நான் அவளை அடித்தேன்…. உண்­மைதான் சேர்…… அன்று காலை ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலை­யி­லேயே அவளை நான் அடித்தேன்…… அவ­ளது அடி­வ­யிற்­றிலும் முது­கிலும் பல அடிகள் விழுந்­தன….

அவ்­வாறு தாக்கி அவளை தள்­ளி­விட்ட போது அவள் கட்­டி­லிலே மேல் நோக்கி பார்த்­த­வாறு விழுந்தாள்……. சேர்……. விழுந்­தவள் மீண்டும் எழவே இல்லை…… இதுதான் சேர் நடந்­தது……”

கடந்த ஜூலை 29 ஆம் திகதி புதன்­கி­ழமை புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்தில் பயணப் பொதியில் அடைக்­கப்­பட்டு கைவி­டப்­பட்­டி­ருந்த 34 வய­தான ஆர்.கார்த்­தி­காவின் காதலன் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்குமூலத்தின் ஒரு பகு­தியே அது.

44 வய­து­டைய யாழ். நல்லூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த சந்­தேக நப­ரான கார்த்­தி­காவின் காதலன் பெட்ரிக் சின்­னராசா கடந்த ஆகஸ்ட் 05 ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யன்று மன்னார் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட மாந்தை மேற்கு இலுப்­பக்­க­டவை கோவில் குளத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு கொழும்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு விசேட விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

இதன் போது ‘புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்­கப்­பட்ட சடலம்’ குறித்த அனைத்து மர்­மங்­களும் துலக்­கப்­பட்­டுள்­ளன.

pennமேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட ஆகி­யோரின் மேற்­பார்­வையில் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் நுவன் வெத­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­க­மைய குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டீ சில்­வாவின் நேரடிக் கண்கானிப்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான ரஜீவ ஹெட்டி ஆரச்சி, எஸ்.ரங்­க­நாதன், இந்­திகா தீபால், சார்­ஜன்­க­ளான ரோஹன (50070), ஜய­நெத்தி (31065) ஆகி­யோ­ருடன் கான்ஸ்­ட­பிள்­க­ளான ருவன் (69987), விக்­ர­ம­நா­யக்க (84333), ஜயலத் (349493) ஆகியோர் அடங்­கிய குழுவே மன்­னா­ருக்கு சென்று சந்­தேக நபரை கைது செய்து பயணப் பொதி­யினுள் இருந்த சடலம் தொடர்­பான அத்­தனை மர்­மங்­க­ளையும் துலக்­கி­யுள்­ளது.

கடந்த ஜூலை 29 ஆம் திகதி முற்­பகல் 9.30 மணி­ய­ளவில் புறக்­கோட்டை பஸ் நிலை­யத்தில் 3 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட கறுப்பு நிற பயணப் பெட்­டியில் இருந்து பெண்ணொ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டது.

அந்த சடலம் யாரு­டை­யது என்­பதை அடை­யாளம் கண்­டுக்­கொள்ள பொலி­ஸா­ருக்கு சுமார் 24 மணி நேரம் தேவைப்­பட்­டது.

சடலம் மீட்­கப்­பட்டு சில மணி­நே­ரங்­க­ளி­லேயே விசா­ர­ணைகள் புறக்­கோட்டை பொலி­ஸா­ரிடம் இருந்து கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­ன­ரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே மீட்­கப்­பட்ட சட­லத்தை அடை­யாளம் காண பொலிஸார் ஊட­கங்­களின் உத­வியைப் பெற்றுக் கொண்­டனர். இதன்­பலன் மறுநாள் அதா­வது ஜூலை 30 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பொலி­ஸா­ருக்கு சடலம் குறித்த முதல் தகவல் கிடைத்­தி­ருந்­தது.

‘சேர் ஊட­கங்­களில் அடை­யாளம் காண்­ப­தற்­காக பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்ள படத்திலுள்ள பெண் எமது லொஜ்ஜில் தான் தங்­கியி­ருந்தார்’ என புறக்­கோட்டை செட்­டியார் தெருவிலுள்ள லொஜ் ஒன்றின் முகாமையாளர் தொலை பேசியில் தெரிவிக்க லொஜ்­ஜிக்கு படை­யெ­டுத்த பொலிஸார் அங்கு பதிவு புத்­த­கத்தில் இருந்து முதலில் தகவல் பெற்­றனர்.

