நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டியுள்ள கட்சியாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

cycle-1cycle-2

Share.
Leave A Reply