ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    சிறப்பு செய்திகள்

    அழகின் மோகத்தில் பறிபோன உயிர்!!

    AdminBy AdminAugust 31, 2015Updated:September 2, 2015No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தான் அழ­காக இருக்­கின்­றேனா? என்று கண்­ணாடி முன்­னின்று தன்னைத் தானே ரசித்து பெரு­மிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்­தாக அமையப் போகின்­றது என்­பதை தினுஷா சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை

    இந்த வார்த்­தையை விரும்­பா­த­வர்கள் விரல் விட்டு எண்ணும் அள­வி­லேயே இருக்­கின்­றார்கள். அந்­த­ள­வுக்கு அழகு என்ற வார்த்தை எல்லா விட­யங்­க­ளிலும் வியா­பித்­தி­ருக்­கின்­றது.

    அதுவும் தன்­னு­டைய புறத்­தோற்றம் அனை­வ­ரையும், கவர்ந்­தி­ழுக்கும் வித­மாக இள­மை­யு­டனும், அழ­கு­டனும் காட்­சி­ய­ளிக்க வேண்டும் என்­ப­தையே அனை­வரும் விரும்­பு­கின்­றார்கள்.

    இதனால் தான் அழகுக் கலை நிலை­யங்­களும், அழ­கு­சா­தனப் பொருட்­களும் மக்­களை ஆக்­கி­ர­மித்து வருகின்றன.

    பலர் தமது பணத்­தையும், நேரத்­தையும் செல­வ­ழித்து இத்­த­கை­ய ­வி­ட­யங்­களை நாடிச் செல்­கின்­றார்கள். ஆனால், இதில் கவ­லை­ய­ளிக்கும் விடயம் என்­ன­வென்றால், தன்­னு­டைய அழகை மெருகூட்டிக்கொள்வதற்காக உப­யோ­கித்த அழ­கு­சா­தனப் பொருட்­களும், நாடிச் சென்ற அழ­குக்­கலை நிலையங்க­ளுமே பல்­வேறு பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தி, உயி­ருக்கே உலை வைப்­பது போல் அமைந்து விடுகின்­றன.

    அந்­த­வ­கையில் இவ்­வாரம் ‘குற்றம்’ பகு­தியில் இடம்­பெ­று­வது தன்­னு­டைய தோற்றம் பார்ப்­ப­வர்­களை கவர்ந்திழுக்கும் வித­மாக நளி­னத்­துடன் காட்­சி­ய­ளிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு இளம் பெண்­ணுக்கு ஏற்பட்ட மிகப்­பெ­ரிய ஆபத்து குறித்த விட­ய­மாகும்.

    Gold-Arist-02ஆம், அவள் தான் கண்டி அம்­பிட்­டிய பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தினுஷா சம­ரகோன் (27 வயது). கண்டி ஹார­கம பிர­தே­சத்­தி­லுள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் மேற்­பார்­வை­யா­ள­ராக கட­மை­யாற்­று­பவள், அழகு திறமை, குறும்பு பேச்சு என்று அனைவர் மத்­தி­யிலும் நீங்­காத இடம் பிடித்­தவள்.

    அது­மட்­டு­மின்றி, தினுஷா சிறு வயது முதலே நவ நாக­ரிக போக்­குக்­கேற்ப தன்­னு­டைய தோற்­றத்­திலும், நடையுடை பாவ­னை­க­ளிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வதில் மிகுந்த ஈடு­பாடு கொண்­டி­ருந்தாள்.

    தன்­னு­டைய அழகை மெரு­கூட்­டிக்­கொள்­வ­தற்கு அழகு சாத­னப்­பொ­ருட்­க­ளி­னதும், அழகுக்கலை நிலையங்களினதும் உத­வியை நாடிச் சென்றாள்.

    எனினும், அதுவே தன்­னு­டைய உயிரைப் பறிக்கும் இய­ம­னாக மாறும் என்­பதை தினுஷா சிறிதும் எண்ணிப் பார்த்­தி­ருக்­க­வில்லை.

    தினுஷா பணி­பு­ரிந்த ஆடைத்­தொ­ழிற்­சா­லை யில் தினு­ஷா­வுடன் நீண்­ட­காலம் தொழில்­பு­ரியும் நண்­பி­யான சந்தம­லிக்கு (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) ஆகஸ்ட் 19 ஆம் திகதி திரு­மணம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெற்ற வண்­ண­மி­ருந்­தன.

