நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும் போது பாரிய மோசடியை அரசாங்க உயர் அதிகாரிகளின் துணையோடு மாவைறும் சுமந்திரனும் செய்து முடித்து யாழ்ப்பாண மக்களையும் சக வேட்பாளர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்த உயர் அதிகாரியின் மூலம் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்த அதிகாரி தெரிவித்த தகவல்களை நாம் இங்கே தருகிறோம்.அதிகாலை 10 மணியலவில் சகல விருப்பு வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து அவற்றின் பெறுபேறுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் முதல் 8 இடங்களில் இருந்தவர்கள் சிறிதரன், சித்தார்த்தன் அருந்தவபாலன்,பிரேமச்சந்திரன், மதனி , சேனாதிராஜா, சரவணபவான் மற்றும் சுமந்திரன்.

இதை அறிந்து கொண்ட சுமந்திரனும் மாவையும் அரச உயர் அதிகாரியின் துணையோடு கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிதரன் அவர்களுக்கு தனி இரு விருப்பு வாக்கு என அளிக்கப்பட்ட 27000 வாக்குகளும் யாழ்மாவட்டத்தில் பிரேமச்சந்திரனுக்கும் தனி ஒரு விருப்பு வாக்கு என அளிக்கப்பட்ட 11000 வாக்குகளும் மாவைக்கும் சுமந்திரனுக்கும் முறைகேடாக மாற்றியமைக்கப்பட்டு முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

அதன்டிபபடையில் மாற்றியமைக்கப்பட்டு முதல் 8 இடங்கள் முறையே சிறிதரன், சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், அருந்தவபாலன், பிரேமச்சந்திரன், மதனி மற்றும் சரவணபவான் என வழங்கப்பட்டன. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட விடயங்கள் உதயன் பத்திரிகை செய்தியாளர் இருவருக்கு தெரிய வந்ததால் இது சரவணபவான் காதுக்கு எட்டிவிட்டது.

தான் வெளியே எனத் தெரியவந்ததால் சரவணபவன் மாவைக்கு தொலைபேசி மூலம், நீங்கள் செய்த முறைகேடுகள் எனது செய்தியாளரிடன் இருக்கிறது.

என்னை உள்ளே எடுக்காவிட்டால் உங்களின் முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று மாவையுடன் உரத்த தொணியில் கதைத்த சாரவிற்கு மாவை சொன்னார் நீர் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.

நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று.அதன் விளைவே சரவணபவான் உள்ளே எடுக்கப்பட்டு அருந்தவபாலன் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

யாழில் சுமந்திரனுக்கு இவ்வளவு விருப்பு வாக்கா? என வாக்குப் போட்ட யாழ்ப்பாண மக்களே ஏங்கித் தவிக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்காக வெறும் 24612 வாக்காளர்களே  இருந்தார்கள். நிட்சயமாக 58043  வாக்காளர்கள்  இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் பிரபாகரனே – வன்னி எம்.பி (Video)

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனே என கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதனை வரவேற்கும் நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.

இதன்போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Leave A Reply