அமெரிக்காவில் பெண்மணி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் சாலந்தர் பகுதியில் வசித்து வரும் Esmeralda Rossi என்பவர் தனது கணவருடன் கடுமையாக சண்டைபோட்டுள்ளார்.

இந்த சண்டை உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, ரோஸி இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொலிசாரிடம் புகார் தெரிவித்துவிட்டு குளிக்க சென்ற ரோஸியின் வீட்டுக்கதவை யாரோ தட்டியுள்ளார்கள்.

உடனே குளியலறையில் இருந்து வெளியே வந்த ரோஸிக்கு அப்போதுதான், தான் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தது ஞாபகத்துக்கு வந்துள்ளது.

உடனே ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சென்று கதவை திறந்துள்ளார், உள்ளே நுழைந்த பொலிசார், இவரை கையை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இவர், கண்ணீர் விட்டு கதறியதை கண்டு கொள்ளாத பொலிசார் இருவரும், இவரிடம் நடந்துகொண்ட விதம் மிகவும் அநாகரீகமான முறையில் இருந்துள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரோஸி கூறியதாவது, பொலிசார் என்னிடம் நடந்துகொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயல்வதாகவே நான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், எவ்வித முன்னறிவிப்பும், பிடிவாரண்ட்டு இல்லாமல் இவ்வாறு நடந்துகொண்டது தவறாகும் எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply