உம் சயப் அமெரிக்காவின் பிடியில் உள்ளார்.

07-1436272939-in-raqqa-an-all-female-isis-brigade-cracks-down-on-local-women1-600

தகவல் அபு சயபின் வீட்டில் இருந்து செல்போன், கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி உம் சயபிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

07-1436272960-in-raqqa-an-all-female-isis-brigade-cracks-down-on-local-women2-600

பெண் படை உம் சயப் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண் படையை நடத்த உதவி செய்துள்ளார். அவருக்கு தீவிரவாதிகள் பற்றி பல தகவல்கள் தெரிந்துள்ளது. பெண் படையினர் என்ன செய்வார்கள் என்பதும் அவருக்கு தெரிந்துள்ளது.07-1436272992-1-isis-sex-slave-market245-700

செக்ஸ் அடிமை
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள பெண் படையில் துவக்க நிலையில் உள்ளவர்கள் ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து குழந்தை பெறுவது தான் அவர்களின் வேலையாம். அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு பெண்களை அனுப்பி வைப்பது மட்டுமே பெண் தீவிரவாத படையின் வேலை.07-1436273016-isis-sex-slave-market4-700

ஏமாற்றம்
பல பெண்கள் துப்பாக்கி ஏந்தி போராடும் ஆசையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் அமைப்பில் சேர்ந்த பிறகு தான் பெண்கள் போராட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அவர்களுக்கு தெரிந்துள்ளது.
Share.
Leave A Reply