கல்வி சுற்றுலாவுக்கு சென்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் விசுவமடுகுளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்களான வவுனியாவை சேர்ந்த குமுதன் மற்றும் நெடுங்கேணியை சேர்ந்த கஜீபன் எனும் இரு மாணவர்களுமே உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.
உயிரிழந்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.