பின்னர் அந்த லொஜ்ஜின் சீ.சீ.ரீ.வி கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­க­ளையும் பொலிஸார் பெற்று பரி­சோ­தித்­தனர். அத்­துடன் அவர்கள் தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும் அறையை குற்­றப்­பி­ர­தே­ச­மாக பிர­க­டனம் செய்து பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரும் அழைக்­கப்­பட்டு தட­யங்கள் தேடப்­பட்­டன.

இந்­நி­லையில் லொஜ்ஜில் இருந்த பதிவு புத்­த­கத்தில் பதி­வா­கி­யி­ருந்த முக­வரி, அடை­யாள அட்டை இலக்கத்தை வைத்து பெட்­டிக்குள் சட­ல­மாக இருந்த பெண் வட்­டுக்­கோட்­டையை சேர்ந்த ஆர். கார்­த்திகா என்­பதை பொலிஸார் அடை­யாளம் கண்­டு­கொண்­டனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் விசா­ர­ணை­களில் கார்­த்திகா கல்­யா­ண­மாகி ஏழு வயது மகளின் தாய் என்றும் கணவன் 2010 ஆம் ஆண்டு முதல் வெளி­நாட்டில் இருந்து வரு­வதும் தெரி­ய­வந்­தது.

இத­னை­விட கார்­த்தி­காவின் மகள் கார்த்­தி­காவின் தாயாரின் அர­வ­ணைப்பில் இருப்­பதும் கடந்த 3 வரு­டங்­க­ளாக கார்த்­திகா கொழும்­பி­லேயே வசித்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தக­வல்­களைப் பெற்றுக் கொண்ட போது விசா­ர­ணைகள் பல கோணங்­களை நோக்கி நகர்த்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் கடந்த ஜூலை 31 ஆம் திகதி வெள்­ளி­யன்று கொழும்பை வந்­த­டைந்த கார்த்­தி­காவின் தாயார் தனது மகளின் சட­லத்தை அடை­யாளம் காட்­டி­யதை அடுத்து பிரேத பரி­சோ­த­னைகள் நடத்­தப்­பட்­டன.

எனினும் அந்த பரி­சோ­த­னை­களில் மர­ணத்­துக்­கான காரணம் துல்­லி­ய­மாக கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் சட­லத்தின் பாகங்கள் மேல­திக ஆய்­வுக்கு எடுக்­கப்­பட்­டதன் பின்னர் சட­லத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிபந்­த­னை­யுடன் தாயிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

எனினும் ஏழ்மை கார­ண­மாக அரச செல­வி­லேயே இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

சடலம் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் அவ்­வாறு ஒரு புற­மி­ருக்க சீ.சீ.ரீ.வி.கமரா பதி­வு­களை கார்­த்தி­காவின் தாயா­ரான கலை­வாணி அல்­ம­ரா­ச­னிடம் காண்­பித்து விசா­ர­ணைக்­கான தக­வல்­களை பொலிஸார் சேக­ரித்­தனர்.

இதனை தொடர்ந்து கொழும்பு மேல­திக நீதிவான் திலின கமகே முன்­னி­லையில் மரண விசா­ர­ணைகள் இடம்­பெற்ற போது கார்­த்தி­காவின் தாயார் இப்­படி சாட்­சி­ய­ம­ளித்தார்.

எனக்கு இரு மகள்மார் உள்­ளனர். இங்கு இறந்­தி­ருப்­பவர் எனது மூத்த மகள். அவ­ருக்கு 33 வய­தா­கி­றது. அவள் 2003 ஆம் ஆண்டு கொக்­கு­விலை சேர்ந்த அரு­மை­ராசா ரங்கன் என்­ப­வரை திரு­மணம் செய்தார். அவர்­க­ளுக்கு ஒரு பிள்­ளையும் உள்­ளது.

