வல்­லாட்சி நாடு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற அமெ­ரிக்க நாட்டின் சமஷ்டி முறை­யா­னது உல­கத்தின் முக்கியமான முறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.

1789 இல் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி 50 மாநில அர­சு­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 50 அரசுகளுக்கும் 50 அதி­கார அல­குகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

நிலப்­ப­ரப்பு மக்கள் தொகை என்­ப­வற்றின் அள­வு­களையோ, எண்­ணிக்­கை­களையோ கருத்தில் கொள்­ளாமல் எல்லா மாநி­லங்­களும் சம­மா­கவே மதிக்­கப்­ப­டு­கின்­றன.

மத்­திய அரசின் இரண்­டா­வது சபை­யென அழைக்கப்படும் செனட் சபை­யா­னது எல்லா மாநி­லங்­க­ளுக்கும் சமமான அங்­கத்­து­வத்­தையே வழங்­கி­யுள்­ளது.

ஆயு­தப்­போரின் வளர்ச்சி, இந்­திய தலை­யீ­டுகள் இலங்­கை­ யாட்­சி­யா­ளர்­க­ளுக்கு பயத்தை உரு­வாக்­கி­யதன் காரண­மாக திம்பு பேச்­சு­வார்த்­தைக்கு உடன்­பட்­டார்கள்.

ஆனால், அங்கு முன் வைக்­கப்­பட்ட நான்கு அம்ச கோரிக்கை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

1986 ஆம் ஆண்டு நவம்­பரில் பெங்­களூர் சார்க் உச்சி மாநாட்டின் போது ராஜீவை சந்­தித்த ஜே.ஆர். 1984 இல் நடைபெற்ற சர்­வ­கட்சி மாநாட்டு தீர்­மா­னத்தை முன்­வைத்தார்.

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து அம்­பா­றையை துண்­டித்து வடக்கு கிழக்கு மாகா­ணங்­களோடு இணைப்பதன் மூலம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­மு­டியும் என்­பதில் இணக்கம் காணப்­பட்ட நிலையில் இந்த தீர்வுப் பொதியை திணிக்க இந்­தியப் பிர­தமர் முயற்­சித்த போதும், கிழக்கு மாகா­ணத்தை பிரிப்­பதை அடிப்­ப­டை­யாக கொண்ட எந்த தீர்­வையும் நாம் ஏற்­கப்­போ­வ­தில்­லை­யென விடு­த­லைப்­புலி அமைப்பின் தலைவர் வே. பிர­பா­கரன் மறுத்தார்.

தமிழ் மக்­களின் சம பல­மாக கரு­தப்­பட்ட ஆயு­தப்­போ­ராட்­டத்­துக்கு முடிவு கட்டி விட்­டோ­மென இலங்கை அரசாங்­கமும் பேரி­ன­வா­தி­களும் தம்­ம­ளவில் கர்வம் கொண்­டி­ருந்த போதும் தமிழ் மக்­களின் நீண்ட காலப் போராட்­ட­மா­னது யுத்­தத்­துக்குப் பின் புதிய வழியை வகுத்து விட்­டது என்­பது பேரி­ன­வா­தி­களும் அதன் பேராளர்களும் அறி­யாத ஒரு விட­ய­மல்ல.

மூடிக்­கொண்ட பாதை மூடிக்­கொண்­ட­தா­கவே இருந்­தாலும் புதிய பாதையில் பய­ணிக்க வேண்­டிய தேவை தமிழ் மக்­க­ளுக்குரிய உரி­மை­யென்­பதை உள்­நாட்டு அர­சியல் சமூ­கமும் வெளி­நாட்டு சக்­தி­களும் ஏற்­றுக்­கொண்­ட­தாக நடித்­தாலும், அதற்­கான பரி­கா­ரத்தைக் காண அவர்கள் முயற்­சிக்­க­வில்லை. வழிப்­ப­டுத்­த­வு­மில்லை என்­ப­தற்கு பல உதா­ர­ணங்­க­ளுமுண்டு. கார­ணங்­களும் இருக்­கலாம்.