    சந்­த­மலி சுமார் ஒரு மாதத்­துக்கு முன்­னரே தன்­னு­டைய திரு­மண வைப­வத்­துக்கு தினுஷா உட்­பட சக ஊழியர்களுக்கு திரு­மண அழைப்­பி­தழை வழங்­கி­யி­ருந்தாள்.

    எனவே, எல்லா இளம் பெண்­களைப் போலவே தினு­ஷாவும் சந்­த­மா­லியின் திரு­மண அழைப்­பிதழ் கிடைக்­கப்­பெற்ற நாள் முதல் சந்­த­மா­லியின் திரு­மண வைப­வத்­துக்கு எப்­ப­டி­யெல்லாம் அலங்­காரம் செய்­து­கொண்டு அனைவர் மத்­தி­யிலும் சென்று அசத்­தலாம் என்று திட்­ட­மிட்டாள்.

    அதன்­படி தனக்கு பொருத்­த­மான விதத்தில் நவ­நா­க­ரி­க­மான ஆடை­களைத் தெரிவு செய்­வ­திலும், அதற்கு பொருத்­த­மான ஆப­ர­ணங்­களை தெரிவு செய்­வ­திலும் தன்­னு­டைய பணத்­தையும், நேரத்­தையும் செல­வ­ழித்தாள்.

    அது­மட்­டு­மின்றி, முன்­கூட்­டியே அழகுக் கலை நிலை­யங்­க­ளுக்கு சென்று புரு­வத்தை சீராக்கிக் கொண்டும், முகப் பொலி­வுக்­கான பேஷியல் வகை­களை செய்­து­கொண்டும் தன்னை தயார்ப்­ப­டுத்­திக்­கொண்டாள்.

    ஒரு வழியாய் அந்த நாளும் வந்­தது. தினுஷா 18 ஆம் திகதி ஆடைத் தொழிற்­சா­லையில் தனது வேலை­களை முடித்து விட்டு மாலை வேளை வீட்­டுக்குத் திரும்­பு­வ­தற்கு முன்பு தன் சக ஊழி­யர்­க­ளிடம் “நாளை கல்­யாண வீட்­டுக்கு நானும் அழ­காகச் செல்ல வேண்டும் தானே எனவே, அதி­கா­லை­யி­லேயே பார்­ல­ருக்கு சென்று மேக்கப் போட்­டுக்­கொண்டு தான் கல்­யாண வீட்­டுக்குச் செல்ல இங்கு வருவேன்.

    அப்ப தான் எனக்கு ஈஸீ­யா­க­வி­ருக்கும்.” என்று கூறி மிகுந்த மகிழ்ச்­சி­யுடன் வேலைத்­த­லத்­தி­லி­ருந்து விடை­பெற்று வீட்­டுக்குச் சென்றாள்.

    சத்திலுள்ள அழ­குக்­கலை நிலை­ய­மொன்­றுக்கு அலங்­காரம் செய்­து­கொள்­வ­தற்­காக சென்றாள். அங்கு அழகுக் கலை நிபு­ணரின் உத­வி­யுடன் அழ­காக உடுத்தி, வழ­மைக்கு மாறான புதிய சிகை­ய­லங்­காரம், ஒப்­பனை அலங்காரம் என்று தன்னை வடி­வ­மைத்­துக்­கொண்டாள்.

    பின்-னர் தான் அழ­காக இருக்­கின்­றேனா? என்று கண்­ணாடி முன்­னின்று தன்னைத் தானே ரசித்து பெரு­மிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்­தாக அமையப் போகின்­றது என்­பதை தினுஷா சிறிதும் எதிர்பார்த்திருக்­க­வில்லை.

    அணையப் போகும் விளக்கு பிர­கா­ச­மாக எரி­வது போல் அந்த ஆடை, அலங்­கா­ரங்­களில் ஒரு தேவ­தையைப் போல் பார்ப்­ப­தற்கு அழ­காகக் காட்­சி­ய­ளித்தாள் தினுஷா.

    ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் அன்­றைய தினம் தினு­ஷா­வுக்கு பகுதி நேர வேலை (Half Day)என்­பதால் அங்கு தனக்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த வேலை­களைச் செய்து முடித்து விட்டு பிற்­பகல் 12.00 மணி­ய­ளவில் சக ஊழியர்களுடன் இணைந்து சந்­த­மா­லியின் திரு­மண வைப­வத்­துக்கு செல்­வது அவ­ளு­டைய நோக்கமாகவிருந்தது.

    எனவே, அழகுக் கலை நிலை­யத்­தி­லி­ருந்து நேராக ஆடைத் தொழிற்­சா­லைக்கு காலை 7.30 மணி­ய­ளவில் வந்­த­டைந்தாள்.

