பமாகோ: ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் 7 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினரால், பலர் மீட்கப்பட்டனர். மாலி நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பைப்லோஸ் என்ற ஹோட்டலில் தீவிரவாதிகள் நேற்று காலை ஊடுருவி பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

தகவல் அறிந்த மாலி நாட்டு பாதுகாப்பு படைகள் ஹோட்டலை சுற்றி வளைத்து இன்று காலை வரை துப்பாக்கி சண்டையிட்டு பல பிணையக் கைதிகளை மீட்டனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் 7 பொது மக்கள் உயிரிழந்தனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

மீட்கப்பட்டோர் தலைநகர் பமாகோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply