பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளை நீதிமன்றத்திற்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வந்த சம்பவங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.
இந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று கைதியொருவரை அழைத்துவந்த விதம், தற்போது அனைவராலும் அதிகம் பேசப்படுகின்றது.
கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறைக் கைதியொருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பஸ்ஸில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
முற்பல் 9 மணிக்கு அழைத்துவரப்பட்ட குறித்த கைதி, பிற்பகல் 4 மணி வரை நீதிமன்ற வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்படவில்லை.