    தினு­ஷாவைக் கண்­டதும் சக ஊழி­யர்கள் அவ­ளு­டைய அழகில் மெய்­ம­றந்து பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். எனினும், அவள் அருகில் வந்­த­வுடன் அதைச் சிறிதும் வெளிக்­காட்­டாமல் ஒரு­வ­ரை­யொ­ருவர் பார்த்து கண்களால் சைகை காட்­டி­னார்கள்.

    தினு­ஷாவோ “நான் அழ­காக இருக்­கின்­றேனா? எப்­படி இருக்­கின்­றது என்­னு­டைய டிரஸ், மேக்கப், ஹெயார்ஸ்டைல் எல்லாம்? உங்­க­ளுக்­கெல்லாம் இன்று என்னை பார்த்தால் பொறா­மை­யா­க­வி­ருக்கும் என்று எனக்கு தெரியும்.” என்று ஒரு குழந்­தையைப் போல் கூறி மகிழ்ந்தாள்.

    அதற்கு சக ஊழி­யர்­களில் ஒருத்தி ” உண்­மைதான் இன்று நீ பார்ப்­ப­தற்கு ரொம்ப அழ­காக இருக்­கின்றாய். என்று அவ­ளு­டைய அழகை ரசித்­த­படி கூறினாள்.

    அதனைத் தொடர்ந்து மற்ற தோழி­களும் “ஆமாம் தினுஷா இன்று நீ ரொம்ப அழ­காக இருக்­கின்றாய் எங்கள் கண்ணே பட்­டி­ருக்கும் போல இருக்­கின்­றது” என்று கூறி­னார்கள்.

    இத­னி­டையே மற்­று­மொரு ஊழியர் “சரி, சரி இப்ப அவ­ளு­டைய அழகை பார்த்து ரசித்­தது போதும். இருக்­கின்ற வேலை­களை விரை­வாக முடித்தால் தான் சந்­த­மா­லியின் கல்­யா­ணத்­துக்கு நேரத்­துக்கு செல்ல முடியும்” என்று சற்று கடிந்­து­கொண்டாள்.

    அத­னை­த்தொ­டர்ந்து அனை­வரும் தமக்­கென்று ஒதுக்­கப்­பட்ட வேலை­களில் மும்­மு­ர­மாக ஈடு­படத் தொடங்­கி­னார்கள்.. அதன்­பின்னர் சரி­யாக மதிய உணவு நேர­மாகும் போது தமது வேலை­களை வெற்­றி­க­ர­மாக செய்து முடித்து விட்டு சந்­த­மா­லியின் திரு­மண வைப­வத்­துக்குச் செல்ல ஆயத்­த­மா­னார்கள்.

    ஆடைத் தொழிற்­சா­லையில் காணப்­பட்ட பெண்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்ட ஓய்வு அறைக்கு சென்று அனை­வரும் அணிந்து வந்­தி­ருந்த தமது ஆடை­க­ளையும்,அலங்­கா­ரங்­க­ளையும் மீண்­டு­மொரு முறை சீராக்கிக் கொண்­டார்கள்.

    எனினும், அவர்கள் அனை­வரும் விரை­வாக ஓய்வு அறையில் இருந்து வெளியில் வந்து விட்­டார்கள். தினுஷா மட்டும் ஓய்வு அறை­யி­லி­ருந்து வெளியே வரத் தாம­த­மானாள்.

    எனவே, சக ஊழி­யர்­களில் ஒருத்தி வெளியில் இருந்து “ஐயோ நீ இன்னும் உன்­னு­டைய அலங்­கா­ரங்­களை முடிக்­க­வில்லையா? நேர­மா­கின்­றது. சீக்­கி­ர­மாக வெளியில் வா” என்று பலத்த குரலில் கத்தி தினு­ஷாவை அழைத்தாள்.

    imagesஅதற்கு, தினுஷா” சரி, சரி கொஞ்சம் பொறுங்கள். எல்லாம் முடிந்து விட்­டது. கொஞ்சம் லிப்ஸ்டிக் மட்டும் போட்­டுக்­கொண்டு வரு­கின்றேன் ” என்று கூறினாள். அது தான் தினுஷா பேசிய கடைசி ஓரிரு வார்த்­தைகள். அதற்குப் பிறகு வெகு நேர­மா­கியும் தினுஷா வெளியில் வரவே இல்லை.

