தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்­வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பத­வி­க­ளையோ, வேறு சலுகை­க­ளையோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரோ நானோ பெறப்போவ­தில்லை என்று தமிழ்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலையில் உள்ள தனது இல்­லத்தில் இளைஞர் அமைப்­புக்­களை சேர்ந்­த­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சியல் தீர்வை நோக்­கிய எமது பயணம் எவ்­வி­டத்­திலும் தரிக்­கப்­போ­வ­தில்லை ஜன­வரி 8 ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எத்­த­கைய வெற்­றியை அடைந்­தாரோ அந்த வெற்­றியை உறுதி செய்யும் வகையில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலின் முடி­வுகள் அமை­யு­மென நாம் பல­மாக நம்­பு­கின்றோம்.

அவ்­வாறு இல்­லை­யாயின் பல­மான பாரா­ளு­மன்­ற­மொன்றில் மைத்­தி­ரியின் அர­சாங்கம் அமைவதற்கு நாம் ஆத­ரவு நல்­கவும் தயா­ரா­க­வு­முள்ளோம்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவு அர­சாங்­க­மானது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அர­சாங்­க­மாக அமை­யு­மாயின் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை 2016 ஆம் ஆண்டு முடி­வ­தற்கு முன்­னமே பெற்றுத் தீர்­வோ­மென என்னால் நம்­பிக்­கை­யாக கூற முடியும்.

அர­சியல் தீர்­வொன்று கிடைத்­த­பின்பே ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அமைச்சுப் பத­வி­க­ளையோ அல்­லது வேறு சலு­கை­க­ளையோ நாம் பெற முயற்­சிப்­போம்.

தவிர எக்­கா­ரணம் கொண்டும் அர­சியல் தீர்வை அடை­யாத வரை எந்­த­வொரு அமைச்சர் பத­விக்­காவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாசித்து நிற்­கா­தென நீங்கள் உறு­தி­யாக நம்­பலாம். எங்கள் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்கள் வழங்­கப்­பட வேண்டும்.

அவர்­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்­பதில் நான் மாற்றுக் கருத்துக் கொண்­ட­வ­னல்ல.

அமைச்சர் பத­வி­யொன்றை எடுக்கும் சாத்­திய நிலை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் கப்­பல்­துறை துறை­மு­கங்கள் மற்றும் கைத்­தொழில் அமைச்சுப் பத­வி­களைப் பெற்று லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை வழங்க வேண்­டு­மென்­பது எனது எண்ணமாகும்.

அந்த நிலை உரு­வா­கு­வ­தற்கு அர­சியல் தீர்­வைப்­பெறும் சாத­க­மான சூழ் நிலை­யொன்று உரு­வா­க­வேண்டும். உரு­வா­கு­மென்ற நம்­பிக்கை எமக்­குண்டு.

எமது மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் கூறி­யுள்ளோம். தெற்கில் எமது விஞ்­ஞா­பனம் பற்­றிய சல­ச­லப்பு ஏற்­பட்­டி­ருப்­பதை நான் அறிவேன்.

எமது உறு­தி­யான நிலைப்­பாட்­டையும் தெளி­வான கொள்­கை­க­ளையும் தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நாட்டை பிரி­யுங்கள் என்று கேட்­க­வில்லை. பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் நிலை­யா­னதும் நிரந்­த­ர­மா­னதும் நியா­ய­பூர்­வ­மான அர­சியல் தீர்­வொன்றை தாருங்கள் என்றே கேட்­கின்றோம்.

அவ்­வாறு கேட்­ப­தற்கு எமக்கு பூரண உரி­மை­யுண்டு. நாங்கள் இந்த நாட்டில் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்­தி­ருக்­கின்றோம். வட­கி­ழக்கு இணைந்த சமஷ்டி முறை­யி­லான பிராந்­திய சுயாட்சி வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதே எமது கோரிக்கை. அதுதான் எமது உறு­தி­யான நிலைப்­பா­டு­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வரை அவர் ஒரு தாராண்­மை­வாதி, மஹாத்­மா­காந்தி, நெல்சன் மண்­டேலா, மார்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலை­வர்­களின் கொள்­கை­களை நான் நேசிப்­பவன் அவர்­க­ளைப்­போல வாழ விரும்­பு­கின்­றவன்.

அந்த தலை­வர்­களின் கொள்­கையைப் பின்­பற்றி இந்த நாட்டில் வாழும் சகல மக்­க­ளுக்கும் சமத்­து­வ­மான உரி­மை­களைப் பெற்று வாழ என்­னா­லான முயற்­சி­களை மேற்­கொள்வேன் என்று ஜனாதிபதி கூறி­வ­ரு­வதை கேட்­கின்றோம்.

எனவே தான் இந்த ஜனா­தி­ப­தியின் காலத்­துக்குள் நிலை­யான நிரந்­தி­ர­மான அர­சியல் தீர்­வொன்றை தமிழ் மக்கள் பெற்று விட­வேண்­டு­மென்­பதில் த.தே.கூட்­ட­மைப்பு அக்­கறை கொண்­ட­தாக காணப்­ப­டு­கி­றது.

தேர்தல் முடிந்த பின்பு ஏற்­ப­டக்­கூ­டிய உள்­நாட்டு அர­சியல் சூழ் நிலையைக் காட்­டிலும் வர­வி­ருக்கும் புதிய அர­சாங்கம் எதிர்­கொள்ளக் கூடிய சவால்­க­ளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மனித உரிமைப் பேர­வையின் அறிக்­கை­யா­னது செப்டெம்பர் மாதம் அளவில் வெளி­வ­ர­வி­ருக்­கி­றது. ஏலவே ஒரு­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்ட மனித உரிமை அறிக்­கை­யா­னது இன்­றைய அர­சியல் சூழலில் அதுவும் வர­வி­ருக்கும் புதிய அரசாங்க சூழலில் பாரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருமென்று நம்பலாம்.

66 வருடகாலமாக மையம் கொண்டிருந்த இனநெருக்கடிகளுக்கு நல்லதொரு விடிவுகாலத்தைப் பிறப்பிக்குமென்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறானதொரு சாத்தியமான சூழலில் வெல்ல முடியாத சர்வதேசத்தால் அறியப்படாத மாற்றுக்கட்சிகளுக்கு உங்கள் வாக்குக்களையிட்டு உங்கள் அரசியல் உரிமைகளை பாழாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Share.
Leave A Reply