யுத்தத்­துக்கு முன் உள்ள நிலை­களைப் போலவே யுத்­தத்­துக்கு பின்­னுள்ள நிலை­களும் இருக்க வேண்­டு­மென் பதில் கவனம் கொண்­ட­வர்­க­ளாக இலங்கை­ய­ர­சாங்­கமும் ஆட்­சி­யா­ளர்­களும் இருந்து வரு­கின்ற சூழ்­நி­லையில் தான் குற்­ற­வியல் விசா­ர­ணை­யென்ற ஆயு­தத்­தையும், அர­சியல் தீர்வென்ற பரி­கா­ரத்­தையும் தமிழ் மக்கள் தேட வேண்­டி­யி­ருந்­தது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வென்ற ஜன­நா­யகக் குழந்தை பிறந்து தனது 65 ஆவது வயதை தாண்டி விட்ட போதும் அது இன்னும் முழுமை அடை­யாத குறைப்­பி­ர­சவ குழந்­தை­யா­கவே உள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வென்ற விட­யத்தை தந்தை செல்­வ­நா­யகம் 1951 ஆம் ஆண்டு திரு­கோணமலையில் நடை­பெற்ற தேசிய மாநாட்டில் மிகவும் தெளி­வா­கவும் திட­காத்­தி­ர­மா­கவும் கூறி­யி­ருந்தார்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இன­மெ­ன வும் அவர்கள் அர­சியல் ரீதி­யாக சுயா­தீனம் பெறு­வ­தற்கும் சமஷ்டி அமைப்பு முறையின் கீழ் சுதந்­திர சமத்­துவம், சம உரிமை நீதி எனும் உயர்ந்த ஆட்­சி­யு­ரி­மையை அடை­வ­தற்கும் உரித்துடை­ய­வர்கள் என்ற தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் பட்­ட­யத்தை வரைந்து விட்­டி­ருந்தார்.

அப்­பட்­ட­யத்தை ஜன­நா­யக வழியில் பெறு­வ­தற்கு ஆயு­தப்­போ­ருக்கு முன் போரா­டி­னார்கள். ஆயு­தப்­போ­ருக்குப் பின்னும் அதை வலி­யு­றுத்தும் வகையில் சர்­வ­தே­சத்தின் உத­வி­களை நாடி நிற்­கின்­றார்கள்.

முன்னும் சரி பின்னும் சரி ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் வலிமை கொண்ட சமஷ்டி முறை­யி­லான அதிகாரப்பகிர்வை கோரி நிற்­கின்­றார்கள் என்­பது உள்­நாட்டு அள­ விலும் சர்­வ­தேச சமூக அள­விலும் பகிரங்கமாக்­கப்­பட்ட உண்மை.

அண்­மையில் வவு­னி­யாவில் நடைபெற்ற ஒரு கூட்­டத்தில் த.தே.கூ. அமைப்பின் தலைவர் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வின் தன்மை பற்றி குறிப்­பி­டு­கையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

சமஷ்டி முறை­யி­லான அதி­கார வலு­வுள்ள ஒரு தீர்வை ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் கோரி நிற்­கின்றோம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதை அளவு கோலாகக் கொண்டு தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அந்த சமஷ்டி முறை­யி­லான தீர்வு பற்றி எமது கனவை நீட்­டிப்­பார்ப்போம்.

பல தேசிய இனங்கள், குழுக்கள் குழு­மங்கள் வாழு­கின்ற நாடு­க­ளுக்கு சமஷ்டி ஆட்சி முறை அத்­தி­யா­வ­சி­ய­மான தொன்­றாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது, சிபாரிசு செய்­யப்­ப­டு­கி­றது.

