புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபோதையில் குடுமிப்பிடி சண்டையிட்ட இளம்பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றச் செயல்களுக்கு பெயர் போன டெல்லியில் பெண்கள் இரவில் நடந்து செல்ல பாதுகாப்பு இல்லை என்று ஒருபுறம் கவலை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் மது,. சிகரெட் என போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நவ நாகரீக இளம் பெண்கள் சிலர், ஒரு பப்பிற்கு வெளியே பரஸ்பரம் ஒருவரின் குடுமியை மற்றொருவர் பிடித்து மோதலில் ஈடுபட்டனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், தலையில் அடித்துக் கொண்டு அவர்களை விலக்கிவிட்டுள்ளனர்.
குர்கான் சாரா மாலுக்கு வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்தது. நடு ரோட்டில் சண்டையில் ஈடுபட்ட இந்த பெண்கள் அனைவரும், போதையில் இருந்து உள்ளனர்.
இந்த குர்கான் எம்.ஜி ரோட்டில் அதிகமான பப்புகளும், பார்களும் உள்ளன. சண்டை முடிந்து கும்பலாக அந்தப் பெண்கள் ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் வரைலாக பரவி வருகிறது.