தமிழ் சினிமாவில் கடந்த 12 ஆண்டுகளாக கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷாவுக்கு தூங்காவனம் படம் 50வது படமாக அமைந்துள்ளது.
2002-ம் ஆண்டு மவுனம் பேசியதே படத்தில் நாயகியாக அறிமுகமானார் த்ரிஷா. அதற்கு முன் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சிறு வேடத்தில் வந்தார்.
2002-லிருந்து இன்று வரை நாயகியாக மட்டுமே நடித்து வரும் அவர் தமிழ், தெலுங்கி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 50 படங்களில் நடித்துள்ளார்.
சாமி
த்ரிஷாவை முன்னணி நடிகையாக உயர்த்திய படம் ஹரி இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக அவர் நடித்த சாமி. அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கிலும் வாய்ப்பு கிடைத்தது த்ரிஷாவுக்கு.

முதல் தெலுங்குப் படம்
த்ரிஷாவின் முதல் தெலுங்குப் படம் நீ மனசு நாக்கு தெலுசு. அதைத் தொடர்ந்து வெளியான வர்ஷம் படம் அவரை தெலுங்கிலும் முதல் நிலை நாயகியாக்கியது.

கில்லி
தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் வெளியான அவரது படங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றன. தமிழில் வெளியான கில்லியும், தெலுங்கில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான நுவ்வொஸ்தன்டே நேனொத்தன்டானா படங்கள் அவரை புகழின் உச்சியில் வைத்தன.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் வெற்றிப் பட நாயகியாகவே தொடர்கிறார். அவரது சமீபத்திய படங்களான என்னை அறிந்தால், கன்னடப் படம் பவர், தெலுங்கில் வெளியான லயன் போன்றவை வெற்றி பெற்றதால், த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் ஸ்டெடியாகவே உள்ளது.
7 படங்கள்
இப்போது த்ரிஷாவின் கைவசம் 7 படங்கள் உள்ளன. அவற்றில் பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அடுத்து போகி என்ற இரு மொழிப் படத்திலும், நாயகி என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.
இப்போது த்ரிஷாவின் கைவசம் 7 படங்கள் உள்ளன. அவற்றில் பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அடுத்து போகி என்ற இரு மொழிப் படத்திலும், நாயகி என்ற தெலுங்குப் படத்திலும் நடிக்கிறார்.

தூங்காவனம்
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 படத்திலும், கமலுடன் தூங்காவனத்திலும் நடிக்கிறார். தூங்காவனம் படத்தின் தெலுங்குப் பதிப்பு சீக்கட்டி ராஜ்ஜியத்திலும் இவரே நாயகி.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 படத்திலும், கமலுடன் தூங்காவனத்திலும் நடிக்கிறார். தூங்காவனம் படத்தின் தெலுங்குப் பதிப்பு சீக்கட்டி ராஜ்ஜியத்திலும் இவரே நாயகி.
தூங்காவனம்தான் த்ரிஷாவின் 50வது படம். இதுகுறித்து இன்று அவரிடம் கேட்டபோது, “அரண்மனை 2, தூங்காவனம் ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் ஒப்புக் கொண்டேன். இரண்டுமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. எது முதலில் வருகிறதோ, அதுதான் 50வது படமாக அமையும்,” என்றார்.