உலக சனத்­தொ­கையில் 40 சதவீத­மான மக்­களை கொண்­டுள்ள சுமார் 28 க்கு மேற்­பட்ட நாடுகள் தங்­களை சமஷ்டி ஆட்சி கொண்­ட­தாக ஆக்கிக் கொண்­டுள்­ளனர்.

அதி­க­ள­வி­லான நிலப்­ப­ரப்பு, சனத்­தொகையை கொண்­டுள்ள நாடுகள் தமக்கு ஏற்ற ஆட்சி முறை­யாக சமஷ்­டி­யையே ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

உலகில் சமஷ்டி ஆட்சி முறை­மை யைக் கொண்ட நாடு­க­ளாக ஜேர்மன், இந்தியா, ஈராக், மெக்­சிக்கோ, ஆர்­ஜென்ரீனா, அவுஸ்­தி­ரே­லியா, பெலோவ், பொஸ்­னியா, பெல்­ஜியம், பிரேசில், கனடா, கொங்கோ, மலே­சியா, நைஜீ­ரியா, பாகிஸ்தான், ரஷ்யா, தென்­ஆ­பி­ரிக்கா, சுவிட்ஸர்லாந்து, சூடான், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் காணப்­ப­டு­கின்­ றன.

சமஷ்­டி­யா­னது பல்­வேறு வகை­க­ளையும் உள்­ள­டக்­கங்­க­ளையும் கொண்­டுள்­ளது.

01) ஒரு குறிப்­பிட்ட சமஷ்டி ஆட்­சிக்குள் இரு நிலப்­ப­கு­தி­களோ (மாநில அரசு) அல்­லது 80 சதவீதத்­துக்கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பு காணப்­ப­டலாம்.

02) சில சமஷ்டி முறை­மைகள் முழு­மை­யாக மத்­திய மயப்­ப­டுத்­தப்­பட்டு சகல அதி­கா­ரங்­களும் குவிந்­தி­ருக்­கின்ற அதே­வேளை, பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் இருக்கும்.

03) சில சமஷ்­டி­களில் தெளி­வாக மத்­திய அர­சுக்கும் ஏனைய ஆள்­புல அர­சு­க­ளுக்கும் இடையில் அதி­காரம் பகிரப்­பட்­டி­ருக்கும்.

04) சில பிர­தம மந்­தி­ரியைக் கொண்ட பாரா­ளு­மன்றம் அரசு உடை­ய­தாக. ஜனா­தி­ப­தி­யையும், காங்­கிரஸ் அமைப்­பையும் கொண்­டி­ருக்­கின்­ றன.

எனவே, தான் சமஷ்டி ஆட்சி முறை தேவைக்கு ஏற்ப வித்­தி­யா­சப்­பட்­ட­வை­யா­கவும், சமூக பொரு­ளா­தார தொகுப்பின் அடிப்­ப­டை­யிலும் பாரி­ய­ளவில் வித்­தி­யாசம் கொண்­டவை.

ஒரு சமஷ்டி ஆட்­சியை உரு­வாக்­கு­வ­தற்கு சில பொதுப் பண்­புகள் பின்­வ­ரு­மாறு வரை­ய­றுக்­கப்­படும். குறைந்த பட்சம் இரண்டு அர­சாங்­கங்கள் காணப்­பட வேண்டும்.

அவை­களில் ஒன்று முழு நாட்­டிற்கும் மற்­றை­யது பிராந்­தி­யங்கள் அல்­லது மாகா­ணங்­க­ளுக்­காக இருத்தல் வேண்டும். ஒவ்­வொன்றும் தனது பிர­ஜை­க­ளுடன் நேரடி தேர்தல் தொடர்­பான உற­வு­களைக் கொண்­டி­ருக்கும்.