    இத­னைத்­தொ­டர்ந்து ”இவள் என்ன செய்­கின்றாள். இவ்­வ­ளவு நேரம்? நீங்கள் அனை­வரும் இங்­கேயே இருங்கள் நான் உள்ளே சென்று தினு­ஷாவை அழைத்து வரு­கின்றேன்”. என்று சற்று கோபத்­துடன் ஓய்வு அறைக்குள் சக ஊழி­யர்­களில் ஒருத்தி நுழை­கின்றாள்.

    அப்­போது அங்கு அவள் கண்­ணெ­திரே தினுஷா தலையைப் பிய்த்­துக்­கொண்ட படியே மயங்கி கீழே வீழ்ந்தாள். அவ­ளுக்கோ! என்ன செய்­வ­தென்றே தெரி­ய­வில்லை.

    அதிர்ச்­சியில் வார்த்­தை­களும் ஒழுங்­காக வர­வில்லை. “ஐயோ அனை­வரும் சீக்­கி­ர­மாக இங்கே வாருங்கள் தினு­ஷா­வுக்கு என்ன நடந்­ததென்று தெரி­ய­வில்லை. மயங்கி கீழே வீழ்ந்து விட்டாள்.” என்று பலத்த குரலில் கத்தி தனது சக ஊழி­யர்­களின் உத­வியை நாடினாள்.

    அத­னைத்­தொ­டர்ந்து அவர்கள் அனை­வரும் “ஏன் இவள் இப்­படிக் கத்­து­கின்றாள்? தினுஷா நல்லா தானே இவ்­வ­ளவு நேரம் இருந்தாள் அவ­ளுக்கு திடீ­ரென என்ன நடந்­தது?” என்று சிந்­தித்­த­வாறே ஓய்வு அறையை நோக்கி படை­யெ­டுத்­தனர்.

    அங்கு தினுஷா சுய நினை­வி­ழந்து கீழே கிடந்தாள். எனவே இந்தச் செய்தி வெகு நேர­மாகும் முன்­னரே ஆடைத்­தொ­ழிற்­சா­லையை சுற்­றி­யுள்ள கிராம பகு­தி­க­ளுக்கும் பர­வி­யது.

    ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் மனித வள அபி­வி­ருத்தி சங்­கத்தை சேர்ந்த அதி­கா­ரி­களும் துரி­த­மாக தினு­ஷா­வுக்கு முத­லு­த­வி­களை அளிக்க முன்­வந்த போதும் அவை எதுவும் அவ­ளுக்கு பய­ன­ளிக்­க­வில்லை.

    இத­னைத்­தொ­டர்ந்து தினுஷா விரை­வாக கண்டி பெரி­யாஸ்­பத்­தி­ரிக்கு எடுத்துச் செல்­லப்­பட்டாள். எனினும், அவளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கும் போதே அவ­ளு­டைய உயிர் உடலை விட்டு பிரிந்­தி­ருப்­பதை வைத்­தி­யர்கள் உறு­திப்­ப­டுத்­தினர்.

    எனவே உதட்­டுக்கு சாயம் பூசிக்­கொண்­டி­ருக்கும் போதே தினுஷா மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்தமையானது அவ­ரு­டைய மர­ணத்தில் பல்­வேறு சந்­தே­கங்­களை வைத்­தி­யர்­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்கும் ஏற்­ப­டுத்­தியுள்ளன.

    ஆகையால், தினு­ஷாவின் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­குட்­ப­டுத்­திய வைத்­தி­யர்கள் அந்த அறிக்­கை­யினை வெளி­யி­டாத நிலையில் மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக உடற்­பா­கங்­களை இர­சா­யன பகுப்­பாய்­வு­க்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

    அது­மட்­டு­மின்றி, தினு­ஷாவின் மரணம் அழகுக் கலை நிலை­யத்தில் உப­யோ­கித்த இர­சா­ய­னப்­பொ­ருட்­க­ளி­னாலோ அல்­லது தினுஷா பயன்­ப­டுத்­திய அழ­கு­சா­தனப் பொருட்­க­ளி­னாலோ ஏற்­பட்ட ஒவ்­வாமை கார­ண­மாக ஏற்­பட்­டி­ருக்க வேண்டும் என்றே சந்­தே­கிக்­கின்­றனர்.

    எனவே, இச்­சம்­பவம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை கண்டி பொலிஸ் உப அத்­தி­யட்­ச­கரின் வழி­காட்­டு­தலின் கீழ் கண்டி பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

    அது­மட்­டு­மின்றி, தினு­ஷாவின் சகோ­தரி இச்­சம்­பவம் தொடர்­பாக கருத்து தெரி­வித்­தி­ருக்­கையில்,

    “என்­னோடு உடன் பிறந்த சகோ­தரி என்று தினுஷா மட்­டுமே இருந்தாள். இன்று அவளும் எனக்கு இல்லை. நான் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு விட்டேன்.

