யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 15 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக, யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் முடிந்த பின்னர், யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ். தேர்தல் மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகளும், 12 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 29 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரு அரசியல் கட்சிகள் மற்றும் 6 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் ஞானப்பிரகாசம் அன்ரன் நீக்கலஸ், சத்தியேந்திரா சாம்பசிவம், முருகன் குமாரவேல், கருப்பையா ஜெயக்குமார், சுந்தரலிங்கம் சிவதர்சன், சின்னத்துரை சிவகுமார் ஆகியோரால் சுயேச்சையாகப் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, 15 அரசியல் கட்சிகளினதும், 6 சுயேச்சைக் குழுக்களினதும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்-

இலங்கை தமிழரசு கட்சி

1.மாவை சேனாதிராசா
2.மதியாபரணம் சுமந்திரன்
3.கந்தையா பிரேமச்சந்திரன்
4.தர்மலிங்கம் சித்தார்த்தன்
5.சிவஞானம் சிறிதரன்
6.ஈஸ்வரபாதம் சரவணபவன்
7.அருந்தவபாலன் கந்தையா
8.மதினி நெல்சன்
9.அனந்தராஜ் நடராஜா
10.கந்தர் நல்லதம்பி சிறீகாந்தா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

1.டக்ளஸ் தேவானந்தா
2.முருகேசு சந்திரகுமார்
3.சில்வெஸ்ரின் அலென்ரின்
4.ப.சீவரத்தினம்
5.சிவகுரு பாலகிருஸ்ணன்
6.ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன்
7.சூசைமுத்து அலெக்சான்டர்
8.பற்குணராஜா யோகேஸ்வரி
9.இராமசாமிச் செட்டியர் செல்வவடிவேல்
10.இராமநாதன் ஐங்கரன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

1.கஜேந்திரகுமார் காங்கேயர் பொன்னம்பலம்
2.செல்வராசா கஜேந்திரன்
3.ஆனந்தி சிவஞானசுந்தரம்
4.திருநாவுக்கரசு சிவகுமாரன்
5.விஸ்வலிங்கம் மணிவண்ணன்
6.அமிர்தலிங்கம் இராசகுமாரன்
7.ஜெயரட்ணம் வீரசிங்கம்
8.தேவதாசன் சுதர்சன்
9.சின்னமணி கோகிலவாணி
10.சிதம்பரநாதன் பத்மினி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

1.அங்கஜன் இராமநாதன்
2.இராஜேந்திரன் வசந்தகுமார்
3.வீரப்பிள்ளை வீரகுமார்
4.வன்னியசிங்கம் கபிலன்
5.பாலசுப்பிரமணியம் சுபதீசன்
6.சிவசுப்பிரமணியம் பார்த்தீபன்
7.அழகராஜா யோகேஸ்வரன்
8.ஞானப்பிரகாசம் அலோசியஸ் இராஜகுமார்
9.தர்மலிங்கம் யோகராசா
10.சீனியர் குணநாயகம்

ஐக்கிய தேசிய கட்சி

1.மகேஸ்வரன் விஜயகலா
2.இராஜலிங்கம் சிவசங்கர்
3.சின்னத்துரை குலேந்திரராஜா
4.செபஸ்ரியாம்பிள்ளை மரியதாசன்
5.ரவீந்திரன் துகீபன்
6.குமாரு சர்வானந்தன்
7.இளையதம்பி நாகேந்திரராஜா
8.முகமட் சுல்தான் ரகீம்
9.வன்னியசிங்கம் பிரபாகரன்
10.சின்னராஜா விஜயராஜா

Share.
Leave A Reply