சமஷ்டி முறை­யி­லான சில நாடு­களை உதா­ர­ணத்­துக்­காக ஆராய்ந்து பார்ப்­பதன் மூலம் எளிய முறை சமஷ்டி ஆட்சி முறை­மையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

India-Map
அந்த வகையில் ஆசி­யாவின் உயர் ஜன­நா­யகம் கொண்ட நாடாகப் பார்க்­கப்­ப­டு­கின்ற இந்­திய நாட்டின் சமஷ்டி முறை­மையை சுருக்­க­மாகப் பார்ப்போம். பல மொழி­க­ளையும் இனங்க­ளையும், மதங்­க­ளையும் கொண்ட நாடு.

ஹிந்தி, கன்­னடம், தெலுங்கு, தமிழ்­நாடு, பஞ்சாப், குஜராத் உட்­பட்ட 18 தேசிய மொழி­களை கொண்­டது. 28 மாநிலங்கள், 6 யூனியன் பிர­தேசம் ஒரு தேசிய தலை­நகர் பகுதி என்­பவை ஆட்சி பாகு­பாடு கொண்­ட­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. எல்லா மாநி­லங்­களும் மொழி வழி மாநி­லங்­க­ளாகும். உதா­ர­ண­மாக தமிழ் நாடு தமிழ் மொழி வழி மாநி­ல­மாகும்.

மாநி­லங்கள் விரும்­பினால் தங்கள் சொந்த மொழியை நிர்­வாக மொழி­யாக வைத்­தி­ருக்­கலாம். அவ்­வாறே அநேக மாநி­லங்­க­ளுண்டு.

பொது­வாக கூறப்­போனால் ஹிந்தி மொழி பேசும் மாநி­லங்­களே அதி­க­மா­க­வுள்­ளன. உத்தராஞ்சல் வனாஞ்சல் தெலுங்கு மிக அண்­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாநி­லங்களாகும்.

இந்­திய (யாப்பு) அர­சியல் அமைப்பு கூட்­டாட்சி தன்மை கொண்­டது. 1950 ஆம் ஆண்டு இது நடை­மு­றைக்கு வந்தது.

இருந்த போதிலும் நாட்டின் பெயரில் கூட்­டாட்சி என்ற பெயர் இடம்­பெ­ற­வில்லை. அதி­காரப் பங்­கீட்டில் மூன்று பட்­டி­யல்கள் உண்டு. (1) மத்­தி­ய­ரசின் பட்­டியல், (2) மாநில அரசின் பட்­டியல் (3) பொதுப்­பட்­டியல்.

மத்­திய அரசுப் பட்­டி­யலில் பாது­காப்பு முப்­ப­டைகள், வெளி­நாட்டு உறவு, வர்த்­தகம் நாணய வெளி­யீடு, வெளியுறவு கொள்கை, போப் பிர­க­டனம் உட்­பட்ட 95 விட­யங்கள் அடங்­கி­யுள்­ளன.

மாநி­லப்­பட்­டி­யலில் பொது ஒழுங்கை பாது­காத்தல்(Police), உள்­ளூ­ராட்சி, ஏனைய நீதி­மன்­றங்கள் என 60 விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

Map2000ஐரோப்­பிய, ஆசிய கண்­டத்தின் நடு சேர் நாடாக கூறப்­ப­டு­கின்ற ரஷ்­யாவின் ஆட்சியலமைப்பும் சமஷ்டி முறை சார்ந்­த­தாகும்.

1917 ஆம் ஆண்டின் ர­ஷ்யப் புரட்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட நாடு. 1924 ஆம் ஆண்டு வரை­யப்­பட்ட அர­சியல் அமைப்­பின்­படி நாட்­டுக்கு சோவியத் சோஷ­லிச குடி­ய­ரசின் ஒன்­றியம் என பெயர் சூட்டப்­பட்­டது.

