மத்தியபிரதேசத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஆயுள் தண்டனைக் கைதி ஒருவன் தப்பிச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

நர்சிங்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளியான பங்கஜ் பகாடே (30), காணாமல் போனது சிறை அதிகாரிகளுக்கே, நேற்று கைதிகளை கணக்கெடுத்த போதுதான் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சிறை அதிகாரிகள் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைப் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சிகளில், எந்த ஆரவாரமுமின்றி மதில் மேல் ஏறி சாமர்த்தியமாக நடக்கும் பங்கஜ், சிறையிலிருந்து தப்பித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

எனவே, சிறை அதிகாரிகள் நர்சிங்பூர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், இதுவரை குற்றவாளியைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உலகத்துல இப்படியொரு திருட்டு குடும்பமே?  என்னமா நடிக்கிறாங்க!

வேட்டையாட வந்த சிங்கத்தையே மரண படுக்கையில் போட்ட எருமை…

 

 

Share.
Leave A Reply