உலகம் முழுவதும் நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமைந்துவிட்ட ‘பாகுபலி’ திரைப்படம், முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.34 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5 கோடி, கர்நாடகாவில் ரூ.7 கோடி, மற்ற மாநிலங்களில் ரூ.5.15 கோடி வசூலாகியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ரூ.15½ கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் 1 டிக்கெட் 20 டாலருக்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்பு அங்கு ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 12 டாலருக்கே விற்கப்பட்டது.

மன்னர்களின் வாழ்க்கையை சினிமாவாக்கும் கலை, ஹாலிவுட் கலைஞர்களுக்கு மட்டும்தான் கைவரும் என்று இருந்ததை, இயக்குனர் ராஜமௌலி உடைத்து தென்னிந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நாளில் 1600 காட்சிகள் திரையிடப்பட்டன. விஜயவாடாவில் மட்டும் ஒரே நாளில் 150 காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்திய திரையுலக வரலாற்றில் ஒரே நாளில் ரூ.76 கோடி வசூலானது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் ஒரேநாளில் ரூ.45 கோடி வசூலித்தது. அந்த சாதனையை பாகுபலி படம் முறியடித்தது.

உலகப் புகழ் பெற்ற டென் கமாண்ட்மென்ட்ஸ், லாரன்ஸ் ஆப் அரேபியா, க்ளாடியேட்டர், அவதார் என பிரம்மாண்டத்துக்கும், கலை வார்ப்புக்கும் ஹாலிவுட் படங்களையே இந்தியர்கள் உதாரணம் காட்டி வந்த காலம் மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

அதிலும் தெலுங்கு, தமிழ் மொழிகளில் நேரடியாக ‘பாகுபலி’ திரைப்படம் வெளிவந்திருப்பது இரண்டு மாநில திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் மலையாளம்,ஹிந்தி மொழிகளிலும் ‘பாகுபலி’ வெளிவந்திருப்பது கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘பாகுபலி’யில் கதாநாயகனாக பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ்,நாசர், ராணா, கோபிசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை மரகதமணி, ஒளிப்பதிவு செந்தில்குமார். மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி ‘பாகுபலி’ யை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் அடுத்தப்பாகத்திற்கு 2016 வரை காத்திருக்கவேண்டும்.

பாகுபலி (திரைவிமர்சனம்)

Share.
Leave A Reply