மகளின் கணவர் மது­வுக்கு அடி­மை­யா­னவர். அதனால் நித்தம் பிரச்­சி­னை­யேற்­பட்­டது. அதன் எதி­ரொ­லி­யாக எனது மகளை விட்டு அவர் பிரிந்து வேறு ஒரு­வரை திரு­மணம் செய்­து­கொண்டு வெளி­நாடு சென்றார்.

இந்­நி­லையில் எனது மகள் 2011 ஆம் ஆண்டு கிருஷ்ணா என அறி­யப்­படும் நப­ருடன் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்டார். அவர்கள் இரு­வரும் ஒன்­றா­கவே வாழ்ந்­தனர்.

சில வரு­டங்­க­ளுக்கு முன் மக­ளுடன் காதல் தொடர்­பினை ஏற்­ப­டுத்திக் கொண்­டவர் கொழும்­புக்கு சென்றார். அவர் மகளை அங்கு வரு­மாறு பின்னர் அழைத்தார். கிருஷ்­ணாவின் உண்மை பெயர்/ முழு­ப் பெயர் அவ­ரது முக­வரி என எதுவும் எனக்குத் தெரி­யாது.

மகள் என்­னுடன் இறு­தி­யாக கடந்த ஜூலை 28 ஆம் திகதி கதைத்தார். தொலை­பே­சி­யி­லேயே அவர் கதைத்தார். அம்மா நான் தங்க சங்­கிலி ஒன்­றி­னையும் தங்க மோதிரம் ஒன்­றி­னையும் செய்து கொண்டேன். இப்­போது எனது பிரச்­சினை எல்லாம் தீர்ந்­து­விட்­டது என அவர் என்­னிடம் கூறினார்.

மகளின் சடலம் இருந்த பெட்­டியை ஒருவர் தூக்கிச் செல்­வதை சீ.சீ.ரீ.வி பதி­வு­களில் பார்த்தேன். அந்தப் புகைப்­ப­டங்கள் ஊடாக அவ்­வாறு தூக்கிச் செல்பவர் கிருஷ்ணா என்­பதை நான் அடை­யாளம் கண்டேன் என நீதிவான் திலின கமகே முன்­னி­லையில் கார்­த் தி­காவின் தாயார் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் தான் கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் மேலும் பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினர்.

அதா­வது கார்த்­தி­காவும் அவரை கொலை செய்­த­தாக நம்­பப்­படும் நபரும் இர­க­சிய காதல் தொடர்­பினை பேணி வந்­தி­ருப்­பதே அது­வாகும்.

அதனை விட செட்­டியார் தெரு லொட்ஜ்­ஜிற்கு அவர்கள் கடந்த ஜூலை 22 ஆம் திக­தியே வந்­துள்­ளதும் வரும் போது கேஸ் அடுப்பு, சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், பல­ச­ரக்கு பொருட்­களையும் அவர்கள் கொண்டுவந்­துள்­ள­மையும் ஒரு நாளைக்கு 700 ரூபா என்ற வாடகை அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் தங்­கி­யி­ருந்­துள்­ளமை தொடர்­பிலும் பொலிஸார் உறு­திப்­ப­டுத்திக் கொண்­டனர்.

அப்­ப­டி­யானால் 22 ஆம் திக­திக்கு முன்னர் அவர்கள் எங்­கி­ருந்­தனர் என பொலிஸார் தேடிய போது ஆமர் வீதி, கந்­தானை உள்­ளிட்ட இடங்­களில் அவர்கள் வாட­கைக்கு இருந்­துள்­ளமை தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல்கள் கிடைத்­துள்­ளன.

இந்த தக­வல்­களை வைத்துக் கொண்டு குற்றத் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழு சீ.சீ.ரீ.வி ஊடாக அடை­யாளம் கண்ட நபரை சல்­லடை போட்டு தேடி­யது.

paldiதலை­நகர் கொழும்­பி­லுள்ள 127க்கு மேற்­பட்ட சீ.சீ.ரீ.வி கம­ராக்­களின் உத­வியும் இதன் போது பெற்றுக் கொள்­ளப்­பட்­டது. அத்­துடன் குறித்த நபரின் தொலை­பேசி இலக்­கத்தை ஒரு­வாறு கண்­ட­றிந்து அத­னூ­டா­கவும் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

அதன் பல­னாக குறித்த சந்­தேக நபர் கொழும்பில் இல்லை என்­பதை உறுதி செய்து கொண்ட குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அவரைத் தேடி வடக்­கிற்கு படை­யெ­டுத்­தது.

