சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் மீது கவனயீனமாகவும் அசட்டுத் துணிச்சலுடனும் உழவு இயந்திரத்தை (டிரக்டர்) மோதிஸ்தலத்திலேயே மரணத்தை ஏற்படுத்திய நபர் ஒருவருக்கு இரு குற்றச்சாட்டுகளின் பேரில் தலா ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் தண்டமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
உழவு இயந்திரத்தை மோதி தண்டிக்கப்படவேண்டிய குற்றம் புரிந்ததாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைகளுக்கு எதிரியான சந்திவெளியைச் சேர்ந்த வேலப்பு சத்திய சீலன் மன்றுக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் எதிரிக்கு பிடிஆணையும் பிறக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான 2008ஆம் ஆண்டு 4 ஆம் திகதி சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன். றுஸ்திற சமரசிங்க லயன் கோப்ரல் லக்ஸ்மன் ஹேரத் ஆகியோர் சந்திவெளி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது
சம்பவ தினமான 2008ஆம் ஆண்டு 4 ஆம் திகதி சித்தாண்டி இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன். றுஸ்திற சமரசிங்க லயன் கோப்ரல் லக்ஸ்மன் ஹேரத் ஆகியோர் சந்திவெளி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது,
உழவு இயந்திரமொன்றை செலுத்தி வந்த எதிரியான வேலப்பு சத்தியசீலன் கவனயீனமாகவும் அசட்டுத் துணச்சலுடனும் குறுக்காகச் செலுத்தி அவர்களுடன் மோதியுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரது மரணம் தொடர்பிலும் எதிரி மீது இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போதும் எதிரியான வேலப்பு சத்திய சீலன் மன்றுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடுநர் தரப்பில் ஏழும்பல் சாட்சியமளித்து எதிரிமீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இருவருக்கும் மரணத்தை ஏற்படுத்திய இரு குற்றச்சாட்டுகளின் பேரிலும் எதிரி வேலப்பு சத்திய சீலனுக்கு தலா ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தண்டம் செலுத்தத் தவறினால் மேலதிகமாக தலா ஒரு வருட கடூழியச்சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை எதிரி தலைமறைவாகியிருப்பதால் எதிரிக்கு பகிரங்க பிடியானை பிறப்பித்த நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிரியை கண்டுபிடித்து மன்றுக்கு ஆஜர்ப்படுத்துமாறு ஏறாவூர் பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.