    அவ­ளுக்கு எங்­க­ளுக்கு தெரிந்­த­வ­ரையில் உயிர் போகும் அள­வுக்கு பெரிய நோய் என்று எதுவும் இருக்­க­வில்லை.

    எனது தங்கை 4 வரு­டங்­க­ளாக இந்த ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் தான் பணி­பு­ரிந்து வரு­கின்றாள். அவள் கண்டி பிர­தே­சத்­தி­லுள்ள ஒரு இளை­ஞனை தான் காத­லித்தும் வந்தாள் எங்கள் வீட்­டாரும் அவ­ளு­டைய திரு­ம­ணத்­துக்கு சம்­மதம் தெரி­வித்தே இருந்­தார்கள்.

    அன்று அவ­ளுடன் தொழில் பார்க்கும் சகோ­தரி ஒரு­வரின் திரு­மண வைப­வத்­துக்கு செல்­வ­தாகக் கூறியே வீட்டி­லி­ருந்து அன்று அதி­கா­லை­யி­லேயே சென்றாள்.

    அப்­போது கூட ஏன்? இவ்­வ­ளவு நேரத்­துடன் செல்­கின்றாய்”? என்று நான் அவ­ளிடம் கேட்டேன். அதற்கு நான் தென்­னங்­கும்­புர பகு­தி­யி­லி­ருக்கும் சலூ­னுக்கு சென்று மேக்கப் போட்­டுக்­கொண்டு தான் செல்லப் போகின்றேன் என்று கூறினாள். எனக்கு அவ­ளு­டைய இழப்பை ஏற்­றுக்­கொள்ளும் மன­நி­லையே இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தாள்.

    மேலும், இத்­த­கைய சம்­ப­வங்கள் கடந்த காலங்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வந்­தமை குறிப்பிட்டத்தக்கது.

    மேலும் கடந்த சில வாரங்களாக அபா­ய­க­ர­மான ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டு அதி­கார சபையின் ஊடாக நாடு முழு­வதும் இயங்­கி­வ­ரு­கின்ற அழ­குக்­கலை நிலை­யங்­க­ளிலும் விசேட சோதனை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

    அது­மட்­டு­மின்றி, இச்­சோ­தனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது பாவ­னைக்­கு­த­வாத அழ­கு­சா­த­னப்­பொ­ருட்­களும், காலா­வ­தி­யான அழகு சாதனப் பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அபா­ய­க­ர­மான ஔட­தங்கள் கட்­டுப்­பாட்டு அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

    எனவே, இத்­த­கைய அழகுக்கலை நிலை­யங் கள் தொடர்­பாக மக்கள் விழிப்­புடன் இருக்க வேண்டும் என்­ப­துடன், முறை­யற்ற விதத்தில் நாடு எங்­கிலும் இயங்கி வரும் அழ­குக்­கலை நிலை­யங்கள் தொடர்­பாக உரிய சட்ட நடவ­டிக்­கை­கள் மேற்­கொள்ளப்பட வேண்டும்.

    மேலும் தன்னை அழ­கு­ப­டுத்­திக்­கொள்­வதில் மிகுந்த ஈடு­பா­டு­களைக் காட்டும் மக்கள் அழ­கோடு நின்­று­வி­டாது தமது ஆரோக்­கி­யத்­திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    பதிவு செய்யப்படாத அழ­குக்­கலை நிலை­யங்­க­ளையும், தரமற்ற அழகு சாத­னப்­பொ­ருட்­க­ளையும் நாடிச்செல்வது பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையையே இறுதியில் ஏற்ப டுத்திக்கொடுக்கும்.

    -வசந்த அருள்ரட்ணம்-

    அழகு நிலையத்துக்கு சென்று திரும்பிய யுவதி திடீர் பலி (படங்கள் இணைப்பு)

    Post Views: 13

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    நியூசிலாந்து : காதல் தோல்வியில் இருந்து இளைஞர்களை மீட்க புதிய பிரசாரம்- அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட

    March 29, 2023

    ஆபாச நடிகையுடன் தொடர்பால் ட்ரம்ப் கைதாவாரா? நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் உஷார் நிலை

    March 21, 2023

    நித்தியானந்தாவின் கைலாசா போல உங்களுக்கும் சொந்த நாடு வேண்டுமா? – இப்படி செய்தால் கிடைக்கும்

    March 6, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2015
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version