அங்கு சென்ற பொலிஸார் முதலில் யாழ். நல்லூர் பகு­திக்கு சென்று விசா­ரித்த போதும் பயன் ஏதும் கிடைக்காமையால் வவு­னி­யா­விலும் தகவல் சேக­ரித்­தனர்.

இந்­நி­லையில் தான் மன்னார் கோவில் குளத்தில் சந்­தேக நபர் மேசன் வேலை செய்­வ­தாக குற்றத் தடுப்பு பொலிஸ் குழு­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

விரைந்து செயற்­பட்ட விசேட பொலிஸ் குழு வேலை செய்­து­கொண்­டி­ருக்கும் போதே அவரை கையும் மெய்­யு­மாக பிடித்­தது.

குறித்த நபரை கைது செய்த நிலையில் அவர் 44 வய­து­டைய பெட்ரிக் சின்­ன­ராசா என்ற இயற்­பெ­யரை உடை­யவர் என்­ப­தையும் அவர் 3 பிள்­ளை­களின் தந்தை என்­ப­தையும் கண்­ட­றிந்த பொலிஸார் கிருஷ்ணா என்­பது அவரே என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்திக் கொண்­டனர்.

கடந்த 5 ஆம் திகதி புத­னன்று கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர் அன்­றைய தினமே கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்­ட­துடன் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டார். இதன் போது மேலும் பல தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன. குற்­றத்­த­டுப்புப் பொலி­ஸா­ருக்கு சந்­தேக நபர் வழங்­கிய வாக்கு மூலத்தை சுருக்­க­மாக நாம் தரு­கிறோம்.

“சேர்…. சம்­பவம் இடம்­பெற்ற தினம் எங்கள் இரு­வ­ருக்கும் இடையில் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டது. அது தொட­ரவே அவளை நான் அடித்தேன். நான் அடித்த அடி அவ­ளது அடி­வ­யிற்­றையும் முது­கையும் பல­முறை பதம் பார்த்­தது.

அடித்­த­வாறே நான் அவளை தள்­ளி­விட்ட போது அவள் கட்­டிலில் விழுந்தாள். சுமார் ஒரு மணி நேரம் வரை அவள் அசை­வற்று கிடந்தாள். அதனால் அவள் உயி­ரி­ழந்­து­விட்­டதை நான் உணர்ந்தேன். சட­லத்தை பெட்­டியில் போட்டு வவு­னியா கொண்டு செல்லும் நோக்­கோடு தனியார் பஸ் நிலையத்­துக்கு சென்றேன்.

நான் மூன்று வரு­ட­மாக கார்­த்தி­கா­வுடன் ஒன்­றாக வாழ்ந்­துள்ளேன். ஆமர் வீதி, கந்­தானை பிர­தே­சங்­களில் நாம் வசித்­துள்ளோம்.

கந்­தா­னையில் கோழிப் பண்ணை ஒன்றில் வேலை செய்த போது எங்­க­ளுக்கு ஒரு குழந்தை ராகம வைத்­தி­ய­சா­லையில் பிறந்­தது. அந்த குழந்­தையை வைத்­தி­ய­சா­லை­யி­லேயே விட்­டு­விட்டு நாம் தப்பிச் சென்றோம்.

அதன் பின்னர் திவு­லப்­பிட்டி பிர­தே­சத்தில் ஒரு பண்­ணையில் இரு­வரும் தங்­கி­யி­ருந்து வேலை செய்தோம்.

இந்­நி­லையில் திவு­ல­பிட்டி பண்­ணையில் ஏற்­பட்ட சிறு பிரச்­சி­னையால் அங்­கி­ருந்து நாம் இரு­வரும் மீண்டும் கடந்த ஜூன் 22 ஆம் திகதி கொழும்பு வந்து செட்­டியார் தெருவில் உள்ள லொட்ஜ்ஜில் தங்­கினோம்.