இதுவே கூட்­டாட்சி தன்­மையை உரு­வாக்க கார­ண­மா­கி­யது. தேசிய இனங்­களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்­நாட்டின் சமஷ்டி கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

மத்­தி­யிலும் மாநி­லத்­திலும் தேசிய இனங்­களின் நலனைப் பேணும் வகை யில் உரு­வாக்­கப்­பட்ட இச்­ச­மஷ்­டியில் சிறிய தேசிய இனங்­களும் அதி­கா­ரங்­களை சுவா­சிக்க யாப்பில் வழி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய விட­ய­மென்­ன­வென்றால் 185 மொழி­களைப் பேசும் 150 வகை தேசிய இனங்கள் அங்கு வாழ்ந்து கொண்­டி ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

சிறிய சிறிய இனங்­களும் அதி­காரப் பங்­கீட்டை பெற வேண்டும் என்ற உயர்ந்த அர­சியல் தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் நான்கு வகை­யான அதி­கார அல­குகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

1.தன்­னாட்சி குடி­ய­ர­சுகள்

2.தன்­னாட்சி பிராந்­தி­யங்கள்

3.தன்­னாட்சி தேசிய பகு­திகள்

4.குடி­ய­ரசு

இப்­பி­ரிப்பின் அடிப்­ப­டையில் 16 குடி­யர­சுகள், 20தன்­னாட்சி குடி­ய­ர­சு கள், 8 தன்­னாட்சி பிராந்­தி­யங்கள், 10 தன்னாட்சி தேசி­யப்­ப­கு­திகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

சுருக்­க­மாகக் கூறப் ­போனால் வெளி­நாட்டு தொடர்பு, நாண­யத்­தொ­டர்பு, பாது­காப்பு, தேசிய பொரு­ளா­தாரம் போர், குடி­ய­ரசு எல்லை நிர்­ணயம் ஆகி­யவை மத்­திய அர­சி­டமும் ஏனை­யவை மாநி­லங்­க­ளுக்­கு­ரி­ய­வை­யா­கவும் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

குடி­ய­ரசு என்ற அல­குக்கு கூடிய அதி­கா­ரமும் ஏனை­ய­வற்­றுக்கு அவற்றின் தன்­மைக்­கேற்ப குறைந்­த­ள­வி­லான அதி­கா­ரமும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

Secessionist-America

USA

வல்­லாட்சி நாடு என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற அமெ­ரிக்க நாட்டின் சமஷ்டி முறை­யா­னது உல­கத்தின் முக்கியமான முறை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.

1789 இல் உரு­வாக்­கப்­பட்ட இக்­கூட்­டாட்சி 50 மாநில அர­சு­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. 50 அரசுகளுக்கும் 50 அதி­கார அல­குகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

நிலப்­ப­ரப்பு மக்கள் தொகை என்­ப­வற்றின் அள­வு­களையோ எண்­ணிக்­கை­களையோ கருத்தில் கொள்­ளாமல் எல்லா மாநி­லங்­களும் சம­மா­கவே மதிக்­கப்­ப­டு­கின்­றன.

மத்­திய அரசின் இரண்­டா­வது சபை­யென அழைக்­கப்­படும் செனட் சபை­யா­னது எல்லா மாநி­லங்­க­ளுக்கும் சம­மான அங்­கத்­து­வத்­தையே வழங்­கி­யுள்­ளது.

அமெ­ரிக்க அர­சியல் அமைப்பின் விசேட அம்சம் யாதெனில் மாநி­லங்­க­ளுக்கு அதிக அதி­கா­ரங்­களை வழங்­கிய யாப்­பாக காணப்­ப­டு­வ­தாகும்.

சில குறிப்­பிட்ட அதி­கா­ரங்­களே மத்­திய அரசின் கைவசம் உள்­ளன எஞ்­சி­யவை மாநி­லங்­க­ளுக்கு பார­தீ­னப்­படுத்தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக சொல்­லப்­போனால் வெளி­நாட்டு வர்த்­தகம், உற­வுகள், முப்­ப­டைகள், நாணய வெளி­யீடு உட்­பட்ட 18 வகை­யான அதி­கா­ரங்கள் மத்­திய அர­சுக்­கு­ரி­யவை.

