நேற்றைய கூட்டத்தில் பெருமளவானோர் கலந்து கலந்து கொண்ட போதும் அமைதியாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இக்கூட்டத்தின் போது தலைமை தாங்கிய வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ்,பிரபாகரன் காட்டிய வழியில் கூட்டமைப்புப் பயணிக்கும் என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்துகொண்டவர்கள் பெரும் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் புலிகள் குறித்தும்,மாவீரர்கள் குறித்தும் பேசிய போதும் கூட்டத்தில் உற்சாகம் களை கட்டியதை அவதானிக்க முடிந்தது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இந்த சந்தர்பத்தில் மேடையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.