அங்கு நாம் இரு­வரும் சந்­தோ­ச­மாக இருந்தோம். இந்­நி­லையில் கையில் இருந்த காசு அனைத்தும் செல­வா­னது. அதனால் மீண்டும் திவு­லப்­பிட்டி பண்­ணைக்கு போக நான் அவளை அழைத்தேன். அவள் மறுத்தாள். வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டது. இந்த சம்­பவம் இடம்­பெறும் போது நேரம் காலை 6.00 மணி இருக்கும்.

வாய்த்­தர்க்கம் முற்­றவே நான் அவளை அடித்து தள்ளி விட்டேன். எனது அடி அவ­ளது அடி வயிறு முதுகை பதம் பார்க்­கவே கட்டில் மீது அவள் மயக்­க­முற்று விழுந்தாள்.

கட்­டிலில் விழுந்த அவளிடமிருந்து எந்த அசைவும் இருக்­க­வில்லை. நான் தண்ணீர் தெளித்தும் பார்த்தேன் பய­னில்லை. அவ­ளது மூச்சு அப்­போது நின்­றி­ருந்­தது.

அவள் நினைவு திரும்­புவாள் என எண்ணி ஒரு மணி நேரம் காத்­தி­ருந்தேன். பிர­யோ­சனம் இல்லை. நினைவு திரும்­ப­வில்லை. அவள் இறந்­து­விட்­ட­தாக நினைத்தேன். அவ­ளது சட­லத்தை அவ­ளது பயணப் பெட்­டியில் வைத்து வவு­னியா கொண்டு செல்ல நினைத்தேன்.

அவ­ளது சட­லத்தை பயணப் பொதியில் போட்டு மிக சிர­மத்­துக்கு மத்­தியில் லொட்ஜ்­ஜி­லி­ருந்து முச்­சக்­கர வண்­டிக்கு ஏற்­றினேன். முச்­சக்­கர வண்­டியில் சட­லத்­துடன் கூடிய பெட்­டியை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­துக்கு கொண்டு வந்தேன்.

அனு­ரா­த­புரம் பஸ் தரிக்கும் இடத்தில் பெட்­டியை வைத்­து­விட்டு வவு­னியா பஸ் தொடர்பில் விசா­ரித்து வர சென்றேன்.

sadalmவவு­னியா பஸ் தொடர்பில் விசா­ரித்து விட்டு பெட்­டியை எடுத்துச் செல்லும் நோக்கில் அனு­ரா­த­புரம் பஸ் தரிக்கும் இடத்­துக்கு வந்தேன்.

அப்­போது அந்த இடத்தில் பொலி­ஸாரும் பொது மக்­களும் கூடி­யி­ருந்­தனர். எனக்கு பயம் ஏற்­பட்­டது. நான் பெட்­டியை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றேன்.

முதலில் வவு­னி­யாவில் உள்ள சகோ­த­ரியின் வீட்­டுக்கு எனது கையில் இருந்த மேலும் இரு பொதி­க­ளுடன் சென்றேன்.

அங்கு வைத்து சிகை அலங்காரங்களையெல்லாம் மாற்றிக் கொண்டு மன்னாரில் உள்ள உறவினர் வீடொன்றுக்குச் சென்றேன். அங்கிருந்தவாறு மேசன் வேலை செய்யும் போதே நீங்கள் கைது செய்தீர்கள்” என சந்தேக நபர் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சந்தேக நபரின் வாக்கு மூலமானது நீதிமன்றின் முன்னிலையில் பெறுமதியற்றது என குறிப்பிடும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சாட்சியங்கள் ஊடாக அவ்வாக்கு மூலத்தை பொலிஸார் உறுதி செய்ய வேண்டிய தேவையிருப்பதாக சுட்டிக் காட்டினார்.

சன நடமாட்டம் கூடிய புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் மர்மத்தை ஒரே வாரத்தில் துலக்கிய பொலிஸார் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இதனைவிட அண்மைக் காலமாக இலங்கையில் பதிவான பல கொலைகளுக்கு தகாத உறவு அல்லது இரகசிய காதல் என்பன காரணமாக உள்ளதை அவதானிக்கும் போது சமூக மட்டத்தில் இன்னும் பாரிய பொறுப்பு உள்ளதை உணர முடிகிறது.

Share.
Leave A Reply