ஐரோப்­பாவில் நீதி தேவதை பறந்து திரியும் நாடாக போற்­றப்­படும் சுவிட்ஸர்­லாந்தின் சமஷ்டி முறை இன்னும் சிறப்பம்சம் கொண்­ட­தாக புக­ழப்­ப­டு­கின்­றது.

SwitzerlandMapwithCities
ஜேர்­ம­னியர் 65 சதவீதமும் பிரஞ்­சு­மொழி பேசுவோர் 18 சதவீதமும், இத்­தா­லியர் 9 சதவீதமும், ரோமன் மொழி பேசுவோர் 1 சதவீதமும் வாழும் இந்­நாட்டில் நான்கு மொழி­க­ளுமே தேசி­ய­மொழி. 3 மொழிகள் ஆட்சி மொழி­யா­கவும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

நிர்­வாக துறை­யான சமஷ்டி அவை­யிலும் மூன்று ஆட்சி மொழி­களைச் சேர்ந் தோர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றார்கள். 1948 உரு­வாக்­கப்­பட்ட சமஷ்டி இன்­று­வரை பின்­பற்­றப்­பட்டு வரு­கி­றது.

இந்த சமஷ்டி கட்­ட­மைப்பில் இரு­வகை கட்­ட­மைப்­பு­க­ளுண்டு (1)மாநி­லங்கள் (2)கன்­ரைன்கள் (CONTONS) 26 கன்­ரைன்கள் உள்ள சுவிட்ஸர்­லாந்தில் 20 கன்­ரைன்கள் முழு­மைத்­தன்மை கொண்­ட­தா­கவும் 06 அரை அதி­காரத் தன்மை கொண்­ட­தா­கவும் இயங்கி வரு­கின்றன.

அமெ­ரிக்­காவைப் போல் மத்­தி­ய­ர­சுக்­கென சில அதி­கா­ரங்­களை ஒதுக்கி விட்டு ஏனை­யவை மாநில அர­சு­களின் அதி­கா­ரங்­க­ளாக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

நான்கு நாடு­களின் சமஷ்டி முறை­யி­ லான அவற்றின் கட்­ட­மைப்­பையும், அதி­கார பங்­கீட்­டையும் சுருக்­க­மாகப் பார்த்தோம்.

இவ்­வகை நாடொன்­றிலோ அல்­லது பல­வற்றின் கலப்பு தன்மை கொண்­ட­தா­கவோ சமஷ்டி முறை­யி­லான ஆட்சி அமைப்பே இலங்கை போன்ற நாட்­டுக்கு உகந்­தது என்ற கோரிக்­கை­களும் ஆலோ­ச­னை­களும் தமி­ழர்­களால் சுதந்­தி­ரத்­துக்கு பின்­னைய காலப்­ப­கு­தியில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் முன் மொழி­யப்­பட்ட போதும் இலங்கை அர­சாங்­கமோ, இலங்கை அர­சாங்­கத்தை நெறிப்­ப­டுத்தி வரு­கின்ற பேரி­ன­வாத அர­சியல் தலைமைகளோ அல்­லது பௌத்­த­வாத இனக்­கு­ழுக்­களோ ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

அங்­கீ­க­ரிக்க தயா­ரா­கவும் இருக்­க­வு­மில்லை. பண்டா – செல்வா ஒப்­பந்தம், டட்லி – -செல்வா உடன்­ப­டிக்கை அதன் பின்னே அடிக்­கடி பேசப்­பட்டு வந்த பிராந்­திய சபை­களோ பேரி­ன­வாத தலை­மைகள் கடு­மை­யாக எதிர்த்தார்கள்.

