சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் முதல்முறையாக விஜய் 59 படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்தப் படத்தில் விஜய் முற்றிலும் வித்தியாசமான முறையில் காட்சி அளிக்கிறார், தலையில் தொப்பி வைத்துக் கொண்டு கையில் சுருட்டு குடிப்பது போன்று அந்தப் புகைப்படம் உள்ளது.
கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு, கையில் சுருட்டு பிடித்துக் கொண்டு இருக்கும் விஜயின் புகைப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரம் சுருட்டு பிடிப்பது போன்ற இந்தப் புகைப்படம், பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளையும் உருவாக்கலாம்.
சமீபத்தில் வெளியான தனுஷின் மாரி மற்றும் ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க போன்ற படங்களின் டீசர்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
தனது படங்களில் இதுவரை அதிகம் புகைபிடிக்கும் காட்சிகளை வைக்காத விஜய், தற்போது புதிதாக இந்த மாதிரி மாறியிருக்கிறார். இந்த உத்தி படத்தின் விளம்பரத்திற்கு உதவுமா? அல்லது எதிர்ப்பை சம்பாதிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
யுவன் தேடல் என்ன ? சிறப்பு சினிமா விகடன் பேட்டி..
பவர் ஸ்டார் லைவ் சேட் -வீடியோ!
ராய் லட்சுமி சிறப்பு பேட்டி வீடியோ!