மாவட்ட சபைகள் கூட அவர்கள் பார்­வையில் நாட்டை பிரிப்­ப­தற்­கான பிரிந்து செல்­வ­தற்­கான குறி­யீ­டா­கவே அவர்கள் பார்த்­துக்­கொண்­டார்கள்.

ஆயு­தப்­போரின் வளர்ச்சி, இந்­திய தலை­யீ­டுகள் இலங்­கை­யாட்­சி­யா­ளர்­க­ளுக்கு பயத்தை உரு­வாக்­கி­யதன் காரண­மாக திம்பு பேச்­சு­வார்த்­தைக்கு உடன்­பட்­டார்கள்.

ஆனால், அங்கு முன் வைக்­கப்­பட்ட நான்கு அம்சக் கோரிக்கை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­த­ன­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

1986 ஆம் ஆண்டு நவம்­பரில் பெங்­களூர் சார்க் உச்சி மாநாட்டின் போது ராஜீவை சந்­தித்த ஜே.ஆர். 1984 இல் நடைபெற்ற சர்­வ­கட்சி மாநாட்டு தீர்­மா­னத்தை முன்­வைத்தார்.

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து அம்­பா­றையை துண்­டித்து வடக்கு, கிழக்கு மாகா­ணங்களோடு இணைப்பதன் மூலம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண­மு­டியும் என்­பதில் இணக்கம் காணப்­பட்ட நிலையில் இந்த தீர்வு பொதியை திணிக்க இந்­தியப் பிர­தமர் முயற்­சித்த போதும் கிழக்கு மாகா­ணத்தை பிரிப்­பதை அடிப்­ப­டை­யாக கொண்ட எந்த தீர்­வையும் நாம் ஏற்­கப்­போ­வ­தில்­லை­யென விடு­த­லைப்­புலி அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் மறுத்தார்.

இதன் பின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வு பொதிகளும் அதை ஐ.தே.கட்சியினரும் ரணில் விக்கிரமசிங்கவின் சமாதான பேச்சு வார்த்தைகளுடன் கூடிய உடன் பாடுகளை சுதந்திரக்கட்சியினரும் மாறி மாறி எதிர்த்ததன் காரணமாக அவற்றுக்கு ஏற்பட்ட அவலங்களை நாட்டு மக்கள் நன்றாக அறிவர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல் மாகாண சபை மீது இறுதியில் நம்பிக்கை கொள்ள வேண்டிய சூழ்நிலையை மஹிந்த அரசு கொண்டு வந்தது.

அந்த மாகாண சபையை பலவீனப்படுத்தவும், இல்லாது ஒழிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளும் தெரிந்த விடயங்களே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றமொன்று நடைபெற்­றி­ருக்­ கி­றது.

இந்த சாத்­தி­ய­மான அர­சியல் சூழ்­நி­லையைப் பயன்­ப­டுத்தி நிரந்­தர அர­சியல் தீர்வை அடைய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

பிரி­ப­டாத ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் சுய­நிர்­ணய உரி­மையை அடித்­த­ள­மாக கொண்ட சுயாட்சி முறை­யி­லான தீர்வொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்ற எத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிற நிலையில்…,

சமஷ்டி முறை­யி­லான தீர்வை நோக்கி நகர்த்­தப்­பட வேண்­டிய இராஜ­தந்­தி­ரங்­க­ளையும் சாணக்­கி­யங்­க­ளையும் ஜனநாயக யுக்­தி­க­ளையும் இனியும் மேற்­கொள்ள தமிழ் மக்கள் தவ­று­வார்­க­ளாக இருந்தால், தமிழ் தலை­மைகள் முன்­னெ­டுக்க மறப்பார்­க­ளாக இருந்தால், மீண்­டு­மொரு ஆயு­தப்­போ­ருக்­கான அத்­தி­வாரம் இடுப வர்களாக அரசும், தமிழ் தலைமைகளும் ஆக வேண்டி வருமென்பது யதார்த்த மாக இருக்கும்.

Share.
Leave A Reply